விஸ்வரூப செய்திகள் 19/6-3

0
46

♈🇮🇳   *6pm-19-6-2017-monday*  🇮🇳♈*  *vishwarubam news*

♈🇮🇳  வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளாரா, நரபலி நடந்துள்ளதா?- கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில்

♈🇮🇳  அரசு வக்கீல்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் தடை

♈🇮🇳  ஸ்டாலின் வழக்கு : சட்டசபை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

♈🇮🇳  விரைவில் மொபைலில் மின் கட்டணம் செலுத்தும் முறை : மின்துறை அறிவிப்பு

♈🇮🇳  நெல்லை அம்பாசமுத்திரத்தில் தாத்தாவை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

♈🇮🇳  கீழக்கரை பெண் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி

♈🇮🇳  பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் வரும் 23ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்

♈🇮🇳  இலங்கையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

♈🇮🇳  மதுரையில் 52 எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளில் போலீஸ் சோதனை

♈🇮🇳  திருவண்ணாமலை மாவட்டத்தில் அருங்காட்சியகம் உடனடியாக அமைத்திட வேண்டும் -எ.வ.வேலு கோரிக்கை—vishwarubam news

♈🇮🇳  பால் பொருட்களில் 338 மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் 135தரம் குறைந்தது என்று கண்டறியப்பட்டு, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 வழக்கில் கோர்ட்டு தீரப்பு வழங்கியுள்ளது. ரூ.20 ஆயிரம் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பால் தரம் குறைந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு மாநில அளவிலும், கலெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஒவ்வொரு மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது

♈🇮🇳  டாஸ்மாக் உபரி ஊழியர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்! ராமதாஸ்

♈🇮🇳  லண்டன் அடுக்குமாடி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு

♈🇮🇳  பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் விழாவில் பிரபல வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது—vishwarubam news

♈🇮🇳  காற்று சுழற்சியில் சிக்கி விமானம் குலுங்கியதில் 26பயணிகள் காயம் அடைந்தனர்.பெய்ஜிங்,சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் பிரான்சு தலைநகர் பாரிஸில் இருந்து சீனாவின் தென்மேற்கு நகரமான கன்மிங் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்த வான்பரப்பில் காற்று வெற்றிடம் அல்லது காற்று சுழற்சி ஆகியவற்றால் ஏற்படும் அதிர்வுகளால் விமானம் அதிர்ந்தது.”டர்புல்லன்ஸ்” எனப்படும் இந்த காற்று சுழற்சியில் சிக்கி விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதில் விமான பயணிகள் பலர் காயம் அடைந்தனர். மேல்லாக்கர்களில் மோதியும் லக்கேஜ்கள் பயணிகள் மீது விழுந்ததிலும் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.  இதில் 26 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களில் 4பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳  சிரிய ராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்காவி ராணுவ தலமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது

♈🇮🇳  டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியை சேர்ந்த ஜடின் என்ற 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவனான குலாமின் தங்கையை காதலித்து வந்துள்ளான்.தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திவிடுமாறு குலாம் பலமுறை ஐடினிடம் கூறியும் அவன் கேட்கவில்லை. இதனால், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்று, என் தங்கச்சியை காதலிக்காதே என்று சொன்னால் கேட்க மாட்டியா?’ என்று கேட்டுவிட்டு ஜடினின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளான்

♈🇮🇳  டெல்லி சுகாதாரதுறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் சி.பி.ஐ. விசாரணை. அவர் மனைவியிடம் பண மோசடி குற்றசாட்டு குறித்து விசாரணை செய்தனர்

♈🇮🇳  மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 4.4 ஆக பதிவு—vishwarubam news

♈🇮🇳  முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உடல்நலக் குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல், மன ரீதியான புத்துணர்வுக்காக 7 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்

♈🇮🇳  தமிழகத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட589 பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரி விதிக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜிஎஸ்டி விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.  ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டை பயிற்சி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

