விஸ்வரூப செய்திகள் 30/6-2

0
50

♈🇮🇳   *4pm-30-6-2017-friday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳   சென்னைக்கு குடிநீர் வழங்கி வந்த பூண்டி,புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டுவிட்டதால் போரூர் ஏரி தண்ணீரை சென்னைக்கு குடிநீராக விநியோகிக்க குடிநீர் வாரியம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம்,சோழவரம் ஆகிய ஏரிகள்தான் சென்னைவாசிகளின் தாகத்தை தீர்த்தது வந்தன. இந்த ஏரிகளில் இருந்து கிடைக்கும் நீரில் இருந்து ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர்,சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது முற்றிலும் காய்ந்து வறண்டு கிடக்கின்றன

♈🇮🇳   இரவு நேர ‘போக்குவரத்து நெரிசல் சத்தம் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது

♈🇮🇳   கதிராமங்கலம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கசிவை சரிசெய்யும் பணியில் ஒ.என்.ஜி.சி பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கசிவு ஏற்பட்டுள்ள குழாயில் இருந்து புகை வந்ததால் கிராம மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்

♈🇮🇳   திண்டிவனத்தில் தனியார் சட்டக்கல்லூரி அமைக்க அனுமதி அளிக்க கோரி வன்னியர் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் கல்லூரிக்கு அனுமதி வழங்காததால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது— vishwarubam news

♈🇮🇳  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள ஏரியூர் பகுதியில் மதுவில் போதைக்காக ரசாயனம் கலந்து பச்சையப்பன், பழனிசாமி, விஜி, உத்திரகுமார் ஆகியோர் கடந்த 28 ம் தேதி மது குடித்துள்ளனர். இதனால், உடல்நிலை மோசமடைந்து நேற்று(ஜூன்29) பச்சையப்பன் நேற்று இரவு மரணமடைந்தார்

♈🇮🇳   முருகவேல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழக பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு முறைக்கு மாணவர்கள் இன்னும் தயாராகாத காரணத்தினால் விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

♈🇮🇳   ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா ராம்கர்க் மாவட்டத்தில், 8 வயது  சிறுமியை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அந்த நபரை அடித்து கொன்றனர். இரண்டு பேரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது

♈🇮🇳   சென்னை சென்ட்ரல் ரயில் நிலையததிலிருந்து மைசூருக்கு கடத்தப்பட இருந்த 25 கிலோ வெள்ளி சிக்கியது. மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த தாமோதர்குப்தா இன்று சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து மைசூர் சென்றபோது அவரிடமிருந்து 25 கிலோ வெள்ளியை போலீசார் கைப்பற்றினர். ஸ்கேனிங் மெசின் மூலம் உடமைகளை பரிசோதித்த போது வெ்ளளி சிக்கியதாக தெரிகிறது— vishwarubam news

♈🇮🇳   *சுகன்யா *  என்னும் *25* வயது *கர்ப்பிணி  பெண்ணின்* குழந்தைப்பேறுக்கு  இரத்தம் தேவை  உள்ளது .. கர்ப்பிணி  பெண்ணின் *குழந்தை நலனை எண்ணத்தில்* கொண்டு *B NEGATIVE* இரத்தம் *1 UNIT* தேவைப்படுகிறது …தயவு செய்து சுற்றுப்பகுதியில் உள்ள *B NEGATIVE* இரத்த வகை நண்பர்கள் தாமாக முன்வந்து இரத்தம் தானம் செய்ய கேட்டுக் கொள்கிறோம் … இடம் ::  விஜயா மருத்துவமனை அத்தானிரோடு சத்தியமங்கலம்-நாள் ::01.07.2017 காலை 10.00 மணிக்குள் தொடர்புக்கு ::9962042444(சரவணன்)

♈🇮🇳 30.06.2017 Collector program 03.30pm Lorry owners and government officials – sand quarry website using training program at thuvakudi irrigation management training program institute ..plz cover …AD PRO Trichy

♈🇮🇳  நீதிமன்றத்தால் ஒருவருக்கு தண்டனை வழங்கிய பின்னரே அவரை குற்றவாளி எனக் கூற வேண்டும். அதுவரை அவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறுவதே நீதிமன்றத்தின் மரபு. சட்டத்தின் பார்வையில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னால் அக்குற்றத்திற்கு உண்டான சாட்சி மற்றும் குற்றம் செய்தவரின் நேக்கம் மற்றும் யாரால் அல்லது யாருடைய தூண்டுதலின் பேரால் மற்றும் யாரை, எந்த சூழ்நிலையில் அக்குற்றச் செயல் நடைபெற்றது என்பதனையும் அக்குற்ற செயலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் அக்குற்றச் செயலினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை மற்றும் குற்றம் செய்தவரின் வயது,பாலினம் மற்றும் இது போன்ற குற்றச் செயல்கள் தொடராமல் இருக்க வேண்டி போன்றவற்றை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்படும்— vishwarubam news

