விஸ்வரூப செய்திகள் 12/5-2

0
26

♈🇮🇳 🌴 *1pm-12-5-2017-friday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*
♈🇮🇳 🌴 பேய் கல்லறையில் இருந்து வருகிறதா? பேய் பெங்களூரு சிறையில் இருந்து வருகிறதா?- இளங்கோவன்

♈🇮🇳 🌴 இந்திய பிரதமர் மோடி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சீன நீர்முழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுத்துள்ளது

♈🇮🇳 🌴 வாரணாசி- கொழும்பு இடையே விமான சேவை வரும் ஆகஸ்ட் முதல் துவங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 இலங்கை: இந்திய உதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனை திறப்பு

♈🇮🇳 🌴 கோடநாடு காவலாளி கொலை: சிறையில் அடையாள அணிவகுப்பு

♈🇮🇳 🌴 தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு

♈🇮🇳 🌴 சென்னை தி.நகரில் தனியார் ஓட்டலுக்கு சீல் வைப்பு

♈🇮🇳 🌴 லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் சரோஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார். நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று அவர் கூறியுள்ளார். மேலும் சுப்பிரமணியத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தி உள்ளார்.

♈🇮🇳 🌴 ராமேஸ்வரம் அருகே 4 இலங்கை அகதிகள் மீட்பு

♈🇮🇳 🌴 வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த ஆம் ஆத்மி சவாலுக்கு தயார்: தேர்தல் ஆணையம்

♈🇮🇳 🌴 கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் : திருமாவளவன் தகவல்

♈🇮🇳 🌴 போக்குவரத்து தொழிலாளர்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

♈🇮🇳 🌴 பிளஸ் 2 தேர்வு எழுதிய 85 கைதிகள் தேர்ச்சி

♈🇮🇳 🌴 சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

♈🇮🇳 🌴 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

♈🇮🇳 🌴 மேட்டூர் அணையின் நீர் இருப்பு சரிவு

♈🇮🇳 🌴 லஞ்ச புகார் குறித்து அமைச்சர் சரோஜா பதில் தர மறுப்பு

♈🇮🇳 🌴 பஞ்சாபில் இரண்டு பிரிவினருக்கு இடையே நிலத்தகராறு: 2 பேர் சுட்டுக்கொலை

♈🇮🇳 🌴 முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறந்தநாள் வாழ்த்து

♈🇮🇳 🌴 யங் இந்தியா பத்திரிகை சொத்து வழக்கில் திருப்பம். சோனியா, ராகுலை ஐடி அதிகாரிகள் விசாரிக்க கோர்ட் அனுமதி

♈🇮🇳 🌴 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார் நடிகர் விஷால் . 7 ஆண்டுகளாக திரைப்பட விருதுகள் வழங்கப்படாமல் உள்ளது. சினிமா வெளியிடும்போது நிறைய பிரச்சனைகள் வருகின்றன. முதல்வரைச் சந்தித்த பின் நடிகர் விஷால் பேட்டி

♈🇮🇳 🌴 தமிழகத்தில் இன்று பிளஸ்2 முடிவுகள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. விருது நகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மாவட்டம் 16 வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் முதலிடத்தை விருது நகர் மாவட்டம் பெற்றது- 97.85% தேர்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் 2-வது இடம்- 96.77% தேர்ச்சி ஈரோடு மாவட்டம் 3-வது இடம்- 96.69% தேர்ச்சி தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடம்- 96.44% தேர்ச்சி நாமக்கல் மாவட்டம் 5-வது இடம்- 96.40% தேர்ச்சி சிவகங்கை மாவட்டம் 6-வது இடம்- 96.18% தேர்ச்சி நெல்லை மாவட்டம் 7-வது இடம்- 96.08% தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் 8-வது இடம்- 96.05% தேர்ச்சி தேனி மாவட்டம் 9-வது இடம்- 95.935% தேர்ச்சி கோவை மாவட்டம் 10-வது இடம்- 95.83% தேர்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் 11-வது இடம்- 95.75% தேர்ச்சி திருச்சி மாவட்டம் 12-வது இடம்- 95.50% தேர்ச்சி கரூர் மாவட்டம் 13-வது இடம்- 94.96% தேர்ச்சி மதுரை மாவட்டம் 14-வது இடம்- 93.61% தேர்ச்சி பெரம்பலூர் மாவட்டம் 15-வது இடம்- 93.54% தேர்ச்சி சென்னை மாவட்டம் 16-வது இடம்- 92.99% தேர்ச்சி சேலம் மாவட்டம் 17-வது இடம்- 92.89% தேர்ச்சி திண்டுக்கல் மாவட்டம் 18-வது இடம்- 92.80% தேர்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் 19-வது இடம்- 92.47% தேர்ச்சி தருமபுரி மாவட்டம் 20-வது இடம்- 92.23% தேர்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் 21-வது இடம்- 92.16% தேர்ச்சி நீலகிரி மாவட்டம் 22-வது இடம்- 92.06% தேர்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் 23-வது இடம்- 91.84% தேர்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் 24-வது இடம்- 88.85% தேர்ச்சி திருவாரூர் மாவட்டம் 25-வது இடம்- 88.77% தேர்ச்சி அரியலூர் மாவட்டம் 26-வது இடம்- 88.48% தேர்ச்சி நாகை மாவட்டம் 27-வது இடம்- 88.08% தேர்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் 28-வது இடம்- 88.02% தேர்ச்சி திருவள்ளூர் மாவட்டம் 29-வது இடம்- 87.57% தேர்ச்சி விழுப்புரம் மாவட்டம் 30-வது இடம்- 86.36% தேர்ச்சி வேலூர் மாவட்டம் 31-வது இடம்- 84.99% தேர்ச்சி கடலூர் மாவட்டம் 32வது இடம் 84. 86 % தேர்ச்சி. கணித பாடத்தில் கடந்த ஆண்டைவிட சென்ட்டம் அதிகரித்துள்ளதால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் 0.5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

