விளம்பி – தமிழ் புத்தாண்டு கும்ப ராசிபலன்

0
72

கும்பம் :

சுயநலம் நிறைந்தவர்கள் உலகில் பொது நலனோடு நடந்துக்கொள்ளும் கும்ப ராசியினருக்கு……….

இந்த ஆண்டு துவக்கம் முதலே குரு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் உங்கள் அடிப்படைத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வேலைப்பளு குறையும். வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சொந்த வீட்டிற்கு குடிபோகும் யோகம் உண்டு.

அக்டோபர் 4க்கு பிறகு குரு பத்தாம் வீட்டிற்கு செல்வதால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் தவறுகளை பெரிதுப் படுத்த வேண்டாம். வேலைசுமை அதிகரிக்கும். வேலையில் கவனம் தேவை. ஆண்டு இறுதியில் குரு அதிசார வகையில் லாபாஸ்தனத்தில் வந்து அமர்வதால் திடீர் யோகங்கள் கூடும்.

ஆண்டு முழுவதும் சனிபகவான் லாபாஸ்தானத்தில் அமர்வதால் வருமானம் உயரும். எல்லா வேலைகளையும் விரைந்து செய்து முடிப்பீர்கள். பெரிய பதவிகள், செல்வாக்கு கூடும். அழகும் இளமையும் கூடும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத்துவங்குவீர்கள். உங்கள் பேச்சு சாதுர்யத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கப்பெரும். வீடுகட்டும் பணி நிறைவடையும், சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. சுய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கும். மாற்று மொழி, இனத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

பிப்ரவரி 12வரை ராகு 6ம் வீட்டிலும், கேது 12ம் வீட்டிலும் அமர்வதால், திடீர் பிரயாணங்கள், அலைச்சல்கள் இருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வழக்குகள் வெற்றி பெறும்.

பிப்ரவரி 13முதல் ஆண்டு முடியும் வரை கேது லாப வீட்டிலும், ராகு ஐந்தாம் வீட்டிலும் செல்வதால் திடீர் யோகம் உண்டு. சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனை தீரும். பிள்ளைகளால் வீண் அலைச்சல், செலவுகள் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்றும் யோகமும் உண்டு.
மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை செவ்வாயும் கேதுவும் சேர்ந்து 12இல் அமர்வாதால் சுப செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் அலைச்சல், டென்சன் அதிகரிக்கும்.
ஆணி மாதம் முழுவதும் சுக்கிரன் 6ம் வீட்டில் அமர்வதால் சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பண பற்றாக்குறை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சாதாரண விசயத்திற்கு எல்லாம் கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.
தொழிலில் சூழ்நிலையை அறிந்து புதிய முதலீடுகளை செய்யுங்கள். கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்த வேண்டாம். பங்குதாரர்கள் தொல்லைக்கொடுப்பார்கள். புதிய வாடிக்கையாளர்கள், புதிய ஒப்பந்தங்கள் போன்ற முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களிடன் எச்சரிக்கை தேவை. லாபம் உண்டு.
வேலையில் அதிக பளு ஏற்படும். விரும்பத்தாகாத இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். சக ஊழியர்களின் சூழ்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள், ஆண்டு இறுதியில் சம்பள உயர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இந்த ஆண்டு துவங்குவதால், பேச்சு சாதுர்யத்தல் வெற்றிக்காண்பீர்கள், சிறு சிறு கடன்கள் அடைபடும், குழந்தைகள் வகையில் குதுகலம் கூடும். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும், வெற்றிப்பெறும் ஆண்டு இது.

பரிகாரம் : காமட்சியம்மணி வணங்குவது நன்மை தரும். பிரதோஷ வழிபாடு பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.

-ஜோதிட அமுதம்” ஜோதிமணி D.Astro
ஓம் ஜோதிட நிலையம், கரூர்.

1178total visits,1visits today