விஸ்வரூப செய்திகள் 4/5-2

0
33

♈🇮🇳 🌴 *6pm-4-5-2017-thursday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 உத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியில் சம்பவத்தன்று இரவு சந்திரசேகர் என்பவர் தனது இரண்டு சகோதரிகளுடன் சாட்டா கிராமத்திலிருந்து டேக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார்.பயணத்தின் போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயற்சி செய்ததுடன் சகோதரிகளை பாலியல் ரீதியல் துன்புறுத்த முயன்றுள்ளனர்.சந்திரசேகர் சகோதரிகளை பாதுகாக்க முயன்ற போது அவரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது

♈🇮🇳 🌴 யுனெஸ்கோவின் நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் பதவி காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

♈🇮🇳 🌴 வடகொரியாவின் கடற்கரை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 15 கப்பல்களில், அழுகிய நிலையில் நுற்று கணக்கில் உடல்கள் கிடக்கின்றன. இது மீனவர்களின் உடலாக இருக்கும் என ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது

♈🇮🇳 🌴 முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளா மறுக்கிறது என்பது தான் தமிழக அரசியல்வாதிகளின் புகார். ஆனால், அழிந்து போன ஒரு ஆற்றை கேரள கிராம மக்கள், 70 நாட்கள் தீவிரமாக பணியாற்றி உயிர் கொடுத்துள்ளனர் என்ற பாடத்தை தமிழக மக்கள் கற்க வேண்டும் என்பதை தமிழக அரசியல்வாதிகள் வலியுறுத்த மறுக்கின்றனர். கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ஓடுவது குட்டம்பெரூர் ஆறு. இது, பம்பா மற்றும் அச்சன்கோவில் ஆறுகளின் கிளை ஆறாகும். 10 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆறு12 கி.மீ., நீளம், 100 அடி அகலம், 6 – 20 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. ஆனால், 2005ம் ஆண்டு இந்த ஆறு 10 -15 மீட்டர் நீளத்திற்கு சுருங்கி விட்டது.சட்டவிரோத மணல் குவாரியால் ஆறு முழுவதும் விஷச்செடிகள் முளைத்து விட்டன. இத்துடன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, அழுகிய குட்டை போல் இந்த ஆறு மாறி விட்டது. ஒரு காலத்தில், இந்த ஆற்று நீரை பாசனம், குடிநீர் அல்லாத தேவைகள், கால்நடைகளுக்கான குடிநீராக புத்னூர் கிராம பஞ்சாயத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடும் வறட்சி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த ஆற்றை சுத்தப்படுத்த, 2013ம் ஆண்டே முடிவு செய்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அசுரத்தனமான பணி தள்ளிக் கொண்டே போனது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதி முடிவு எடுத்து கடந்த மார்ச், 20ம் தேதி இப்பணியை, 700 கிராம மக்கள், 70 நாட்களில் முடித்தனர். இப்போது அந்த ஆற்றில் தடையில்லாமல் தண்ணீர் ஓடுகிறது. 5 கி.மீ., சுற்றளவில் உள்ள கிணறுகளிலும் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நீர்நிலைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை கேரள கிராம மக்கள் கற்று தருகின்றனர். கற்றுக் கொள்ள தமிழக மக்கள் தயாரா?

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கத்தை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்தில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈🇮🇳 🌴 தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-சயன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் பல கேள்விகளுக்கு விடை பெற முடியவில்லை. உடல் நிலை தேறியதும் அவரை கைது செய்து விசாரிக்கும் போது இச்சம்பவத் தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தெரிய வரும். அதனடிப்ப டையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை அவர் வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்பபடையில் கோவை மதுக்கரையில் உள்ள அவரது மாமனார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு எந்த ஆவணங்களோ, பொருட்களோ கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்

♈🇮🇳 🌴 விஜயபாஸ்கர் மீது விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா செய்தது குறித்த ஆதாரம் உறுதியாகி உள்ளது

♈🇮🇳 🌴 பா.ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்து கொண்டால் நல்லது என சூலூர் அ.தி.மு.க.(அம்மா) எம்.எல்.ஏ. கனகராஜ் கூறி உள்ளார்

♈🇮🇳 🌴 வடகொரியாவினால் கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தோல்வியில் முடிவடைந்தது. குறித்த ஏவுகணை ரஷ்யாவை நோக்கி சென்றுள்ளமையினால் ரஷ்யா இந்த ஏவுகணையை வெடிக்க செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த ஏவுகணை வட கொரியாவின் உள்நாட்டு பகுதியில் 30 மைல்களுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருக்கும் போது வெடித்து சிதறியுள்ளது.ரஷ்யாவுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக KN-17 என்ற இந்த ஏவுகணையை ரஷ்யாவினால் வெடிக்க செய்துள்ளதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 இந்தியாவின் தூண்டிவிடும் அறிக்கைகள் மண்டல சுற்றுச்சூழலை பாதிக்கும்: பாகிஸ்தான்

♈🇮🇳 🌴 சோமாலியா நாட்டில் தீவிரவாதி என நினைத்து அமைச்சர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்