♈🇮🇳 🌴 இங்கிலாந்து டிவி மற்றும் மீடியாக்களில் கடந்த சில மணி நேரமாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. கடலில் சென்று கொண்டிருக்கும் படகில் சுறா மீன் மீது ஒருவர் நிர்வாணமாக படுத்திருக்கும் புகைப்படம் தான் அது. சுறா மீனுடன் உடலுறவு செய்வது போன்று காணப்படும் அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் அந்நாட்டு மீடியாக்கள் பரபரப்பில் உள்ளன. இந்த நிலையில் சுறா மீன் மேல் படுத்திருப்பவர் முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் போல் இருப்பதாக தகவல்கள் வெளிவரவே, அனைவரும் அவரை காய்ச்சி எடுத்தனர்.ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை என்றும், அந்த புகைப்படத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். இதேபோல் இன்னும் ஒருசிலர் அந்த புகைப்படத்தில் இருப்பது தாங்கள் இல்லை என்று விளக்கம் கொடுத்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த உண்மை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

♈🇮🇳 🌴 துருக்கியை சேர்ந்த யாகிஸ் பெக்டெ எனும் சிறுவன் பிறந்து 18 மாதங்கள் ஆன நிலையில் சிறுவனின் எடை 31 கிலோவாக உள்ளது

♈🇮🇳 🌴 ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினிகாந்த்:புகைப்படம் எடுக்க யுனிக் பார்கோடு அடையாளை அட்டை

♈🇮🇳 🌴 ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதா?அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்!

♈🇮🇳 🌴 ஈழப்படுகொலையின் நினைவேந்தல்:மே-17 இயக்கம் அழைப்புச் செய்தி

♈🇮🇳 🌴 போயிங் நிறுவனம் தனது புதிய 737 மேக்ஸ் விமானத்தின் என்ஜினில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளால் அதன் சோதனையை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

♈🇮🇳 🌴 ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், அவர்களுக்கு தரப்பட்ட அண்மைய மருந்துகளால் அவர்கள் கிட்டத்தட்ட மற்றவர்களை போல சாதாரண ஆயுட்காலத்துடன் வாழ முடிவதாக தி லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தெரிவித்துள்ளது

♈🇮🇳 🌴 கனடாவை சேர்ந்த ஜஸ்டின் பீபரின் இசைக்காக இந்திய ரசிகர்கள் பல காலமாக காத்திருந்தார்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.டி.ஒய்.பாடீல் அரங்கில் புதன்கிழமை இரவு 8.15 மணிக்கு ஜஸ்டின் மேடையில் தோன்றியதும், ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. அரங்கம் முழுவதும் ஜஸ்டின், ஜஸ்டின் என்ற முழக்கம் நிறைந்தது.சாரி, கோல்ட், வாட்டர், ஐ வில் ஷோ யூ, வேர் ஆர் யூ நவ், பாய் பிரண்ட், பேபி போன்ற தனது பிரபல பாடல்கள் உட்பட பல பாடல்களை சுமார் இரண்டு மணி நேரம் இசைத்து அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்ட ஜஸ்டின், ‘நன்றி இந்தியா, மீண்டும் வருவேன்’ என்ற முத்தாய்ப்புடன் நிகழ்ச்சியை முடித்தார்

♈🇮🇳 🌴 ரஷியாவில் வலைப்பூ பதிவு ஒன்றில் தேவாலயத்தில் போக்கிமான் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்ட நபருக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மூன்றரை ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

366total visits.