அஜீத்தின் விஸ்வாசம் அவுட்லுக்

0
20

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜீத், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் இரண்டாவது அவுட் லுக் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் அவுட்லுக் போஸ்டர் ஏற்கனவே மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. பல்வேறு காரணங்களுக்காக திரைப்படத்தின் எந்தவொரு விசயமும் கசிந்து விடாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டார்கள்.

விஸ்வாசம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியும் எந்த போஸ்டரும் இல்லாமல் தான் வரும் ஜனவரியன்று பொங்கலுக்கு திரைப்படம் வெளிவருவதை உறுதி செய்து இருந்தார். இன்று அஜீத்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கீச்சில் விஸ்வாசம் திரைப்படத்தின் இரண்டாவது அவுட்லுக் நாளை காலை 10.30க்கு வெளியிடப்படுமென தெரிவித்து இருக்கிறார்.

இது அஜீத் ரசிகர்களுக்கிடையே பெரும் மகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறது.

-சினிமா பாபு

886total visits,4visits today