விஸ்வரூப செய்திகள் 13/6-4

0
14

♈🇮🇳   *7pm-13-6-2017-tuesday*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳   கானா பாலாவால் A + B அனைத்து மக்களும் = C கிளாஸ் ஆக மாறினார்   -ஒவ்வொருவரும் சட்ட விதிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

♈🇮🇳   ஐந்து ஏக்கருக்குள் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. விதை பொருட்களை வாங்க மகாராஷ்டிரா அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பட்டில் தெரிவித்துள்ளார்

♈🇮🇳  பொதுத்தேர்வுகளில் கருணை மதிப்பெண் வழங்குவதை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் சிபிஎஸ்இ, 32 மாநில கல்வி வாரியங்களுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிபிஎஸ்இ எடுத்த முடிவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳   விஸ்வரூபதின் ஒரே ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவாரா சென்னை மாநகர காவல் ஆணையர் மதிபிற்கூரிய திரு.விஸ்வநாதன் அவர்கள் , தமிழக காவல்துறை இயக்குனர் மதிப்பிற்கூரிய திரு.ராஜேந்திரன் அவர்கள் – ஒரு குழந்தை ஒரு கடுமையான நோயின் தாக்குதலால் விரைவில் இறப்பதாக இருக்கும் தருவாயில் அந்த குழந்தை மாநகர காவல்துறை உயர் பொறுப்பில் அமர ஆசைப்பட்டால் மனமிறங்கி அந்த ஆசையை நிறைவேற்றிய அதிகாரிகள் உண்டு . விஸ்வரூபத்திற்கு அந்த ஆசையெல்லாம் இல்லை . ஒரு நாள் ஒருவன் ,அவன் பணக்காரன் நடுத்தரம் ஏழை என்றெல்லாம் பார்க்காமல் மனிதனாக பார்த்து காவல் நிலையத்தில் அவன் கால் வைத்தால் , அன்பு, பரிவு, பாசம் எல்லாம் காட்டாமல், அவனின் பிரச்னையை தீர ஆராய்ந்து எந்த வித உள்நோக்கம் இல்லாமல் , பிரதிபலன் பாராமல் , வழக்கின் தன்மையை பொறுத்து நேர்மையாக விசாரணை நடத்தி , சி எஸ் ஆர், எப் ஐ ஆர் பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறாக பொய் வழக்கு கொடுப்பவருக்கு நிச்சயம் தண்டனை பெற்று தர வேண்டும் .ஜாதி, மதம், இனம் , மொழி , கட்சிக்காரன் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு யாராவது கூட்டத்தை கூட்டி அலைப்பறை செய்தால் கடமை தவறாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றபிரிவு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து துறை , சைபர் கிரைம் என எந்த பிரிவாயிருந்தாலும் சிறப்பாக ஒருநாள் பணியாற்ற வேண்டும் என்பதே விஸ்வரூபதின் கோரிக்கை

♈🇮🇳   சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு பொது மக்கள் சார்பாக விஸ்வரூபத்தின் வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் . முதல் செய்தி டைப் செய்யும்போது நண்பர் ஒருவருடன் அலைபேசியில் பேசிய போது சென்னை மாநகர காவல் நிலையங்களின் இன்றைய செயல்பாடுகளை பற்றி குறிப்பிட்டார். ஒரு காவல் நிலையத்தில் இரவு கார் பிரச்சனை சம்மந்தமாக கிரைம் பிரிவுக்கு சென்றுள்ளார் ஒருவர். புகாரை பதிவு செய்யவில்லையாம் ஆய்வாளர். சரி புகாரை கொடுங்கள் நான் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கிறேன் என்றாராம். உடனே வழக்கு பதிவு செய்து ரசீதை கொடுத்தாராம் ஆய்வாளர். இரவு எத்தனை வழக்குகள் பதிவு செயப்பட்டது காவல் நிலையங்களில், காலை என்ன என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தகவல்களை பெறுகிறாராம் சென்னை ஆணையர் திரு விஸ்வநாதன் அவர்கள். காவல நிலையங்களுக்கு திடீர் விசிட் அடிக்கிறாராம். நிலுவையிலுள்ள வழக்குகளின் தேக்கத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளாராம் . அலைபேசியில் யார் அழைத்தாலும் அவர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறாராம் .

