விஸ்வரூப செய்திகள் 9/5-2

0
34

♈🇮🇳 🌴 *11am-9-5-2017-tuesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 மாவோயிஸ்ட் கொட்டத்தை ஒடுக்க, சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நன்கு பயிற்சி பெற்ற கோப்ரா படையினரை களமிறக்க சி.ஆர்.பி.எப்., முடிவு செய்துள்ளது

♈🇮🇳 🌴 பிரிட்டன் ராணி எலிசபெத், விண்ட்சர் பார்க் சர்ச்சிலிருந்து, தனது ஜாக்குவார் காரை தானே ஓட்டி அரண்மனைக்கு வந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது

♈🇮🇳 🌴 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டிய நெருக்கடியில் உள்ள தமிழக அரசு கள்ளுக்கடைகளை திறப்பதுடன் இளநீரில் இருந்து பீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன

♈🇮🇳 🌴 உருப்படுமா இந்தியா ???குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 24-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு வருகிறார். நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகிய நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலடி நடவடிக்கையாக அவர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்துள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதி கர்ணன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.இந்திய நாட்டின் மானத்தையே உச்சநீதிமன்றம், கிழ்நீதிமன்றங்கள் காற்றில் பறக்கக விடுகின்றனர். இதை தடுக்க வேண்டிய இந்திய நாட்டின் ஜனாதிபதி கொலை வழக்கில் சிக்கிய சாமியாரை பார்க்க காஞ்சி வருகிறார்.உருப்படுமா இந்தியா-vishwarubam

♈🇮🇳 🌴 வில்லங்க அமைச்சர் விஜயபாஸ்கரின் கூட்டாளியாக வலம் வந்த விழுப்புரம் திமுக பிரமுகரின் மகனுக்கும் டெல்லி குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் ஆட்சிகளை மாறி மாறி அமைத்தாலும் அரசு சொத்துகளை சூறையாடுவதில் கூட்டணி அமைத்துதான் செயல்படுகின்றன. இதனால்தான் டெல்லியை எதிர்ப்பதில் திமுக ரொம்பவே பம்மி வருகிறது. தற்போது அதிமுகவை மட்டுமே டெல்லி குறிவைத்து வேட்டையாடி வருகிறது. விரைவில் திமுக பக்கமும் டெல்லியின் பார்வை திரும்ப இருக்கிறது. குறிப்பாக திமுக தலைமைக்கு நெருக்கமான மூவரணிக்கு முதல் குறி வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விழுப்புரம் திமுக பிரமுகரின் மகனுக்கும் டெல்லி குறிவைத்திருக்கிறது. விழுப்புரம் திமுக பிரமுகரின் மகன் ரியல் எஸ்டேட் மாஃபியா என்கிறது காவல்துறை வட்டாரங்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் ஆகியோருடன் கூட்டணி அமைத்து செயல்பட்டிருக்கிறார் விழுப்புரம் திமுக பிரமுகர் மகன். நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்தாரர் சுப்பிரமணியத்தைப் போலவே விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவராக வலம் வந்திருக்கிறார் விழுப்புரம் பிரமுகரின் மகன். குறிப்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்தபோது விஜயபாஸ்கருடன் தங்கி கூத்தடித்தவர்களில் இந்த பிரமுகர் மகனும் ஒருவராம். இவருக்கு டெல்லி வலை விரித்து காத்திருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல்.

♈🇮🇳 🌴 தங்களின் முன்னாள் அதிபர் பார்க் குன் ஹீ பதவி நீக்கம் செய்யப்பட்ட காரணமாக இருந்த மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு பிறகு, தென் கொரியாவில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்

♈🇮🇳 🌴 நைஜீரியா: பாலியல் அடிமைகளாக இருந்த பள்ளிக்கூடச் சிறுமிகள் மீட்பு-மூன்று வருடங்களுக்கு முன்னதாக தீவிரவாத போக்கோ ஹராம் குழுவால் கடத்தப்பட்ட எண்பத்தியிரண்டு பள்ளிக்கூடச் சிறுமிகள், ‘’கைதிகள் பரிமாற்றம்’’ ஒன்றின் கீழ் வார இறுதியில் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களது நாட்டின் அதிபரை இன்று சந்தித்துள்ளனர்.சிபொக்கில் உள்ள தமது பள்ளிக்கூடத்தில் இருந்து அப்போது முன்னூற்றுக்கும் அதிகமான பெண்கள் கடத்தப்பட்டனர்.இன்னமும் நூறு பெண்கள் வரை இதுவரை விடுவிக்கப்படவில்லை