♈🇮🇳 *நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற தேனியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் கைது . கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் மடக்கி பிடித்தார்.    வாலிபரை மடக்கி பிடித்த பெண் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

♈🇮🇳 இதற்கு முன் 15லட்சம் பெற்று கொண்டு இந்த பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 130வது வார்டு பாமக சார்பில் நன்றி.! நன்றி.!! நன்றி.!!!சென்னை அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலில்  அர்ச்சகர்களாக நீண்ட காலமாக பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர்களாகவும் அதே சமயம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த  4பிராமணர்களுக்கு ஒரு பைசா கூட கையூட்டு பெறாமல் தலைமை அர்ச்சகர்களாக பதவி உயர்வு வழங்கிய நேர்மைக்கு சொந்தக்காரராய் திகழும் மதிப்பு மிகுந்த துணை ஆணையர் உயர்திரு. சிவக்குமார் அவர்களுக்கு 130வது வட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நன்றி.! நன்றி.!! நன்றி.!!!இவண் : சாஜாகுணா-விஸ்வரூபமும் பாராட்டுகிறது

♈🇮🇳   டி.எஸ்.பி., சிலை கடத்தலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,தலைமறைவாக உள்ள டி.எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்தார். இந்த வழக்கை பொன் மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருவதாகவும் விளக்கமளித்தார். தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது — vishwarubam news

♈🇮🇳   தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி.,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுதும் நடத்தப்படும். ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் உற்பத்தி பெருகும். விலைவாசி குறையும். பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

♈🇮🇳   பாரிசில் உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி கழகம்,சர்வதேச அளவில் இடம்பெயர்ந்தவர்கள் பற்றிய 2017 ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மெக்சிகோ நாட்டினர் (1.12 லட்சம்)2வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் நாட்டினர் (94,000) 3வது இடத்திலும் உள்ளனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களில் சீன நாட்டினர் 5வது இடத்தில் உள்ளனர். 2015 ல் 78,000 பேர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். 2015 ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் தாய் நாடுகளை விட்டு வெளியேறி,வெளிநாடுகளில் குடியேறி உள்ளனர். இது 2014 ம் ஆண்டை விட 3 சதவீதம் அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகமாக வெளிநாடுகளில் குடியேறி உள்ளனர். ஏறக்குறைய156 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது —vishwarubam news

♈🇮🇳   மதுரை ஐகோர்ட்டில் காரைக்குடி இளமாறன் என்பவர் தாக்கல் செய்த மனு:அனுமதி பெறாமல் இயங்கும் நீச்சல் குளங்களினால், உயிரிழப்பு ஏற்படுகிறது.பாலியல் பிரச்னைகள் ஏற்படுகின்றன எனக்கூறியிருந்தார். இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, அனுமதி பெறாத நீச்சல் குளங்களை மூடுவது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கை, ஜூலை 18 க்கு ஒத்திவைத்தது

♈🇮🇳   ஆன்டிகுவாவில் அசத்துமா இந்தியா: இன்று வெஸ்ட் இண்டீசுடன் 3வது மோதல்

♈🇮🇳 வேந்தர் மூவிஸ் மதன் சொத்துக்கள் முடக்கம்

♈🇮🇳 சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் ஆனித்தேரோட்ட விழா துவக்கம்

♈🇮🇳 ஜவாஹிருல்லாவுக்கு ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்

♈🇮🇳ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: லக்கானி

♈🇮🇳 திருவாரூரில் புதிதாக கட்டப்படும் டாஸ்மாக் கடை சூறை

♈🇮🇳 இந்திய எல்லைக்குள் சீன படையினர் நுழைய முயற்சி: வெளியுறவு அமைச்சகம்

♈🇮🇳 ஜிஎஸ்டி எதிரொலி : டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தம் — vishwarubam news

