விஸ்வரூப செய்திகள் 6/5-2

0
19

♈🇮🇳 🌴 *11am-6-5-2017-saturday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இந்த முறை வரும் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை
இந்த ஈபிஎஸ்.. அந்த ஓபிஎஸ்… செம எரிச்சலில் செங்கோட்டையன்!

♈🇮🇳 🌴 அ.தி.மு.க. அரசு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

♈🇮🇳 🌴 ‘உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சட்டமன்ற தேர்தல் வரும்’ ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு

♈🇮🇳 🌴 ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 31 பேர் கொன்று குவிப்பு

♈🇮🇳 🌴 பாகிஸ்தானில் ஒரே நாளில் 3 பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்

♈🇮🇳 🌴 ராணுவத்துக்கு எதிராக மக்களை தூண்டி விட்டதாக நவாஸ் ஷெரீப் மீது புகார் பதிவு

♈🇮🇳 🌴 பன்னாட்டு கிரிக்கெட் வாரியம் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை பத்து மடங்கு அதிகரித்திருப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது

♈🇮🇳 🌴 தமிழகப் பயணத்தை ஒத்தி வைத்த அமித் ஷா

♈🇮🇳 🌴 தேனியில் இருந்து பொள்ளாச்சிக்கு கொள்ளையடிக்க ஆம்னி வேனுடன் வந்த இருவர் கைது

♈🇮🇳 🌴 குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது-சிதம்பரம் அருகே பழைய நல்லூர் கிராம்

♈🇮🇳 🌴 பெண்களிடம் பாலியல் குறும்பு செய்த இளைஞர் அடித்துக் கொலை; தாய்மாமாவை கைது செய்து போலீசார் விசாரணை சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், அரியானூர் அருகே உள்ள பாலிக்காடு பகுதி

♈🇮🇳 🌴 ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை; ஈழத்தமிழருக்கு இரட்டை வாழ்நாள் தண்டனை நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டி

♈🇮🇳 🌴 தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை கண்டறிய ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 21 கிணறுகள் தோண்டவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது

♈🇮🇳 🌴 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று உத்தரகண்ட் மாநிலத்திற்கு செல்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பத்ரிநாத் கோயிலுக்கு இன்று பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

♈🇮🇳 🌴 புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது; புதுச்சேரி தலைமை செயலாளர் மாற்றம் குறித்து ஆண்டவன் தான் முடிவெடுப்பார். புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொர் தேதியை ஆட்சியாளர்கள் தான் அறிவிப்பார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால் புதுச்சேரி தூய்மையாகும் என தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 சென்னை அண்ணாசாலையை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் சாலையிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தக்காரர் கூறுகையில், கீழ்ப்பாக்கம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் மெட்ரோ சுரங்க பாதையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. பள்ளம் ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான் என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளார்

♈🇮🇳 🌴 இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீனக் கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடலோர பாதுகாப்பு படை சீனக் கப்பலை விரட்டியடித்துள்ளது. இரு கப்பல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக சீனக் கப்பல் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது என தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனக் கப்பல் அத்துமீறல் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இந்திய கடலோர படை எதுவும் வெளியிடப்படவில்லை.

♈🇮🇳 🌴 ஓபிஸ் அணியினர் பகல் கனவு காண வேண்டாம் : எம்.எல்.ஏ. குணசேகரன்

♈🇮🇳 🌴 பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு 25,485 பேர் விண்ணப்பம்

♈🇮🇳 🌴 பீகாரில் தடுப்பூசி போட்டதில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

♈🇮🇳 🌴 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை : அமைச்சர் கடம்பூர் ராஜு

♈🇮🇳 🌴 ஒசூரில் ஆண் யானை உயிரிழப்பு

♈🇮🇳 🌴 இன்று மருத்துவ நலச்சங்க கூட்டம்

♈🇮🇳 🌴 டெல்லியில் எரிவாயு கசிவால் பாதிக்கப்பட்ட 110 மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை

♈🇮🇳 🌴 காயம் காரணமாக ஐபில் தொடரில் இருந்து மெக்கல்லம் விலகல்

♈🇮🇳 🌴 குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

♈🇮🇳 🌴 மருத்துவ மாணவர்கள் தர்ணா போராட்டம்

♈🇮🇳 🌴 உத்திர பிரதேசத்தில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல்: ஒருவர் பலி; 12 பேர் காயம்

♈🇮🇳 🌴 செங்கல்பட்டு சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

♈🇮🇳 🌴 இந்திய எல்லையில் புகுந்த 12 வயது சிறுவன் கைது

♈🇮🇳 🌴 ஒரே வாரத்தில் 800 கோடியை தாண்டிய ‘பாகுபலி 2’ வசூல்

♈🇮🇳 🌴 தேனியில் காய்கனி திருவிழா துவக்கம்

♈🇮🇳 🌴 புதுக்கோட்டை : தென்னங்குடியில் ஜல்லிக்கட்டு

  1. ♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

377total visits.