விஸ்வரூப செய்திகள் 8/8-2

0
33

♈ 🇮🇳    1pm -8-8-2017-tuesday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  அதிமுக ஆட்சி இமயமலை போன்றது. கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்

♈ 🇮🇳  கடந்த 2014 ம் வருடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காரில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில், தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் வழங்கி உத்தரவிட்டுள்ளது

♈ 🇮🇳  கன்னியாகுமரியை சேர்ந்த மகேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: வடசேரி பகுதியில் கடந்த 2014ல் எம்.பி.,விஜயகுமார், அமைத்த ஜெயலலிதா மணற் சிற்பத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை அகற்ற வேண்டும் எனக்கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், வரும் ஆகஸ்ட் 18 க்குள் பதிலளிக்க கன்னியாகுமரி கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது  — vishwarubam news

♈ 🇮🇳  தமிழக அரசு நீட் தேர்வு அவசரச்சட்டம் பற்றி  மத்திய அரசிடம் சட்ட ஆலோசனை கேட்கவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தகவல் அளித்துள்ளார்.நீட் அவசரச் சட்ட வரைவை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார — vishwarubam news

♈ 🇮🇳  சதுரகிரி மலையில் நடக்கும் கட்டடப்பணிக்கு கழுதைகளை பயன்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.மலை அடிவாரத்தில் இருந்து மணல் எடுத்து செல்ல கழுதைகள் பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.விருதுநகரைச் சேர்ந்த முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது    — vishwarubam news

♈ 🇮🇳  தமிழகத்தில் உள்ள 7 ஆறுகள் மாசடைந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பவானி,காவிரி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி,மணிமுத்தாறு, வசிஷ்டாறு ஆகியவை மாசடைந்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. ஆறுகள் மாசடைவதை தடுக்க மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது  — vishwarubam news

♈ 🇮🇳  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசுக்கு விரோதமாக செயல்படுகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் விதிகளை மீறி ரகசியங்களை வெளியிடுகிறார். மேலும் வலைதளங்களில் அரசு ரகசியங்களை வெளியிட கிரண்பேடிக்கு யார் அதிகாரம் கொடுத்தது என நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

♈ 🇮🇳  யோகா என்ற பெயரில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட்!சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், கச்சுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்

♈ 🇮🇳  சினிமா சங்கங்களின் தலைவர், செயலாளர் ஆனதில் இருந்தே அந்த நடிகருக்கும் அரசுக்கும் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையின்போது நடிகரை சில அமைச்சர்கள் நெருங்கி வந்தார்கள். குடும்பத்துடன் வந்து படமெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். அரசு சார்பில் விருது மானியம் அறிவிப்புகள் வந்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே உலகநாயகனுக்கும் அமைச்சர்களுக்கும் மோதல் முற்றியது. இது அரசுக்கு கடும் அதிருப்தியைத் தந்ததாம். அவரை அமைதிபடுத்தும்படி அரசிடமிருந்து சங்க நடிகருக்கு நெருக்கடி வருகிறதாம்    — vishwarubam news

♈ 🇮🇳  மன நலம் குன்றியவர்களை காயப்படுத்தும் விதமாக நிகழ்ச்சியை அமைத்தது, ஓவியா வெளியேற காரணமாக நிகழ்வுகள் போன்றவை சமூக வலைதளங்களில் தொடர் விவாதங்களாகின. அந்த விவாதங்களின் ஒரு கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தணிக்கை செய்யப்படவேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.தொலைக்காட்சிகள் நடத்துவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கின்றது. செய்திகள் அல்லாத பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விதிகள் உள்ளன. ஆனால், தணிக்கை என்பது இதுவரை கிடையாது என்கிறார்கள் நிபுணர்கள்    —vishwarubam news

♈ 🇮🇳  ‘கலர் தெரபி’: இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தி-ஒவ்வொரு நிறத்திற்கும் இருக்கும் குணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு உணவில் எடுத்துக்கொள்வது-மஞ்சள் நிறம் –ஜீரண சக்தியை அதிகரிக்கும் – எலுமிச்சை,வாழைப்பழம் ,வெந்தையம் – நீலம் நிறம்  – அமைதி,துக்கம் வரும்- நாவல்பழம் ,கத்திரி – சிவப்பு நிறம்  – வலியை குறைக்கும் – தக்காளி, மாதுளை –ஆரஞ்சு நிறம்  – சோடியம்,பொட்டாசியம் போன்ற சத்துக்களை சமன் படுத்தும்- கேரட்,பப்பாளி – பச்சை நிறம் -மன இறுக்கத்தை குறைக்கும் – கீரை வகைகள்   — vishwarubam news

