விஸ்வரூப செய்திகள் 28/6-2

0
27

♈🇮🇳   *9.30am-28-6-2017-wednesday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳 நீதியரசர் கிருபாகரன் :ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் ஏன் சேர்க்க கூடாது?          நீயாயமான கேள்வி அதே சமயம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு ஊதியம் பெறுகின்ற (MLA, MP, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ) OAP ,முற்றும் ஒய்வு ஊதியம் பெறுகின்றவர்களின்  குழந்தைகள், மற்றும் பேரன் பேத்திகள் அரசு பள்ளியில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும், அவ்வாறு சேர்க்கவில்லை எனில் அவர்களுக்கு வழங்கும் சலுகைகளை பறிக்க வேண்டும் என்று நமது நீதியரசர் ஒரு கடுமையான உத்தரவை பிறப்பித்தால் நாடு நலம் பெறும், அதே சமயம் அவர் எத்தனையோ ஏழை மாணவ – மாணவியின் குடும்பத்தில் உள்ளவர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவார், தமிழக வரலாற்றில் நீங்க இடம் பெறுவார் என்பதில் ஐயம் இல்லை-அய்யா நீதிமான்களே நாங்க ரெடி நீங்க ரெடியா நீங்களும் அரசு ஊதியம்தானே வாங்குறீங்க ,உங்கள் பிள்ளைகள் பேரபிள்ளைகள் எங்கு படிக்கின்றனர் கூறமுடியுமா நீங்கள் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றீர்களா?அரசுபேருந்தில்மட்டும் பயணம் செய்வீர்களா?அரசுவழங்கும் ரேஷன் அரிசியை மட்டுமே சாப்பிடுவீர்களா?நீங்க ரெடினா நாங்களும் ரெடி ,அப்படியே அரசுப்பள்ளியில் படிப்பவர்களுக்கே அரசுவேலை அரசுகல்லூரிகளில் இடம் என்று ஒரு உத்தரவையும் உங்களால் போடமுடியுமா? இப்ப எல்லாம் உடனுக்குடனே ரிப்ளை வருதுங்க

♈🇮🇳 வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் *A.M.விக்கிரமராஜா,*“பேக்கரியில் சாதாரண ஜனங்க வாங்கிச் சாப்பிடும் பொருட்களுக்கு 18 சதவிகிதம் வரி. பத்துக்குப் பத்து சின்னப் பெட்டிக் கடையில் *கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டாலும் 18 சதவிகிதம் வரி* கட்டணும். ஆனால் *பீட்சா,பர்கருக்கு அதே 5 சதவிகித வரி* மட்டுமே என்றால், இந்த ஜி.எஸ்.டி- யால் பலன் பெருகிறவர்கள் யார்? என்று நாமே புரிந்துகொள்ளலாம்.*G S T* யின் மூலம் அரசுக்கு  எப்படியும் பணம்கொட்டப்போகிறது *அந்தத் தொகையில், 2 சதவிகிதத்தை மட்டும் தனியாக ஒதுக்கி, அதில் ஒரு சதவிகிதத் தொகையை, 60வயதுக்கு மேல் உள்ள நலிந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியமாக வழங்கவேண்டும்* மற்றொரு சதவிகிதத்தைக் கலவரம், போர் மற்றும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவேண்டும்.” என்றார் கோரிக்கையாக. தொடர்ந்து பேசிய அவர்,  “இங்கு நாம் பேசியபோது, இடையிடையே விளக்கம் கொடுத்த மத்திய அமைச்சர் குரல் உயர்த்திப் பேசினார். அவர் கோபப்பட்டதாக எண்ண வேண்டாம். அது அவரின் இயல்பு. அந்தளவுக்கு அவர் ஜி.எஸ்.டி-யில் ஷார்ப்பாக உள்ளார் என்று இது காட்டுகிறது. வணிகர்களாகிய நாமும், நமக்கான விஷயங்களில் ஷார்ப்பாக இருக்க வேண்டும்” என்றார்

♈🇮🇳 ஒருவரால் அவமானப்பட்ட பிறகு நான் இவ்வளவு நாளாக கொடுத்த செய்திகளும் வீண் ஆகிவிடுகிறதே. உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதாவது இருக்க.இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் எனும்போது உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு மீண்டும் செய்தி கொடுத்ததின் காரணம், அதிகாரிகள் கவனத்திற்கு சென்றால் இணையதளத்தில் என்ன பிரச்சனை என்று விரைந்து ஆய்வு செய்தால் பிரச்சனைக்கு முடிவு கட்டுவார்கள் என்பதனால். எல்லோருக்கும் இணையதளங்கள் உடனே திறந்து விடாது. பல தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. அதை புரிந்து கொள்ளாமல் ஒருவர் விஸ்வரூபம் பொய் செய்தி கொடுக்காதே என்கிறார். பொய் செய்திகள் கொடுப்பது என் வேலையல்ல.

