விஸ்வரூப செய்திகள் 9/8-1

0
18

*காலை செய்திகள்@9/8/17🌑*

காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழைந்தால், இந்தியா என்ன செய்யும் என்று சீனா கேள்வி விடுத்துள்ளது. இருதரப்பும் ஒரே நேரத்தில் படைகளை வாபஸ் பெறும் யோசனையை நிராகரித்துள்ளது.

அன்புமணி ராமதாசுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், வழக்கில் நிரபராதி என்று அவர் நிரூபித்துவிட்டு வரட்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு வழங்கப்படும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்

மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் ரூ.78 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்

இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி தெரிவித்துள்ளார்.

கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார்.

பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை ஊராட்சிக்கு வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

குஜராத் மாநில ராஜ்யசபா தேர்தலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே காங்கிரசின் அஹமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி மற்ற இரு இடங்களில் வெற்றி பெற்றனர்.

தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது; இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார்.

மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அமித்ஷா, ஸ்மிருதி இராணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நெடுவசாலில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தினமும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று மண் சோறும் சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் இன்று 119வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு 22ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களை காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழக மீனவர்கள் 49 பேரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள 7 தங்க கட்டிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கம் கடத்தியதாக முகமது முஸ்தபா என்பவரிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தனியார் ஓட்டலில் துப்பாக்கி பறிமுதல்; 4 பேர் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்

டெல்லியில் ஒடிஷா விவசாயிகளும் போராட்டம்மகாநதி நீர் பிரச்சனையில் சத்தீஸ்கரை கண்டித்து போராட்டம்

வாடிக்கையாளர்களின், ‘லாக்கர்’ பாதுகாப்பில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என, அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது என, மத்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சன்வர்லால் உடல்நலக்குறைவால் மரணம்பாஜக எம்.பி. சன்வர்லால் டெல்லியில் சிகிச்சை பலனின்றி மரணம்மாரடைப்பு,மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்2014 நவம்பர் முதல் 2016 ஜூலை வரை மத்திய அமைச்சர் பதவி வகித்தார்மோடி அமைச்சரவையில் மத்திய நீர்வள துறை இணையமைச்சராக இருந்தவர் சன்வர்லால்.

சுதந்திர தினத்தையொட்டி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை அரசு அருங்காட்சியகம் மூடப்படுகிறது என்று அருங்காட்சியகங்கள் துறை அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. தொடர்பாக மாநில அரசு வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் 22-ந் தேதி போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்

சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து 9 செல்போன்கள் இன்று பறிமுதல்சிறப்பு சோதனைக்குழு இன்று நடத்திய சோதனையில் இந்த செல்போன்கள், சிகரெட், கஞ்ச போதைப் பொருள்களைபறிமுதல் செய்துள்ளனர்கைதிகளிடம் செல்போன்கள் இருப்பதை கண்டுப்பிடிப்பதற்கு ஜாமர் கருவிகள் பொருத்தும் பனி நடைபெற்று வருகிறது

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, இன்று(ஆக.,9), உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் : வைரஸ் காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் நிறுவனங்கள், கிடங்குகள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விதித்துள்ள 18% ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ராணிப்பேட்டை பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு

கதிராமங்கலத்தில் 81வது நாளாக போராட்டம்

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், மாநிலத்தின், 33 மாவட்டங்களில், 29 மாநிலங்கள் மூழ்கின. பாதிப்புகளை குறைக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்தது. எனினும் இதுவரை 84 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்தார்.

பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததன் மூலம் நிதிஷ் அரசியல் தற்கொலை செய்து கொண்டார் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மெகபூபா முஃப்தி வலியுறுத்தினார்

இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு; பார்லி.,யில் கூட்டு கூட்டம்

மலேசிய கோடீசுவரர் கோ கே பெங்கின் மகள் ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ கரிபியன் தீவுகளை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார்.மகள் ஏஞ்சலின் காதலை அவரது தந்தை கோ கே பெங்கின் ஏற்கவில்லை.இதனால் காதலுக்காக கோடிகணக்கான சொத்தினை துச்சமென தூக்கியெறிந்துள்ளார் ஏச்லின்.கோ கே பெங்கின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 2000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆக-09: பெட்ரோல் விலை ரூ. 69.20, டீசல் விலை ரூ.59.77

371total visits.