♈🇮🇳  ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாசலம் ஆலோசனை

♈🇮🇳  சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில்13 நக்சலைட்டுகள் கைது

♈🇮🇳  கேரளா, காசர்கோடு நகராட்சியின் துருதி வார்டில் உள்ள காசா தெரு உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் உள்ளது—vishwarubam news

♈🇮🇳  சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் 4ஏரிகளில் கடைசி நம்பிக்கையான புழல் ஏரியும் வேகமாக வறண்டு வரும் நிலையில் சென்னையில் விரைவில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரியான வீராணம் ஏரி வறண்டு போனது. கிருஷ்ணா கால்வாய் குடிநீரும் நின்றுபோனது. இதனால் பூண்டி,சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.3ஏரிகளும் வறண்டு போன நிலையில் புழல் ஏரியிலிருந்து மட்டும் தற்போது தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரியிலும் இன்னும் 4 நாட்களில் தண்ணீர் வறண்டு விடுமாம். இதனால் சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்படும் என கூறப்படுகிறது.இதையடுத்து கல்குவாரியில் தேங்கி இருக்கும் தண்ணீரை சுத்தகரித்து சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. இருந்தும் தண்ணீர் போதாத நிலையில்தான் உள்ளதாம்.

♈🇮🇳  பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக ரெயிலில் ஏற்றிச் சென்றனர்.  அதன்பின், ஓடும் ரெயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டனர். தண்டவாளத்தில் கிடந்த மாணவியை மீட்டு,பாட்னா அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியை சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் முதலில் மறுப்பு தெரிவித்தது. ஆறு மணி நேரத்துக்கு பிறகே அவரை மருத்துவமனையில் அனுமதித்தது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்தனர்

♈🇮🇳  தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறியது—vishwarubam news

♈🇮🇳  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் அப்பரன்டீஸ் ( தொழில் பழகுனர்கள்) முடித்தவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை அதிக அளவில் வேலைக்கு எடுத்து வருகிறார்கள். இதனை கண்டித்தும் தமிழகத்திலிருந்து என்எல்சியில் அபரன்டீஸ் முடித்து வேலைக்கு காத்திருப்போரை வேலையில் சேர்க்க வேண்டும் என கூறி திங்களன்று கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்

♈🇮🇳  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளுமேடு என்ற கிராமத்தில் உள்ள ரேசன் கடை  கடந்த இருபது நாட்களாக சரியாக திறப்பது இல்லை. பொதுமக்களுக்கு  எந்த பொருளும் வழங்கப்படுவதில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திங்களன்று கொள்ளுமேடு ஜமாஅத் ஒருங்கிணைப்பு குழு கமிட்டி மற்றும்  மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் பிரகாஷ் தலமையில்  ரேசன் கடை முன்பு முற்றுகை  போராட்டம் நடத்தினார்கள். இதில் தோழர் நஸ்ருதீன் அப்துல்   உள்ளிட்ட சுமார்  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்

♈🇮🇳  தேர்தல் ஆணையத்தின் உத்தரவை வரவேற்கிறேன் : விஜயகாந்த்

♈🇮🇳  பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,ஜல்லிக்கட்டிற்கு மாடுகள் வளர்ப்பது அதனை கொன்று தின்பதற்குதான் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறி உள்ளார். எனவே அவரை உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் கைது செய்ய வேண்டும்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் நாவை அடக்கி பேச வேண்டும்.  சீமான், திருமாவளவன் ஆகியோர் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். பிரதமர் மோடியின் அரசு 3 ஆண்டுகளாக தவறிய இந்திய பொருளாதாரத்தை சரியான பாதையில் நடத்தி செல்கிறது.இவ்வாறு அவர் கூறினார்—vishwarubam news