உங்களை சொல்லவே இல்லை ஐயா..இதற்கு மேல் என்னை நீருபிக்க கஷ்டமாக உள்ளது..சத்தியமாக உங்களால் சில நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்..உங்களை கஷ்டபடுத்தியதற்கு..

மீண்டும் வருந்துகிறேன்…really very very sorry

 

♈🇮🇳 சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில்  திருமூலஸ்தானம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கைலாசநாதர் திருக்குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது மீண்டும் இன்று  காலை மேலும் 3 அடி உயரமுள்ள முருகன் ஐம்பொன் சிலை இன்று காலை கிடைத்துள்ளது

♈🇮🇳 தூத்துக்குடி அரசு பள்ளி அவலம்…!!!!!!!!!!!!! மாவட்ட ஆட்சிதலைவர் பார்வைக்கு,….தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் குடுமிபிடி சண்டையால் சீரழியும் அவலம்…அந்த பள்ளியில் பணிபுரியும் தையல் ஆசிரியை தலைமை ஆசிரியரின் ஆசிருடன் மதிய உணவு இடைவேளையில்( 12.40-1.10) சில   ஆசிரியைகளுடன் சேர்ந்து  தினமும் தனி அறையில் மதப்பிரச்சாரம் செய்து வருகிறார் சில ஆசிரியைகள் தங்களுக்குள் கோஷ்டி அமைத்து ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும் பொறாமையுடன் செயல்பட்டு கல்வி கற்றுக்கொடுப்பதை விட பகையை கற்றுக்கொடுப்பதில் முன்னிலையில் உள்ளார்கள்.RTI யில் தகவல் கேட்டால் தர மறுக்கிறார்கள்.தலைமையாசிரியர்  சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பணிக்கு வருவதால்  தையல் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்.அங்கு பணிபுரியும் வாட்சுமேன் தலைமையாசிரியராக செயல் படுகிறார். இவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பதிவு.அ.பிரம்மா.திருநெல்வேலி

♈🇮🇳 பழைய குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க 2 நாட்களாக விதித்திருந்த தடை நீக்கப்பட்டது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 பொள்ளாச்சி குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க 2வது நாளாக தடை

♈🇮🇳 சபரிமலையில், ஆறாட்டு திருவிழா இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது; காலை, 9:15 மணிக்கு, தங்க கொடி மரத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுவார்

♈🇮🇳 பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி வரவேற்றனர்-மெலனியா அணிந்திருந்த ஆடை மதிப்பு ரூ. 1,39,180 ஆகும்

♈🇮🇳 ஆமிர் கானின் தங்கல் திரைப்படம் சீனாவில் கிடைத்த அபரிமிதமான வசூல் காரணமாக ரூ 2000 கோடியைத் தொட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 பிக் பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, #BigBossTamil என்னும் சமுதாய சீர்கேடு நிகழ்ச்சி உங்களுக்கு???? நல்லா இருந்த நாம நாசமா போறது எப்படி..சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். விஜய் டிவி #BiggBossTamil – சினிமால வாய்ப்பு இல்லாதவங்களுக்கான “நூறுநாள் வேலை திட்டம்”.

♈🇮🇳   வடகாடு அருகே விபத்தில் இருவர் பலி,ஒருவர் படுகாயம்-புதுக்கோட்டை அடப்பன்வயல்

♈🇮🇳 குடியரசுத் தலைவர் தேர்தல்: மீராகுமார் இன்று வேட்பு மனு தாக்கல்

♈🇮🇳 கடந்த சில வாரங்களாக திருச்சி மாநகரில் தொடர் வழிப்பறிக்கொள்ளை நடந்து கொண்டே இருந்தது. வழக்கம் போல் எவனோ வெளியூர் திருடன் திருச்சிக்குள் நுழைந்து விட்டான் என்கிற ரீதியில் சிட்டி போலிஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது. அடுத்த அடுத்தடுத்த நாட்களிலே வழிப்பறி நடப்பதை பார்த்து போலிஸ் அதிகாரிகளே அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் தான் அதிரடியாக 8 இடங்களில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 34பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன

