விஸ்வரூப செய்திகள் 29/7-1

0
30

♈ 🇮🇳    8am -29-7-2017-saturday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  வனவர் வெட்டிக் கொலை ஹெல்மெட்டுடன் வந்த மூவர் கும்பல் வெறிச் செயல்-நெல்லை மாவட்டம் சிவகிரியில்

♈ 🇮🇳  அறிவியல் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்பாகும் . ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்-www.recruitnic@nielit.gov.in

♈ 🇮  புதுச்சேரி விமான நிலையத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு

♈ 🇮  சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

♈ 🇮  தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

♈ 🇮  போதை மருந்து விவகாரம்: நடிகர் ரவி தேஜாவிடம் 10 மணி நேரம் விசாரணை

♈ 🇮  குஜராத்தில் 44 காங். எம்.எல்.ஏ.,க்கள் கடத்தல்

♈ 🇮  மத போதகர் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

♈ 🇮  தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் முற்றிலும் சீரமைக்கப்படும்: மத்திய அரசு

♈ 🇮  இன்றைய(ஜூலை- 29) விலை: பெட்ரோல் ரூ.67.37, டீசல் ரூ.58.20

♈ 🇮  ஊட்டி அருகே கருங்குரங்கு கடித்து 4 வயது குழந்தை படுகாயம்

♈ 🇮  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது

♈ 🇮  லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின்போது பேசிய சுகாதாரத்துறை இணையமைச்சர், அனுப்பிரியா படேல், ”எலக்ட்ரோ ஹோமியோபதி,அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறை அல்ல; இதுதொடர்பான வகுப்புகளை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளோம். இந்த துறையில், டாக்டர் என கூறிக் கொண்டு மருத்துவம் செய்வதை, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று கூறினார்— விஸ்வரூபம்

♈ 🇮  லோக்சபாவில் நேற்று, உள்துறை இணையமைச்சர், ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசுகையில், ”பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்த பட்டியல் தயாரிக்க, தேவையான பணிகள் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக பல்வேறு துறைகளின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்த பட்டியல் தயாரிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்படும்,” என்றார்

♈ 🇮🇳 ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். ஆதார் தகவல்கள் முழுமையான அளவில் பாதுகாக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு தலின்படி, பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் பாதுகாப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான டிக்கெட் பெற ஆதார் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை; இந்த விவகாரத்தில், முடிவு எதையும் அரசு எடுக்கவில்லை–விஸ்வரூபம்

♈ 🇮🇳 லோக்சபாவில், நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறுகையில், ”ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமே, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், காப்பீடு வழங்கி வந்தன. நம் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு, காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில், அரசு இருந்தது. ஆனால், ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட நம் பாரம்பரிய மருத்துவத்திற்கும் காப்பீடு வழங்க, 15 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம், சித்தா, ஆயுர்வேதம் மருத்துவங்களுக்கு காப்பீடு வழங்க முடியும்,” என்றார்

♈ 🇮🇳 லோக்சபாவில், கார்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சர்,அர்ஜுன் ராம் மெக்வெல் கூறுகையில், ”கடந்த, மூன்று ஆண்டுகளில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட, 18 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ”இவை, மிக மோசமான நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ள விபரம் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கம்பெனிகள் விவகாரத்துறை, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார்

♈ 🇮🇳 நாகாலாந்தில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடங்கியது–விஸ்வரூபம்

♈ 🇮  மும்பையின் கோரேகான் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்–விஸ்வரூபம்

♈   ஷார்ஜாவில் இருந்து கடத்தல் கோவையில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்

♈ 🇮🇳  சென்னை : சேத்துப்பட்டு மங்களபுரம்9வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (36).இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, 4பேர் மடக்கி உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். புகாரின்பேரில்,சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில்,கீழ்ப்பாக்கம், ஓசான்குளம் பகுதியை ேசர்ந்த அஜித் (எ) பிள்ளை (21),சேத்துப்பட்டு புதிய பூபதி நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) அஞ்சான் (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் விஜயகுமாரை தாக்கி செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

364total visits.