♈🇮🇳 திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

♈🇮🇳இன்ஜினியரிங் கல்வி கட்டணம் அதிகரிப்பு

♈🇮🇳 கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட எம்.எல்.ஏ- கலெக்டா் காதல் திருமணம் இன்று குமரி மாவட்டம் குமாரகோவிலில் நடந்தது. திருவனந்தபுரம் சப்-கலெக்டராக இருக்கும் டாக்டா்.திவ்யா ஐயர் ஐ.ஏ.எஸ்.க்கும் அருவிக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சபரிநாதனும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இரூவீட்டார் சம்மதத்துடன் இன்று காலை 10.15 மணிக்கு குமாரகோவில் முருகன் கோவிலில் கேரளா முன்னாள் முதல்வா் உம்மன்சாண்டி தலைமையில் நடந்தது

♈🇮🇳 விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முத்தழகு, மதுக்கடைகளை மூட கோரி போராடியவர். நேற்று இரவு 8 மணியளவில் வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முத்தழகுவை சராமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே முத்தழகு பரிதாபமாக இறந்தார். படுகொலை செய்யப்பட்ட முத்தழகு கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மதுரை இராஜஜி மருத்துவமனை முன்பு மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் தலைமையில் 200 பேர் கலந்து கொண்டனர்

♈🇮🇳   பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப பெரும் வரி 3 மாதத்துக்கு நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

♈🇮🇳   மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்

♈🇮🇳   வியாட்நாமில் ஐந்து வயது சிறுமி ஒருவர் குடிப்பதற்காக பால் எடுத்ததால், அச்சிறுமியின் வளர்ப்பு தாய் சிறுமியை கயிற்றில் கட்டி தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. — vishwarubam news

♈🇮🇳   இரவு நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சததம் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத் தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து     நெரிசலால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து சியோல் நேஷனல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.அதில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் சத்தத்தால் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக இரவுநேரத் தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிவோர் அல்லது தங்கியிருப்போர் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஒலி அளவு 55 டெசி பில்சுக்கு மேல் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் ஒலி அளவு 40டெசிபிலுக்கு மேல் இருக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இது தவிர இதய நோய்கள், மனநிலை பாதிப்பு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் போன்றவை உருவாகும்  என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2 லட்சத்து 6ஆயிரத்து ஆண்களின் சுகாதார காப்பீடு மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20 முதல் 59 வயது வரையினரிடம் 8 ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

♈🇮🇳   வடமேற்கு பசிபிக் கடற்பகுதியில் கடல் பிக்கில்ஸ் எனப்படும் வடிவமற்ற கொழகொழப்பான உயிரினம் அதிக அளவில் கரை ஒதுங்கியுள்ளது. இவை பைரொசோம்ஸ் என அழைக்கப்படுகின்றன – விஸ்வரூபம்

♈🇮🇳   ஐகியூ( நுண்ணறிவு திறன்)டெஸ்டில் உலகின் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டினை விஞ்சி லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவர் புதிய சாதனை படைத்துள்ளார்

♈🇮🇳  இங்கிலாந்து கோன்வாலிலுள்ள ஒரு  கிராமம்,மேத்தோடிஸ்ட் ஆலயம் வாங்குவதற்கு துபாயை ஆட்சி செய்கின்ற ஷேக் முகமுது பின் ரஷீத் அல் மக்டோம் உதவி செய்துள்ளார்— vishwarubam news

♈🇮🇳   சிக்கிம் மாநிலத்திலுள்ள நாது லா வழியாக செல்லும் மானசரோவர் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அதிகரி ஒருவர் தெரிவித்தார்

♈🇮🇳   பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியதாக 15 வாலிபர்களை மத்தியபிரதேச போலீசார் கைது செய்தனர்.பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியதாக குற்றம்சுமத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் ஆக்கியில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடியதாக உறவினர்கள் கூறவே வழக்கு வாபஸ் பெறப்பட்டது, நீதிபதியும் இவர்களை ஜாமீனில் விடுவித்துள்ளார்.இதற்கிடையே கந்த்வா சிறையில் தங்களை அடைத்த போது, மூத்த சிறைக்கைதிகள் ஒவ்வொருவராக கன்னத்தில் அறைந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் கழிவறை மற்றும் சாக்கடை சுத்தம்செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்—vishwarubam news

♈🇮🇳   உத்திர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் நடந்த திருமணத்தில் மணமகன் பாடலுக்கு நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

♈🇮🇳   நியூயார்க்: நடிகையும், மாடலுமான கைலி ஜென்னர் டாப்லெஸ்ஸாக படுத்துக் கொண்டு கஞ்சா குடிப்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
♈🇮🇳    ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களல் வைரலாக பரவி வருகிறது

♈🇮🇳  *vishwarubam*  🇮🇳♈

437total visits.