விஸ்வரூப செய்திகள் 8/8-1

0
33

♈ 🇮🇳    6.30am -8-8-2017-tuesday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  இத்தாலியில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு அழுகையை நிறுத்த போதை மருந்து கொடுத்த நர்ஸ்ஸை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்து மீட்டுள்ளனர். குழந்தை பிறந்ததும் பலமாக அழுதுள்ளது. அந்த நர்ஸ் எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை அவரால் நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த நர்ஸ் வலியை நீக்கும் மார்ஃபின் என்ற போதை மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளார்.இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக சென்று அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அதில் குழந்தையை சோதித்ததில் ரத்தத்தில் போதை மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

♈ 🇮🇳  அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.அதில், வடகொரியா கையாண்டு வரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என வலியுருத்தினர்— vishwarubam news*

♈ 🇮🇳  சுவிட்சர்லாந்தின் மேற்கு பகுதியான ரோமண்டியில் வசித்து வரும் அந்த நபர் போலி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் சிறுமிகளை குறிவைத்து பழகி வந்துள்ளார். பின்னர் அவர்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் ஆபாச நிர்வாண புகைப்படங்களை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.இதன் விளைவுகளை அறியாத சில சிறுமிகள் தங்கள் நிர்வாண புகைப்படங்களை விளையாட்டாக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி அந்த சிறுமிகளை நேரலையில் ஆபாசமாக காம லீலையில் ஈடுபட வைத்துள்ளார் அந்த நபர்.சில சிறுமிகளை தனது வீட்டிற்கே வரவழைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த செயலை அந்த நபர் கடந்த 5 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். இந்த சூழலில் ஒரு சிறுமியிடம் அந்த நபர் இப்படி நடந்துகொள்ள முயற்சிக்கையில் அந்த சிறுமி துணிச்சலாக அதனை தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் போலிசில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது—vishwarubam news

♈ 🇮🇳  சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் செப்டம்பர் மாதம் நடக்கிறது. அதில் சிங்கப்பூர் மக்கள் செயல்பாட்டு கட்சியை சேர்ந்த ஹலிமா யாகோப் போட்டியிடுகிறார். இதன் மூலம் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது சபாநாயகர் பதவியை ஹலிமா ராஜினாமா செய்துள்ளார். 40ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ள அவர், 2001, 2006, 2011மற்றும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் மலேசிய மக்களுக்கான ஒதுக்கீட்டில் போட்டியிட்டுள்ளார்— vishwarubam news

♈ 🇮🇳  திருவள்ளுர் மாவட்டம் பூண்டி காப்பு காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள், காட்டு பன்றிகள், முயல் என பல வகை மிருகங்கள் உள்ளன. அது தவிற செம்மரங்களும் உள்ளன. கடந்த சில மாதங்களில் செம்மரங்கக் கடத்தலும், மர்மமான முறையில் மான்களும் இறந்து உள்ளன. அதை தடுக்கும் வகையில் காட்டின் நடுவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன—vishwarubam news

♈ 🇮🇳  ரங்கசாமி ஆதரவாளர்கள் எப்பவுமே ரொம்பவே வித்தியாசம். பிறந்த நாளாகாட்டும்,பதவியேற்பாகட்டும் புதுவையை கலக்கி எடுத்து விடுவார்கள். 60 வயதைத் தாண்டியவராக ரங்கசாமி இருந்தாலும் கூட அவரது தொண்டர்களைப் பொறுத்தவரை ரங்கசாமி ஒரு விஜய், அஜீத் மாதிரிதான். கடந்த 4ம் தேதி ரங்கசாமியின் பிறந்த நாளாகும். இதையொட்டி அவரது தொண்டர்கள் வழக்கம் போல புதுவையைக் கலக்கி விட்டனர். அவர்கள் வைத்திருந்த வித்தியாசமான டிஜிட்டல் பேனர்கள் புதுவை மக்களை மிரள வைத்து விட்டன. இன்னும் கூட அந்த போஸ்டர்களின் தாக்கத்திலிருந்து புதுவை மீளவில்லை— vishwarubam news

