விஸ்வரூப செய்திகள் 6/7-2

0
24

♈🇮🇳   10am -6-7-2017-thursday*  ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳   பூசாரி புல்லட்ல போனா.. கடவுள் பிளைட்ல போவாரு.. இது கதையல்ல நிஜம்! சிங்கப்பூர்: சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சீன கடல் தெய்வங்கள் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

♈🇮🇳   from bjp — Who needs biased half baked viswarupam news. We are deleting the moments its comes.

♈🇮🇳   சென்னை : தலைமை செயலகத்தை சுற்றி போலீசார் குவிப்பு –காவல்துறை உயரதிகாரிகள் ஒருவித படப்படப்புடன் கடைகரை சாலையில் சுற்றி வருகின்றனர்

♈🇮🇳   தமிழகம் முழுவதும் 4வது நாளாக இன்றும் தியேட்டர்கள் மூடல்

♈🇮🇳   நாமக்கல் அருகே சந்தன கட்டைகள் பறிமுதல்

♈🇮🇳   தர்மபுரி : 10 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

♈🇮🇳   புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் இன்று பதவியேற்பு

♈🇮🇳   திருவள்ளூர் : கப்பல் கட்டும் தளம் முற்றுகை

♈🇮🇳   கதிராமங்கலம் : ஓ.என்.ஜி.சி. குழாயில் மீண்டும் உடைப்பால் பரபரப்பு

♈🇮🇳   கிரிக்கெட்: இந்தியா-வெ.இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

♈🇮🇳   ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று துவக்கம்

♈🇮🇳   திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

♈🇮🇳   ஜம்மு : பயங்கரவாதி புர்கன்வானி கொல்லப்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனால் பிரிவினைவாதிகள் இதனை பயன்படுத்தி மீண்டும் பதற்றத்தை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(ஜூலை 6) நள்ளிரவு முதல் காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳   ‛தனது தவறான செயல்பாடுகளால் நீதித்துறையை கர்ணன் நகைப்புக்குரியதாக்கி விட்டார்’ என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது

♈🇮🇳   எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

♈🇮🇳   திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் கடந்த 4ம் தேதி காணாமல் போன 4மீனவர்கள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர். 9ம் வகுப்பு மாணவர்கள் ரியாஜ், மீரான், இதிரிஸ், நவ்புள் ஆகியோர் சென்னை சென்ட்ரலில் மீட்கப்பட்டுள்ளனர். வத்தலகுண்டு ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் காணாமல் போன4 மீனவர்களையும் மீட்டனர்

♈🇮🇳   இந்திய கடலோர பாதுகாப்புப் படையில்2 அதிவேக புதிய ரோந்து படகுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் 2புதிய ரோந்து படகுகள் சேர்க்கப்பட்டுள்ளன.2 புதிய ரோந்து படகுகளும் தமிழக கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் என்று கடலோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது

♈🇮🇳   உத்திரப்பிரதேசத்தில் கார் மீது லாரி மோதி விபத்து: 5 பேர் பலி

♈🇮🇳   உத்திரப்பிரதேசத்தில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

♈🇮🇳   நாகை: வேதாரண்யம் அருகே படகு பழுதால் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வேட்டைக்காரனிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மனோகரன்,சிவநேசன், மகேந்திரன் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்

♈🇮🇳   கடலூரில் 25 லிட்டர் சாராயம் பறிமுதல்: 3 பேர் கைது

♈🇮🇳   அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 3லாரிகளில் கற்கள் வந்து குவிந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடு முழுவதுமிருந்து கட்டுமானத்திற்கான கற்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி 3 லாரிகள் நிறைய கற்கள், அயோத்தியில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்புக்கு சொந்தமான ராம் சேவபுரத்திற்கு வந்துள்ளன

♈🇮🇳   இலங்கையில் புதிய அரசியலமைப்பு சட்டமோ அல்லது திருத்தமோ தேவையில்லை என்று பௌத்த மடங்கள் அறிவித்துள்ளன

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

312total visits.