விஸ்வரூப செய்திகள் 21/8-2

0
26

♈ 🇮🇳    6.30pm -21-8-2017-monday*  🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  முத்தலாக் விவகாரம்: நாளை தீர்ப்பு

♈ 🇮🇳  அதிமுக பாஜகவுடன் இணையும் காரணத்தினால்தான் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார்களோ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதிமுகவின் இரு அணிகள் இணைய பாஜகவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் இருந்து வந்த குழப்பம் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் மேலும் குழப்பம் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. தினகரன் அணியின் நகர்வை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

♈ 🇮🇳  நயன்தாராவுடன் ‘நானும் ரெளடிதான்’ என்ற ஒரே படத்தில் நடித்துள்ள ராகுல்தாத்தா நயன்தாராவுக்கு எழுதிய காதல் கடிதம் ஒன்றை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த காதல் கவிதை என்னவென்று பார்ப்போமா!

 

கண்ணே நயன்… நீதான் என் குயின்…

நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்…

I Know நீ ஒரு lady lion…

ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain…

உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்…

அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்…

காதுமா…என் Face ஆயிடுச்சு Shine…நீதான் என் ஹீரோயின்…

 

இப்படிக்கு…

ராகுல் தாத்தா

♈ 🇮🇳  கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சிகளில் லைவ் நிகழ்ச்சி என்பதே மிகவும் அரிதாகவே இருக்கும். ஆனால் தற்போது எடுத்ததெற்கெல்லாம் லைவ் நிகழ்ச்சி தான். அதுவும் நேற்று லைவ் நிகழ்ச்சிகளால் கிட்டத்தட்ட பல தொலைக்காட்சிகள் பிசி. ஒரு பக்கம் இளையதளபதி விஜய்யின் ‘மெர்சல்’ ஆடியோ விழாவின் லைவ் ஒளிபரப்பு. இன்னொரு பக்கம் ஒரு செய்தி சேனலில் ‘ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கூறும் தமிழருவி மணியனின் லைவ் நிகழ்ச்சி. இன்னொரு பக்கம் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி. இன்னொரு பக்கம் சேப்பாக்கம் மற்றும் தூத்துக்குடி அணிகள் மோதிய டி.என்.பி.எல் போட்டியின் லைவ். இந்த இத்தனை லைவ் நிகழ்ச்சிகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால் பொதுமக்கள் ரிமோட்டுக்கு அதிக வேலை கொடுத்தனர்.இது போதாதென்று பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு. இன்று கமல்ஹாசன்,காயத்ரியை வெளியேற்றும் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியையும் பெரும்பாலானோர் ரசித்தனர்

♈ 🇮🇳  கொய்யா இலைகளை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். துளிராக இருக்கும் கொய்யா  இலைகள் 3 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு  சேர்த்து குடிக்கவும்

♈ 🇮🇳  அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டேன் எரிமலை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடிக்கும். தற்போது அந்த எரிமலை வெடிக்கும் அபாயத்தில் உள்ளது

♈ 🇮🇳  மத்தியில் மோடி அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு?

♈ 🇮🇳  வேலூர்: அரக்கோணம் அருகே சித்தேரியில் நடந்த ரயில் விபத்து வழக்கில் ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

♈ 🇮🇳  டெல்லியில் 12 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

♈🇮🇳   *vishwarubam*  ♈

410total visits.