♈🇮🇳  ஊடகச் செய்திகளை வைத்து சட்டசபையில் விவாதிக்க முடியாது: சபாநாயகர் தனபால்

♈🇮🇳  மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்: வைகோ பேட்டி

♈🇮🇳  குவாட்டர் சாமி கோயிலில் ரத்தகாயங்களுடன் வாலிபர் பிணம்-கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் ஆறுமுகசாமி என்பவர் கோயில் ஒன்றை கட்டி குறிசொல்லி வருகிறார். இந்த கோயிலில் அம்மாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிமாக இருப்பார்கள். அப்போது ஆறுமுகம் குவாட்டர் குடித்து கொண்டு குறிசொல்லுவார். குறிசொல்லியவுடன் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த ஆடு, கோழிகளை பக்தர்கள் மத்தியிலே ரத்தம் சொட்ட வெட்டி தள்ளுவார். இந்த நிலையில் அவரது கோயில் உள்ளே ஜூன்19ந்தேதி திங்கள் காலை வாலிபர் ஒருவர் காதில் ரத்தம் வழிந்தவாறு உடலில் காயங்களுடன் பிணமாக கிடக்கிறார் என்ற தகவல் அந்தபகுதியில் உள்ளவர்களுக்கு காட்டுதீ போல் பரவியது. இதனை தொடர்ந்து சேத்தியாதோப்பு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் விசாரனையில் அந்த வாலிபர் சோழதரம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தைசேர்ந்த ஜெயராமன் மகன் குமாரவேல் (27) என்றும், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளாரா, நரபலி நடந்துள்ளதா? இல்லை வேறு காரணம் உள்ளதா என்று கோவிலின் பூசாரி ஆறுமுகசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

♈🇮🇳   குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த்தை தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக, பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது

♈🇮🇳   ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஆன்லைன் மூலமாகவும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது —vishwarubam news

♈🇮🇳    எம்.பி. சசிகலா புஷ்பா அரசியல் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறார் நடிகரும், பத்திரிக்கையாளருமான வாராகி. இப்படத்தில் இவரே சிவா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சசிகலா புஷ்பா வேடத்தில் நடிகை ஷிவானி குரோவர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ஒரு சாதாரண குடும்பத்து பெண் அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு அரசியலில் எப்படி படிப்பாடியாக முன்னேறுகிறார் என்பதே கதை என கூறும் வாராகி, ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பது இப்படம் சொல்லும் எனக் கூறி அதிர வைக்கிறார்.மேலும், இப்படத்திற்கு சட்டரீதியாக எதிர்ப்பு வந்தாலும், அதை சமாளிப்பேன், அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது எனக்கூறி அதிரடி காட்டுகிறார் வாராகி. நடிகர் விஷால் மற்றும் நாசர் தலைமையில் நடிகர் சங்கம் அமைந்த போது, அவர்களுக்கு எதிராக பல புகார்களை கூறியவர்தான் இந்த வராகி

♈🇮🇳   ஆஸ்த்ரியாவை சேர்ந்த தொலைகாட்சி தயாரிப்பு நிறுவனமான சி சீட் நிறுவனத்தின் புதிய மாடல் டிவி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சீ சீட் 262 என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய வைட் ஸ்கிரீன்4K டிவி என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்த மாடல் டிவி எல்-அகௌஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஆடியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதில் பத்து உயர் ரக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.20.16 அடி அகலம், 8.44 அடி உயரம், 800 நிட் பிரைட்னஸ் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 4Kமீடியா சர்வெர் சினிமா அனுபவத்தை வழங்க டிவியின் மானிட்டர் விசேஷ துணி கொண்டு  மூடியுள்ளனர். ரிமோட்டை கிளிக் செய்ததும் திரை தானாக அவிழ்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 800கிலோ.இந்திய மதிப்பில் இந்த டிவியின் விலை ரூ.3,53,91,285ஆகும். இதில் டிவியை பொருத்தும் கட்டணம் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.24,81,902.50 ஆகும்

♈🇮🇳   கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வினால் சுமார் 1 மணி நேரம் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை காண வந்த கைக்குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் வெளியில் நின்று அவதிப்பட்டனர்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

864total visits.