விஸ்வரூப செய்திகள் 5/5-3

0
43

♈🇮🇳 🌴 *3pm-5-5-2017-friday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 சென்னை அம்பத்தூரில் பெண் கடத்தல் ??-புகார் கொடுத்தும் ஐந்து நாட்களாக கண்டுகொள்ளாத காவல்துறை -*T-1அம்பத்தூர் காவல்நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டி-அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் ரியானாபேகம் பெண்ணை கடத்தியது குறித்து -கடந்த 29/04/2017 அன்று இரவு ஊருக்கு சென்று வந்த (ரியானாபேகம்) வயது 27 என்ற பெண்னை காணவில்லை அவர்கணவர் (ராஜாமுகமது) அன்று இரவு மற்றும் மறுநாள் தேடி வந்திருக்கிறார் அவர் கிடைக்காத காரணத்தால் 1/05/2017 அன்று T-1 அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் அன்று முதல் இன்று வரை நாளை வாங்கள் நாளை வாங்கள் என்று கூறி என்னை அனுப்பிவிடுகிறார்கள் கடந்த 5 நாட்களாக T-3 அம்பத்தூர் காவலர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என் மனைவிக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் தெரியவில்லை ஆனால் ஒருவர் மீது சந்தேகம் இருக்கிறது அவர் ஒட்டேரியில் தான் இருக்கிறார் அவர்தான் கடத்தியிருப்பார் என்று நினைக்கிறேன் என் மனைவிக்கு எதாவது நடந்திருக்குமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது என்றும் காவல்துறைக்கு தெருவித்திருக்கிறேன் ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எதாவது நடக்கும்முன் என் மனைவியை கண்டுபிடித்து தாருங்கள் என்று காவல்துறையினரிடம் தினமும் கேட்டும் கொண்டிருக்கிறேன் என்று அவர் கண்ணீர் மல்க கூறுகிறார்

♈🇮🇳 🌴 உடுமலை அருகே மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி மக்கள் கோரிக்கை அடிப்படையில் கண்ணமனாயக்கனுரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .இந்த ஊராட்சிக்கு உட்பட எந்த பகுதியிலும் மதுக்கடை நடத்த இனிவரும் காலங்களில் அனுமதி வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது

♈🇮🇳 🌴 தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 45 நாளிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்படுகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். ஆண்டு தோறும் ஏப்ரல் 1 முதல் 45 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் கடைபிடிக்கப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்கம் காலம் என்பதால் 45 நாட்களிருந்து 61 நாட்களாக தடை காலம் உயர்த்தப்படுகிறது

♈🇮🇳 🌴 ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் : ஜனாதிபதி ஒப்புதல்

♈🇮🇳 🌴 காஷ்மீரில் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக 50 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன

♈🇮🇳 🌴 அ.தி.மு.க.,வில் தங்கள் கரங்கள் தளர்ந்து விடாமல் இருக்க, தமிழக முழுவதும் உள்ள கட்சியினரைக் கொண்டு, ஆங்காங்கே டி.டி.வி.பேரவையை அமையுங்கள் என, டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் கூறியுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும், டி.டி.வி.பேரவை அமைக்கப்பட்டு வருகிறது

♈🇮🇳 🌴 பஞ்சாப் மாநிலத்தில், பள்ளி மாணவன் ஒருவன், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, வகுப்பிற்கு செல்லும்போது, மொபைல் போன் எடுத்துச் செல்ல, பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே, பதக்கமும், பரிசும் வழங்கப்பட உள்ளது

♈🇮🇳 🌴 பிரபல பாட்மின்டன் வீராங்கனை சிந்துவுக்கு வீடு கட்டுவதற்காக 1000 சதுரடி நிலம் பரிசாக வழங்கினார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

♈🇮🇳 🌴 ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இரண்டு வங்கிகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்

♈🇮🇳 🌴 ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், பாஜக சார்பில் திரௌபதி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்

♈🇮🇳 🌴 எம்வி பிரிஸ்டன் கப்பலில் பணிபுரிந்த ஏழு இந்திய மாலுமிகள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சனிக்கிழமை இந்தியாவிற்கு திரும்புவார்கள் என எகிப்துக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 புதுச்சேரியில் நடைபெற்று வந்த முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு குறித்து நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால் கலந்தாய்வு நிறுத்தப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 நடிகர் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் 18 ஆம் தேதிக்கு பதில் 11 ஆம் தேதி வெளியாகிறது. விவேகம் படத்தின் டீசர் வெளியீடு குறித்து ட்விட்டரில் இயக்குனர் சிவா அறிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின

