விஸ்வரூப செய்திகள் 10/8-1

0
44

♈ 🇮🇳    7am -10-8-2017-thursday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  விஸ்வரூபத்தின் உண்மை செய்திக்கு கிடைத்த வெற்றி-காவல்துறை உயரதிகாரிகள் அனைவருக்கும் நன்றி -உடல் தகுதிதேர்வில் முறைகேடு : மதுரையில் 3 போலீசார் சஸ்பெண்ட்

♈ 🇮🇳  பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு,அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், கோப்புகளை தாண்டி, களத்திற்கே கலெக்டர்கள் சென்று நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். ஏழைகளை எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு நாம் இன்று எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்துள்ளோம் என நினைத்து பார்த்துவிட்டு தூங்குங்கள் என்றும் மோடி தெரிவித்தார்

♈ 🇮🇳  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக எம்.பி தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது

♈ 🇮🇳  இன்று காலை சென்னை அப்பலோவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சென்னை திருவெற்றியூர் கலைஞர் நகரில் உள்ள நிவேதா வித்தியாலயா பள்ளி, ராயபுரம் பாட சாலா பள்ளி தாளாளரும் , விஸ்வரூபம் தங்கை திருமதி .ராஜேஸ்வரி அன்பழகன் அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் குணம் அடைய இறைவனை விஸ்வரூபம் வேண்டுகிறது

♈ 🇮🇳  குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், தனது வெற்றி சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி என்று ட்விட்டியுள்ளார். இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் ராஜதந்திரத்திற்கு முதல் அடி கிடைத்துள்ளது

♈ 🇮  புதுச்சேரி: தொழிலதிபரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான தயாளன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

♈ 🇮🇳  துபாய்: விசா இல்லாமல் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கர்த்தாருக்கு இனி சென்று வர முடியும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

♈ 🇮🇳  வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது

♈ 🇮🇳  ரேஷன் கார்டு, பான் கார்டுகளைத் தொடர்ந்து வாக்காளர் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது-விஸ்வரூபம்

♈ 🇮🇳  கிணற்றுக்கு விலை 1.50 கோடி.. ஓபிஎஸ்ஸை எதிர்த்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் போராட்டம்

♈ 🇮  திருவள்ளூர்: ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

♈ 🇮  இன்று நாடு முழுவதும் குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்

♈ 🇮  பி.ஆர்க்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

♈ 🇮  இன்று அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் பழனிசாமி

♈ 🇮  ஆக-10: பெட்ரோல் விலை ரூ. 69.35, டீசல் விலை ரூ.59.80

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

401total visits.