விருதை விழுதுகள் நிகழ்வுகள்

0
79

நல்லோர் ஆதரவுடன்
#விருதை_விழுதுகளின்
#அடுத்த_நகர்வு

முதல் நிகழ்வு:

இன்று 05/02/17 ஞாயிறு காலை 6 மணி முதல் வழக்கம் போல மரக்கன்றுகள் நடும் பணிகள் லட்சுமிநகரில் மாணிக்கவாசகர் தெருவில் நடந்தது….

10 மரக்கன்றுகள் நடப்பட்டன….
எண்ணிக்கையில் 245 மொத்தம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன….

இரண்டாம் நிகழ்வு:

விருதுநகர் முத்தமிழ் காலணியில் பொதுமக்கள் கேட்டதன் பேரில் அங்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொக்லைன் இயந்திரம் மூலம் சீமைக்கருவலமரங்களை விருதை விழுதுகள் அமைப்பு அகற்றியது….

மூன்றாவது நிகழ்வு:

விருதுநகர் லட்சுமி நகர் பகுதிகளில் சீமைக்கருவலமரங்களின் அடர்த்தி மிகமிகமிக அதிகம்…..
அதனால் மதியம் 2.30 முதல் மாலை 6.15 வரை இரண்டு தெருக்களில் பாதி அளவு மட்டுமே அகற்ற முடிந்தது….

இன்னும் லட்சுமி நகரில் அகற்ற வேண்டிய சீமைக்கருவல மரங்கள் மிகமிகமிக அதிகமாக உள்ளன……

சகோதரர் Pandu Rangan பொக்லைன் இயந்திரத்தையும் ஓட்டுநர் வசதியையும் ஏற்படுத்தித் தர  மற்றும் Santhanathan Sankaralingam அண்ணா டீசல் செலவுகளை ஏற்றுக்கொண்டனர்….

சீமைக்கருவல மரங்கள் நிலத்தினுள் மீட்டர் கணக்கில் ஊடுருவி பரவி கிடப்பதை கண்கூடாக கண்டோம்….
பொக்லைன் இயந்திரம் திணறும் அளவிற்கு அவை ஆழமாக வேரூன்றி உள்ளன….

சுழற்சி முறையில் காலை மணி முதல் மாலை 6 மணி வரை விருதை விழுதுகளின் தோழர்கள் பணியாற்றினர்….

இன்னும் லட்சுமி நகர் பகுதிகளில் அகற்ற வேண்டிய சீமைக்கருவல மரங்கள் மிகமிகமிக அதிகமாக இருப்பதால் வார வேலைநாட்களிலும் பொக்லைன் இயந்திரம் தருவதாக தம்பி பாண்டுரங்கன் கூறியுள்ளார்…..

சீமைக்கருவலமரங்களை அகற்றச் சென்ற போது மக்களிடையே விழிப்புணர்வு காண முடிகிறது…..

தயவுசெய்து இளைஞர்கள் அந்தந்தப் பகுதிகளில் குழுவாய் கூடி சீமைக்கருவலமர அழிப்பதில் ஈடுபட வேண்டுகிறேன்….

ஜல்லிக்கட்டு விளையாட்டு உரிமைக்காக போராடி வெற்றி கண்ட நம் இளைஞர்கள் கூட்டம் நினைத்தால் நிச்சயமாக
நம் நிலத்தை பாழாக்கும்….
நிலத்தடி நீரை அசுரனாக உறிஞ்சும்….
நம் நாட்டுமரங்களை வளரவிடாமல் தடுக்கும்….
விவசாயத்தை அழிக்கும்…
சீமைக்கருவலமரங்களை நம்தமிழ் மண்ணை விட்டு அகற்ற பெருமளவில் களமிறங்கினால் வேண்டும்.

#சீமைக்கருவலமரங்கள்_அழிப்புப்போர் இது
நம் கரங்கள்
நம் குரல்கள்
நம் எண்ணங்கள்
ஓன்றாகி ஜல்லிக்கட்டு கிடைத்தது போல…

வாருங்கள்
நம் செயல்களும் ஒன்றாகட்டும்….
சீமைக்கருவேல மரங்கள் அழிப்பு பற்றி பேசுவோம்….
பகிருவோம்….
களமிறங்குவோம்….

நம் பண்பாட்டை
நம் கலாச்சாரத்தை
நம் வீரவிளைட்டை
மீண்டும் இழக்காமல் இருக்க வேண்டுமானால் ….

நமது மண்ணும்
நீர்நிலைகளும்
விவசாயமும்
விவசாயிகளும்
நிலத்தடி நீரும்
காக்கப்பட வேண்டும்…..

ஆங்காங்கு கூடுங்கள்…..
பேசுங்கள்….
திட்டங்களைத் தீட்டுங்கள்…
களம் காணுங்கள்…
தாய்மண் உங்களால் மகிழட்டும்….

தமிழரின் அறிவும்
செயல்திறனும் பெரிது….என சீமைக்கருவலமரங்களை ஒழிப்பதன் மூலம் உலகிற்கு எடுத்துச்சொல்வோம்….

நன்றி

விருதை விழுதுகளின் சார்பாக
சின்னராஜா. க
சின்ராசு விருதுநகர்
விருதுநகர்
9786507007

774total visits,2visits today