♈🇮🇳 🌴 மேற்கு இங்கிலாந்தின் பாத் நகரிலுள்ள நார்லாண்ட் கல்லூரி 125 ஆண்டுகளாக குழந்தைகளை பராமரிக்கும் வீட்டுப்பணிப்பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறது.இங்கு பயின்றவர்கள் உலகின் செல்வமும் செல்வாக்கும் மிக்க பிரபல குடும்பங்கள் பலவற்றில் பணி செய்கிறார்கள்.குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுப்பராமரிப்பு குறித்து இங்கே படித்து வந்தவர்கள், தற்போது பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி என்றும் படிக்க ஆரம்பித்துள்ளனர்.முன்னாள் இராணுவத்தினர் இவர்களுக்கு இந்த பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

♈🇮🇳 🌴 மருத்துவர் பில் ஃபிராங்க்லேண்டுக்கு 105 வயது.அவர் இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்டவர். போர்க்கைதியாக பிடிபட்டு ஜப்பானில் இருந்தவர்.இன்றும் அவர் மருத்துவராக பணிபுரிகிறார்.தான் செய்யும் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளால் தான் தன்னால் இந்த வயதிலும் தொடர்ந்து உழைக்க முடிவதாக கூறுகிறார் அவர்.இந்த பயிற்சிகளை இவர் தினமும் காலையில் செய்கிறார்.இவற்றை செய்து முடிக்க இவருக்கு ஒருமணி நேரம் தேவை.இந்த பயிற்சிகள் அவரது உடற்தசைகளை வலுவாக்கி அவர் நேராக நிற்கவும் நடக்கவும் உதவுகின்றன.இந்த உடற்பயிற்சிகளே தனது நீண்ட ஆயுளின் ரகசியம் என்கிறார் மருத்துவர் ஃபிராங்லேண்ட்

♈🇮🇳 🌴 இலங்கையின் சில பகுதிகளில் ரத்த பரிசோதனையாளர்கள் என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பினர் ஊசி மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸை பரப்பி வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான போலி தகவல் தொடர்பாக காவல்துறையினரிடம்புகார் அளித்துள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இயக்குநர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

♈🇮🇳 🌴 திருவாரூரில் மதுகுடித்தவர்களை தட்டிக்கேட்டவரை உயிருடன் தீ வைத்து கொளுத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்

♈🇮🇳 🌴 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை:அண்ணன், தம்பி இருவர் கைது-சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள குள்ளவீரன்பட்டி பஞ்சாயத்து

♈🇮🇳 🌴 யாருடைய தூண்டுதலின் பேரிலும் நாங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவில்லை என விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். விவசாயிகளின் பிரச்சனைக்காகவே டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுக்கு இவ்வாறு அய்யாக்கண்ணு பதில் அளித்துள்ளார். மேலும் அனைத்து கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே போராட்டம் கைவிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

♈🇮🇳 🌴 விருத்தாசலம் அருகே தெப்பக்குளத்தில் மதுபானம் விற்பனை-கடலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை: பொதுமக்கள் புகார்

♈🇮🇳 🌴 உயிர் காக்கும் நீச்சல் வீரர் பயிற்சியை தொடங்கி வைத்தார்: அமைச்சர் ஜெயக்குமார்

♈🇮🇳 🌴 தஞ்சையில் 6 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

♈🇮🇳 🌴 ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 8 சிறுவர்கள் பலி

♈🇮🇳 🌴 நீட் தேர்வில் மாணவர்களுக்கு நேர்ந்தது மனிதப் பண்பற்ற கொடுமைகள்: வைகோ

♈🇮🇳 🌴 இருஅணிகளுக்கு இடையே விரைவில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெறும்: தம்பித்துரை

♈🇮🇳 🌴 தேவகோட்டையில் பெட்ரோல் குண்டு வீச்சு

♈🇮🇳 🌴 உத்தரகண்ட்டில் கனமழை காரணமாக பயிர்கள் சேதம்

♈🇮🇳 🌴 மணிப்பூரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்: ஒருவர் கைது

♈🇮🇳 🌴 கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஏரியின் மீது தீப்பிழம்பு

♈🇮🇳 🌴 அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியம் விஷம் அருந்தி தற்கொலை

♈🇮🇳 🌴 செங்கல்பட்டு அருகே லாரி-ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: பெண் பலி

· ♈🇮🇳 🌴 தனியார் பேருந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து : 10 பேர் காயம்

♈🇮🇳 🌴 சேகர் ரெட்டியை அறிமுகம் செய்தவர் ஓ.பி.எஸ்.,: அமைச்சர் சண்முகம்

♈🇮🇳 🌴 கடலூர்: புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல்
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

367total visits.