♈🇮🇳 🌴 அய்யாக்கண்ணு போல போராட விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறதா மத்திய அரசு.. ஹரி பரந்தாமன் கொந்தளிப்பு தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுதச் சொல்வது அவர்கள்மீது மீதான வன்முறை என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்

♈🇮🇳 🌴 அங்கீகரிக்கப்படாத மனைகளை வரைமுறைபடுத்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைபடுத்த ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நகராட்சிகளில் ரூ.60 ஆகவும், பேரூராட்சி, ஊராட்சிகளில் ரூ.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை அரசுக்கு செலுத்தினால் நிலம் வரைமுறைபடுத்தப்படும். வரையறை செய்வதற்கு வளர்ச்சி கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு, மாநகராட்சி பகுதியில் ரூ.600, சிறப்பு தேர்வுநிலை நகராட்சியில் ரூ.350, முதல்நிலை, 2ம் நிலை நகராட்சி பகுதிகளில் ரூ.250, பேரூராட்சிகளில் ரூ.150, ஊராட்சிகளில் ரூ.100 செலுத்த வேண்டும். விவசாய நிலத்தை மாற்ற வேண்டும் என்றால், வேளாண் இணை இயக்குநர் அனுமதி பெற வேண்டும். ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள், அரசு நிலம், கோயில் நிலங்கள், தொடர்ந்து வேளாண்மை செய்யும் பகுதிகள், உரிமம் இல்லாத காலி நிலங்களை மனையாக மாற்ற அனுமதியில்லை. கலெக்டர், நகர திட்ட இயக்கநர் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். மனை பகுதியில் உள்ள பாசன கால்வாய்களை சேதப்படுத்த கூடாது. 20-10.16 முன் பிரிக்கப்பட்ட மனைகளை வரைமுறைபடுத்தவும் அரசு ஒப்பு கொண்டுள்ளது. சந்தை மதிப்பில் 3 சதவீதம் செலுத்தினால் மனைகள் அங்கீகரித்து வரையறை செய்யப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 விமானத்தில் பறக்க தகுதியற்றவர்கள் பட்டியலை வெளியிட்டு புதிய விதிமுறைகளை விமான போக்குவரத்து துறை வகுத்துள்ளது.இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறியதாவது: புதிய விதிமுறைகள், மக்கள் கருத்து கேட்ட பின்னர் ஜூன் மாதம் முதல் வெளியிடப்படும். மக்களின் கருத்து கேட்க இணையத்தில் வெளியிடப்படும் என்றார்.விமான நிலையம் அல்லது விமானத்தில் பிரச்னை செய்தல் அல்லது இடையூறு செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் விமானத்தில் பயணிக்க தடை செய்யும் பட்டியலில் சேர்க்கப்படுவர். பயணிகளின் குற்றச்செயல்கள் 3 வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.முதல் வகை: இடையூறு செய்வது. இரண்டாவது வகையில், பாலியல் தொந்தரவு, உடல்ரீதியாக துன்புறுத்தப்படுவது. மூன்றாவது வகையில், கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் என பிரிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 மருத்துவர்களின் தொடர் போராட்டம்: சுகாதாரத் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

♈🇮🇳 🌴 மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடலூரில் அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்

♈🇮🇳 🌴 சரக்கு ரயில் போல அணிவகுத்து போகும் போது கிளம்பும் புழுதி படலம் புகை மண்டலமாக பறப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மக்கள் வசிக்க முடியவில்லை, சாப்பாட்டில் கூட புழுதிபடர்ந்து விடுகிறது. மேலும் செங்கல் சூளைகளில் இருந்து வெளிப்படும் புகையில் இருந்துவரும் கரித்தூகள் குடியிருப்பு வீடுகளில் விழுந்து காய்ச்சும் பால்கூட கருப்பாக மாறிவிடுகிறது. மேலும் தரமான செங்கல் இப்பொது தயாரிக்கப் படுவதில்லை. இதிலும் கலப்படம். ஆம் முன்பெல்லாம் ஆற்றோரப்படுகைகளில் மட்டுமே மண் எடுத்து தரமான செங்கல் சேம்பர்களால் பொதுப்பணித்துறை வாய்க்கால்கள், கரைகள், கிராம சாலைகள் எல்லாம் மோசமான அள்வில் சீரழிக்கப்படுகிறது.உதாரணமாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா பகுதிகளில் செயல்படும் செங்கல் சேம்பர்களின் செயல்பாடிகள் மேற்ப்படி ரகத்தை சேர்ந்தவை. இவைகளை கண்கானித்து நடவடிக்கை எடுக்க  வேண்டிய அதிகாரிகள் மெளனமாகவே உள்ளனர். பொது மக்கள் எத்தனை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை காரணம் சாராய வியபாரிகளிடம் போலீஸ் மட்டுமே மாமூல் வாங்கும் செங்கல் சேம்பர் முதலாளிகளிடம் இருந்து போலீஸ், கிராம அதிகாரி, தாசில்தார், மாவட்ட வருவாய்த்துறை வரையும் அதேபோல் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைதுறை என அனைவருக்கும் மாதாமாதம் மாமூல் கொடுப்பதால் எந்த துறையினரும் கண்டு கொள்ளவில்லை