♈ 🇮🇳  தனது மார்பகங்களை தானே பாராட்டிக் கொள்ளும் காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக, `லூஸ் வுமன்` என்ற வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான ஸ்டேசி சாலமோனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

♈ 🇮🇳  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரும் வழக்கில் நோட்டீஸ்-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து- மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

♈ 🇮🇳  சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் புகார் மனு-உதவியாளர் சேவற்கொடியோனுக்கும் கொலை மிரட்டல் வருவதாக புகார்

♈ 🇮🇳  நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக சிடி வடிவில் கையேடு-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

♈ 🇮🇳  அதிமுக அரசுக்கு எதிராக போராடினால் அது ஜெயலலிதாவிற்கு எதிரானது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அரசைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்   — vishwarubam news

♈ 🇮🇳  அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் நீடித்த சிக்ககல்கள் முடிந்து விட்டதாகவும், இன்றும் சில தினங்களில் அதாவது ஆவணி மாதத்தில் அணிகள் இணையும் என்று அடித்து கூறுகின்றனர் தொண்டர்கள்   — vishwarubam news

♈ 🇮🇳  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1,900 நபர்களை விற்பனை மற்றும் விநியோகம் பிரிவில் பணிக்கு எடுக்க இருக்கின்றது. இது குறித்த முழு விவரங்களையும் ஜியோ.காம் என்ற இணையத் தளத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

♈ 🇮🇳  தமிழ்நாடு பட்டு வளர்ச்சியில்  வேலைவாய்ப்பு .தமிழ்நாடு வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு தகுதியிடையோர் விண்ணப்பிக்கலாம் . தமிழ்நாடு பட்டுவளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு நேரடி நியமனம் மூலம் பணிவாய்ப்பு நியமிக்கப்படுகிறது . தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இயக்குநர் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சென்னை அலுவலகத்தில் பரிந்துரை செய்யப்படும் நபர்களும் பட்டு வளர்ச்சி துறையின்www.tnsericulture.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

♈ 🇮🇳  மும்பை: சோராபுதீன் சேக் போலி என்கவுண்ட்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி வன்சரா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுகிறது   — vishwarubam news

♈ 🇮🇳  கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய 9 பேருக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பேராசிரியர் ஜெயராமனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை

♈ 🇮🇳  4 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கவுள்ளதால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் கிடுகிடு என உயர்ந்துள்ளது

♈ 🇮🇳  போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கோசி. மணியின் மகன் அன்பழகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்   — vishwarubam news

♈ 🇮🇳  அறிவியல் பாடத்தை செயல்முறையில் மாணவர்களுக்கு புரிய வைக்கிறார் ராமநாதபுரத்து இளைஞர் பிரேமானந்த் சேதுராமன். இவரது செயல்பாடுகள் வியக்க வைப்பதோடு மாணவர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது

♈ 🇮🇳  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று அவரது ரசிகர்களும் பொதுமக்களும்,அரசியல்வாதிகளும் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என தஞ்சை ரஜினி ரசிகர்கள் வராஹி அம்மனுக்கு யாகம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்   — vishwarubam news

♈ 🇮🇳  ‘தூய்மை இந்தியா’ குறித்து பாஜகவே தூய்மையாக நடந்து கொள்வதில்லை. என்றும் வேண்டுமென்றே ஒருசில குப்பைகளை கொட்டி அதை சுத்தப்படுத்துவது போல் தலைவர்கள் போஸ் கொடுப்பதாகவும் சமிபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில்  பாஜகவின் இளைஞரணி கூட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்டம் முடிந்தவுடன் மைதானத்தை பார்த்தால் ஒரே குப்பையாக இருந்தது.தூய்மை இந்தியா குறித்து வாய்கிழிய பேசும் பாஜக கூட்டத்திலேயே குப்பை டன் கணக்கில் கொட்டி கிடப்பதை நெட்டிசன்கள் போட்டோ எடுத்து அதை சமூக இணையதளங்களில் பதிவு செய்துள்ளனர். தூய்மை இந்தியாவை முதலில் பாஜக தனது தொண்டர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் விருப்பமாக உள்ளது   — vishwarubam news

♈ 🇮🇳  மனைவி வெளியே சென்று வேலை பார்ப்பது பிடிக்காமல் மனைவின் தலையை கணவன் துண்டித்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮🇳  சிவகங்கையில் மஞ்சு விரட்டு: ஒருவர் பலி

♈ 🇮🇳  பாதுகாப்பை ராகுல் புறக்கணித்தது ஏன்? ராஜ்நாத் சிங் கேள்வி  —vishwarubam news

♈ 🇮🇳 குஜராத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

440total visits.