♈🇮🇳 தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகள் படிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும்,கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியிலும் விண்ணப்பம் நேற்று வழங்கப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் டீன் டாக்டர் வசந்தாமணி விண்ணப்ப வினியோகத்தை தொடங்கிவைத்தார்.விண்ணப்ப படிவம் ஜூலை 7-ந்தேதி வரை வழங்கப் படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை செயலாளர், தேர்வுக்குழு, நம்பர் 162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புவதற்கு ஜூலை 8-ந்தேதி கடைசி நாள்

♈🇮🇳 1–ந்தேதி முதல் சரக்கு, சேவை வரிவிதிப்பு நடைமுறைக்கு வருவதால் பண வீக்கம் அதிகரிக்காது என்று அருண் ஜெட்லி கூறினார்

♈🇮🇳 ஜம்மு-காஷ்மீர்:அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது.இந்த ஆண்டுக்கான 40 நாள் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ரக்சா பந்தன் அன்று நிறைவு பெறுகிறது. போலீஸ், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் சுமார் 40,000பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

♈🇮🇳 திருவள்ளூர்: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இரண்டாம் நிலையில் கொதிகலன் குழாய் பழுதால் 600மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது

♈🇮🇳 புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. 200 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது

♈🇮🇳 உளுந்தூர்பேட்டையில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்  10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின

♈🇮🇳 ஒவ்வொரு முறையும் ஐடன் வில்லியம்ஸ் இந்தப் பாதையில் சைக்கிளில் செல்லும் போதும் இது நடைபெறும்.பறவை ஒன்றால் அவர் தாக்கப்படுவார். அது ஸ்டாஃபோர்டிற்கு அருகில் உள்ள பாதை, அதுவும் ஒரே இடத்தில் அவர் தாக்குப்படுவார்.அது காரையும், குழுக்களாக வரும்போதும் தாக்குவது இல்லை. நான் தனியாக இருக்கிறேன் என்பதால் தாக்குகிறது.அது பருந்து என்றும் அதன் நகங்கள் தனது ஜெர்சியில் இருக்கும் என்றும் ஐடன் கருதுகிறார்.ராணுவத்தைச் சேர்ந்தவரான ஐடன் தனது பாதையை மாற்றப்போவதில்லை என கூறுகிறார்.dono which country

♈🇮🇳 கூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது2.42 பில்லியன் யூரோ அபராதத்தை, ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ளது

♈🇮🇳 சீன சிறையில் அடைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்றவரான லியூவை புற்றுநோய் பாதிப்பு காரணமாக மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳 ஆளில்லா உளவு விமானங்களான கார்டியன் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பணம் செய்த நிலையில் இருநாடுகளும் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர மற்றும் நிலப்பரப்பு எல்லைகளைக் கண்காணிக்கும் பணிக்காக, 22 கார்டியன் ட்ரோன் வகை ஆளில்லா உளவு விமானங்களை வாங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இருக்கும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳  நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது செய்யது பீடி நிறுவனம். இதற்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. செய்யது பீடி நிறுவனம் முறையாக வரிசெலுத்தவில்லை என்று கூறி இன்று நெல்லை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 40 இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது

♈🇮🇳 மத்திய அரசு இந்திய வம்சாவழியர்களுக்கான பிஐஓ கார்டினை வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் எனப்படும் ஓசிஐ கார்டாக மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடுவினை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது

♈🇮🇳 கோவை: வால்பாறையில் கனமழை தொடருவதால் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 இந்திய நிர்வாக காஷ்மீர் என குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் அறிக்கையை மத்திய அரசு எப்படி ஏற்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்

♈🇮🇳 தங்கக்கட்டிக்காக பூச்சிகளை புழுக்களையும் அள்ளித்தின்ற சுற்றுலாப் பயணி-சீனாவின் யுனான் மாகாணத்தை நடைபெற்ற விநோத போட்டி-5 நிமிடத்தில் ஒன்றேகால் பூச்சி, புழுக்களை சாப்பிட்டு தங்கத்தை தட்டிச்சென்றார்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

 

800total visits.