♈🇮🇳 🌴 தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந்தேதி வணிகர் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 34-வது வணிகர் தின விழா, மாநில மாநாடு சென்னை தீவுத்திடலில் இன்று நடந்தது

♈🇮🇳 🌴 மாலேகாவ் குண்டுவெடிப்பு: தேசிய புலனாய்வு பிரிவு, மராட்டிய அரசு பதிலை கோரியது சுப்ரீம் கோர்ட்டு

♈🇮🇳 🌴 சென்குமார் டிஜிபியாக மீண்டும் நியமனம் செய்யப்படாததற்கு கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டன நோட்டீஸ்

♈🇮🇳 🌴 கராச்சியில் வடகொரிய தூதர் மற்றும் அவருடைய மனைவியை தாக்கிய பாகிஸ்தான் அதிகாரிகளால் பரபரப்பு

♈🇮🇳 🌴 மது- பிரியாணி கொடுத்து ஆள் பிடிக்கும் சசிகலா அணியினர் தீபா பேரவை கடும் குற்றச்சாட்டு

♈🇮🇳 🌴 திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பலியான நடிகை ரேகாசிந்து உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது தந்தை நேரில் வந்து ரேகா சிந்து உடலை பார்த்து கதறி அழுதார். நடிகையின் ஒரு கை, கால் துண்டாகி இருந்தது.
இதனைக் கண்டு திடுக்கிட்டார். எனது மகள் ஆடி காரில் வந்தார். விபத்து ஏற்பட்டால் பலூன் வெளியே வந்து உயிரை காக்கும். அதுபோல் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேலும் எனது மகளின் ஒரு கை, கால் துண்டாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.கார் கதவு தானாக திறந்து வெளியே வந்து விழுந்தாரா? அப்போது தூக்கி வீசப்பட்டிருக்கலாம். அவருடன் வந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பி உள்ளனர். எனது மகள் சாவில் பலத்த சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்வேன் என தெரிவித்தார்

♈🇮🇳 🌴 பிரான்ஸை அழிக்க ரஷ்யா அதிபயங்கர ஏவுகணை தயாரிப்பு!!மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ளது ரஷ்யா

♈🇮🇳 🌴புதுச்சேரி வாரியத் தலைவர்களாக பதவி வகிக்கும் 7 எம்.எல்.ஏ, க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநர் கிரண்பேடியிடம் புதுச்சேரி அதிமுக அம்மா அணி ஓம்சக்தி சேகர் மனு அளித்துள்ளார். வாரியத் தலைவர்கள் தங்கள் பணியினை சரியாக செய்யாததால் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார்.

♈🇮🇳 🌴நிர்பயா பலாத்கார வழக்கு: 4 பேரின் தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது

♈🇮🇳 🌴திருப்பூர் அருகே சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

♈🇮🇳 🌴டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான வழக்கு : உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

♈🇮🇳 🌴நடிகர் சங்க கட்டிடத்திற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது ? உயர்நீதிமன்றம் கேள்வி

♈🇮🇳 🌴இளைஞர் பெருவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

♈🇮🇳 🌴ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

♈🇮🇳 🌴முலாயம் சிங் யாதவ் தலைமையில் புதிய கட்சி உதயம்

♈🇮🇳 🌴ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர்- பிரதமர் மோடி சந்திப்பு

♈🇮🇳 🌴சுயமாக செயல்படும் அதிகாரிகளே புதுச்சேரி அரசுக்கு தேவை: ஆளுநர் கிரண்பேடி

♈🇮🇳 🌴விசாகப்பட்டினத்தில் கண்ணி வெடி தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பலி

♈🇮🇳 🌴புதுச்சேரியில் மே 16ல் பட்ஜெட் கூட்டத்தொடர்

♈🇮🇳 🌴முதுநிலை மருத்துவ மேற்படிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

♈🇮🇳 🌴தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

♈🇮🇳 🌴சிவகாசி அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

602total visits.