♈ 🇮🇳  நடிகர் திலீப் கோர்ட் காவல் இன்றுடன் முடிவு

♈ 🇮🇳  நடிகர் திலீப் கோர்ட் காவல் இன்றுடன் முடிவு— vishwarubam news

♈ 🇮🇳  ஆக-08: பெட்ரோல் விலை ரூ. 69.13, டீசல் விலை ரூ.59.71

♈ 🇮🇳  சந்திரகிரகணம் சென்னையில் தெரிந்தது— vishwarubam news

♈ 🇮🇳 சென்னை விமானநிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை-சுதந்திரதினத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது— vishwarubam news

♈ 🇮🇳 ஆக., 22 ல் நாடு முழுவதும் ஸ்டிரைக்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

♈ 🇮🇳 அசாம்: வகுப்பறையில் மாணவியுடன் சல்லாபித்த ஆசிரியர் கைது—vishwarubam news

♈ 🇮🇳 முதுமலை: மனைவியை கொன்றவருக்கு 8 ஆண்டு சிறை

♈ 🇮🇳 ‘சிக்கிம் மாநில எல்லை யான, டோகோலாம் பகுதியில் இருந்து, இந்திய ராணுவம் வெளியேறி, மோதலை தவிர்க்க வேண்டும்; இல்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, சீனா, மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது

♈ 🇮🇳 மஹாராஷ்டிர மாநிலம், அஹமதுநகர் மாவட்டத்தில் நேற்று, பசுக்களை வேனில் கடத்திச் சென்றவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்,போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடந்த போது, பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த, 12 பேர் அங்கு வந்தனர். ‘பசுக்களை கடத்திச் சென்றவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கூறிவிட்டு,ஸ்டேஷனை விட்டு வெளியேறினர். சில நிமிடங்களில் அவர்களை, ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது; இதில், பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக, 36 பேரை, போலீசார் கைது செய்தனர்— vishwarubam news

♈ 🇮🇳 ட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

♈ 🇮🇳 போலியான மற்றும் மோசடி பெயரில் வாங்கப்பட்ட 11.44 லட்சம், ‘பான் கார்டு’ எனப்படும் வருமான வரித் துறை நிரந்தர எண் அட்டையை மத்திய அரசு முடக்கியுள்ளது— vishwarubam news

♈   வங்கதேசத்தில் உள்ள, சிட்டகாங்கில் இருந்து, வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு, இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லும், குழாய்கள் அமைப்பது தொடர்பாக, வங்கதேச அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக, பெட்ரோலிய அமைச்சர், தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்— vishwarubam news

♈ 🇮  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும், ‘தஹி ஹண்டி’ எனப்படும் உறியடித் திருவிழாவின்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உறியை உடைப்பதற்கு உயர கட்டுப்பாடு ஏதும் இல்லை. அதே நேரத்தில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி கிடையாது’ என,மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

♈ தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் ஒ பி.எஸ்., நண்பர் கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலம் சென்றனர்— vishwarubam news

♈ 🇮  கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 2 பேர் மாயம்

♈ 🇮  தென்கிழக்கு டெல்லி சங்கம் விகார் பகுதியில் உள்ள திறந்த வெற்றிடம் வழியாக சாலையில் பொதுமக்கள் சென்றபோது கடும் துர்நாற்றம்  வீசியது. இதையடுத்து சிலர் அங்கிருநத் சணல் பை மூட்டையிலிருந்து வருவதை கண்டு, உடனே இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார்,பையை  பிரித்தனர். அப்போது அதில் அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. சடலத்தை  ஆய்வு செய்தபோது,அது 20 வயதுடைய  இளம்பெண்ணின் சடலம் என கண்டறிந்தனர். அப்பெண் கொலை செய்யப்பட்டு 20-25 நாட்கள் கடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.போலீசார்,இதுதொடர்பாக வழக்கு பதிந்துள்ளனர் —vishwarubam news

♈   சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே மாத்தூரில் சொத்து தகராறில் தாய்,தந்தையை  மகன் அரிவாளாள் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮  100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றார் அமெரிக்க வீராங்கணை டோரி

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

880total visits.