♈🇮🇳   வங்க தேசத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரிடர் நிகழ்ந்துள்ளது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி தற்போது வரை 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்கதேசத்தின் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது

♈🇮🇳   பெங்களூரு: இரும்பு தாது சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் குமாரசாமி கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

♈🇮🇳   அணு சக்தி நிறுவனத்தில் அதிகாரி வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..! மொத்தம் 150 பேர் தேர்வு செய்ய்ப்படுகிறார்கள். அதிகபட்சம் மெக்கானிக்கல் பிரிவில் 52இடங்களும், கெமிக்கல் பிரிவில் 12, எலக்ட்ரிக்கல் பிரிவில் 30,எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் 8, இன்மென்டேசன் பிரிவில் 8, சிவில் பிரிவில் 40 இடங்களும் உள்ளன. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்சி , எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15.06.2017ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான நேர்காணல் உத்தேசமாக ஜூலை மாதம் 10ந் தேதி முதல் 17ந் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும்,விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்.www.npcilcareers.co.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

♈🇮🇳   குவைத்தில் இந்தியப் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் அப்பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர்

♈🇮🇳   மும்பையில் மழையின் போது வீதிகளில் மேய்ந்த மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

♈🇮🇳   பல கோடி கடன் பெற்று இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மல்லையா நேரில் ஆஜராகியுள்ளார். லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இன்று மாலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது விசாரணைக்கு மல்லையா நேரில் ஆஜராகினார். முன்னதாக தான் குற்றமற்றவன் என கூறிவருவதாகவும், அதையேத்தான் இப்போதும் சொல்வதாகவும் தெரிவித்தார் மல்லையா. என்னை யாரும் திருடன் என அழைக்கவில்லை. எந்த நீதிமன்றத்தையும் தான் ஏமாற்றவில்லை என மல்லையா தெரிவித்தார். விசாரணை முடிவில் மல்லையாவை இந்தியா கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதிக்குமா இல்லையா என்பது தெரியும்

♈🇮🇳   கொஞ்சம் பல்லாவரம் பகுதி நன்மங்கலம் பக்கம் போக மாட்டீங்களா – பொன்னேரி அருகே நல்லூரில் 2 தனியார் குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நிலத்தடி நீரை உறிஞ்சியதாலும் முறையான அனுமதி பெறாததாலும் வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

♈🇮🇳    கத்தார் ஏர்லைன்ஸ் அல்லது கத்தாரில் பதிவு பெற்றுள்ள நிறுவனங்களின் விமானங்கள் மட்டுமே தங்களது வான் எல்லையில் பறக்க தடை விதித்துள்ளதாக சவுதி உள்ளிட்ட நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன. கத்தார் நாட்டுடனான உறவை துண்டித்துள்ள சவுதி அரேபியா, யு.ஏ.இ,  பஹ்ரைன்,  எகிப்து உள்ளிட்ட நாடுகள் தரை,  கடல் மற்றும் வான்வழி போக்குவரத்தையும் முடக்கியுள்ளன. இதனால் தனி தீவாக மாறியுள்ள கத்தார், அதிக பொருட் செலவில் ஈரான் வழியாக விமானப்போக்குவரத்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற நாட்டு விமானங்கள் தங்கள் வான் எல்லை வழியாக கத்தாருக்கு மற்றும் பிறநாடுகளுக்கு சேவையை தொடர்ந்து வழங்கலாம் என அந்நாடுகள் விளக்கமளித்துள்ளன

♈🇮🇳   காஷ்மீரில் கையெறிகுண்டு வீச்சு: 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம்

♈🇮🇳   கோவை: மாடுகளை ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

443total visits.