♈🇮🇳 🌴 ஒடிசாவில் பா.ஜனதாவை நாங்கள் மிகவும் சரியாக அடக்குவோம் என அம்மாநில முதல்-மந்திரி நவீன் பாட்நாயக் கூறிஉள்ளார்

♈🇮🇳 🌴 உத்தரபிரதேசத்தில் ரூ.13-க்கு மூன்று வேளை உணவு அன்னபூர்ணா கேன்டீன்’ திட்டம்

♈🇮🇳 🌴கரூர் வாங்கல்குப்புச்சி பாளையத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க போவதாக அதிமுக எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். போலீசாரிடம் மீண்டும் மனு வழங்க அறிவுறுத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் நெடுஞ்செழியனும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டார். தொடர்ந்து, செந்தில் பாலாஜி வாங்கல் பகுதியிலும், நெடுஞ்செழியன் நகராட்சி பூங்காவிலும் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்

♈🇮🇳 🌴 இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைத்த பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்

♈🇮🇳 🌴 ஒடிசா கடற்கரையில், அணுஆயுதங்களுடன் சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

♈🇮🇳 🌴 பாலசோர் மாவட்டத்தில் அப்துல் கலாம் தீவில் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது

♈🇮🇳 🌴 மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்தி: மின்வெட்டு தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏதுமில்லை. தற்போதைய மின் உற்பத்தி 15 ஆயிரம் மெகாவாட். மின்உற்பத்தி 17 ஆயிரம் மெகாவாட் ஆக உள்ளது. மின் தேவையை விட உற்பத்தி அதிகமாக உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 பொது வாழ்விலிருந்து விலக பிலிப் கோமான் முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

♈🇮🇳 🌴 சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மகிளா காங்கிரஸ் கட்சியின் நக்மா கூறியதாவது: மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி கறுப்பு பணத்தை மீட்கவில்லை. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும் போது, இந்திய ராணுவம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டும் எந்த பயனும் இல்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பிரச்னை உள்ளது. இதனால், பழையபடி, ஓட்டு சீட்டு முறைக்கு மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

♈🇮🇳 🌴 உத்தர பிரதேச மாநிலம் ஷரவஸ்தி மாவட்டத்தில், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் அங்கேயே மது அருந்தியுள்ளார். தொடர்ந்து மேடையில் நடனமாடிய பெண்களுடன் இணைந்து அவரும் சேர்ந்து நடமான துவங்கினார். பெண்கள் மீது ரூபாய் நோட்டுகளையும்வீசியுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்களது மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். தற்போது இது வேகமாக பரவி வருகிறது

♈🇮🇳 🌴 பைத்தியகரமான உத்தரவை பைத்தியகார நீதிபதிகள் பிறப்பித்துள்ளதாக கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்

♈🇮🇳 🌴 மத்திய அரசின் ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்துக்கு தமிழக அரசு வரைவு விதிகள் தயாரித்துள்ளது. அரசு தயாரித்த வரைவு விதிகள் தமிழக அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அரசின் விதிகள் குறித்து ஆலோசனை எதிர்ப்புகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

♈🇮🇳 🌴 மதுரை மாவட்டத்திற்கு வரும் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

♈🇮🇳 🌴 கன்னியாகுமரி அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

♈🇮🇳 🌴 மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

♈🇮🇳 🌴 சேலம் அருகே பேருந்தில் 31 சவரன் நகை திருட்டு

♈🇮🇳 🌴 சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பேரணி

♈🇮🇳 🌴 கொடநாடு கொலையில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை: சஜீவன்

♈🇮🇳 🌴 காஞ்சிபுரத்தில் 19 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஐஜி உத்தரவு

♈🇮🇳 🌴 சங்கரராமன் கொலை வழக்கில் யார் குற்றவாளி?: ஐகோர்ட் கேள்வி

♈🇮🇳 🌴 அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவிடம் காணொலி மூலம் விசாரணை நடத்த உத்தரவு

♈🇮🇳 🌴 கமல் வழக்கு இடைக்கால தடை :சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

♈🇮🇳 🌴 அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவிடம் காணொலி மூலம் விசாரிக்க உத்தரவு

♈🇮🇳 🌴 மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

♈🇮🇳 🌴 வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்வு

♈🇮🇳 🌴 சென்னையில் மருத்துவ மாணவர்கள் சமாதி கட்டும் போராட்டம்

1. ♈🇮🇳 🌴 கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி இளம்பெண் காயம்

♈🇮🇳 🌴ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம்

♈🇮🇳 🌴மடத்துகுளம் அருகே பொது கிணற்றில் விஷம் கலப்பு

♈🇮🇳 🌴பாலாறு பிரச்னையில் தலையிட முடியாது: மத்திய அரசு கைவிரிப்பு

♈🇮🇳 🌴அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசி கோரிக்கை ஏற்பு

♈🇮🇳 🌴வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து கமலுக்கு விலக்கு

♈🇮🇳 🌴வங்கித் துறை பங்குகளால் ஏறுமுகத்திற்கு திரும்பும் பங்குச்சந்தைகள்

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

363total visits.