விஸ்வரூப செய்திகள் 19/4-4

0
40

♈🇮🇳 🌴 *6pm-19-4-2017-wednesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 தமிழகம் எங்கும் வெயில் வாட்டிவதைக்கிறது. இதனை அடுத்த திருவள்ளூரில் 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கோபியில்-109, வேலூரில்-108, தஞ்சையில்-106, நாமக்கல்லில்-106, திருச்சியில்-107, நெல்லையில்-105, ஈரோடு-104, கோவை-99, டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது-ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை

♈🇮🇳 🌴 மறைந்த தினத்தந்தி அதிபர் என் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் ஐயா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களை விஸ்வரூபம் வணங்குகிறது

♈🇮🇳 🌴 Clash between police vs press reporters at Egmore court Chennai

♈🇮🇳 🌴 இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு சாதகமாக கிடைக்கச் செய்வதற்காக, டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு மதுவுடன் ஆடம்பரமான விருந்தை சுகேஷ் சந்திரசேகர் அளித்துள்ளராம் தெரியவந்தது

♈🇮🇳 🌴 முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கட்சி பிரமுகர்கள் மறந்த நிலையில் அவருக்காக, அவர் பெயரில் தனிக்கட்சியை துவக்க ஒரு மாஜி முன்வந்துள்ளார். மேலும் முழுக்க, முழுக்க ஜெயலலிதாவின் செயல்திட்டங்களை கொண்டே கட்சி இருக்குமென்றும், அதேபோல, டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழை போல, டாக்டர் நமது புரட்சித்தலைவி என்ற நாளிதழையும் துவக்க கரூர் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது

♈🇮🇳 🌴 இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி இன்று 60வயதைத் தொட்டுள்ளார்.உலகளவில் சுமார் 20 நாடுகளை விடவும் அதிகச் சொத்துக்களை வைத்துள்ளது மட்டும் அல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் குடுமியே இவர் கையில் தான் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..?

♈🇮🇳 🌴 அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தையில் புதிய சமரச திட்டம் தயாரிக்கப்படுகிறது.news below

♈🇮🇳 🌴 இந்தியாவில் வறுமையை ஒழிக்கும் நோக்கத்தோடு தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின் யோசனையான அனைவருக்கும் அடிப்படை சம்பளம் வழங்கும் திட்டம் எப்போது, எப்படி செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது

♈🇮🇳 🌴 மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் தேர்வு 3 வது ரவுண்டுக்கு திருச்சி உள்பட 45 இடங்கள் திட்டஅறிக்கை சமர்பித்து போட்டியில் உள்ளது. இதன் முடிவுகள் வரும் ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

♈🇮🇳 🌴 சிரியா குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது போட்டோகிராபர் ஒருவர், பலரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர்

♈🇮🇳 🌴டிடிவி தினகரன் மீதான அந்நிய செலவாணி மோசடி வழக்கு விசாரணை மே 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக குற்றச்சாட்டு பதிவு தொடர்ந்த விசாரணையை தாமதப்படுத்திய தினகரனுக்கு நீதிபதி மலர்மதி கடும் கண்டனம் தெரிவித்தார்

♈🇮🇳 🌴ஞாயிறு தோறும் விடுமுறை: பெட்ரோல் பங்குகள் முடிவுக்கு பெட்ரோலிய அமைச்சகம் எதிர்ப்பு

♈🇮🇳 🌴இலங்கை மீனவர்கள் 7 பேர் விடுதலை

♈🇮🇳 🌴ஆதார் அட்டை விவரங்களை திருடிய இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு

·♈🇮🇳 🌴ஏற்கனவே எழுதிய நாடகத்தை திறம்பட நடத்துகிறார்: ஓ.பி.எஸ். மீது தீபா குற்றசாட்டு
·

♈🇮🇳 🌴பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம்

· ♈🇮🇳 🌴2019 மக்களவை தேர்தலில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் முழுமையாக பயன்படுத்தப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

· ♈🇮🇳 🌴உத்திர பிரதேசத்தில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து
·

♈🇮🇳 🌴போராட்டத்தை தொடருவது குறித்து விவசாயிகளிடம் அய்யாக்கண்ணு கருத்துக் கேட்பு
·

♈🇮🇳 🌴ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த வீரர் குமார் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி

· ♈🇮🇳 🌴வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்வு
·

♈🇮🇳 🌴டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் இன்று மாலை சென்னை வருகை
·

♈🇮🇳 🌴பெங்களூரு பெல்லாந்தூர் ஏரியை சுற்றியுள்ள ஆலைகளை மூட பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

· ♈🇮🇳 🌴முதல்வர் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை டெல்லி பயணம்

♈🇮🇳 🌴ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே தீ விபத்து-சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.குடும்பமே வெளியேறுவதால் தக்க ஆதார ஆவணங்களை தீ வைத்து அழித்திருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. பங்களாவின் உள்ளேயும், வெளியேவும் உள்ள புற்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சில முக்கிய ஆவணங்கள் எரிந்துள்ளதாக பேசப்படுகிறது

♈🇮🇳 🌴 முதல்வராகவும் கட்சியின் பொதுச் செயலராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு எப்போதெல்லாம் சிக்கல் ஏற்பட்டு பதவி விலக நேர்ந்ததோ, அப்போதெல்லாம், முதல்வர் பதவியில் பன்னீர்செல்வத்தைத்தான் நியமித்தார். அப்படித்தான், மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார் பன்னீர்செல்வம். அதனால், இம்முறையும் அவருக்கே முதல்வர் பதவியை அளிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும்; அவர் நிதி, பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்து செயல்படுவார். அதேபோல, கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பில் பன்னீர்செல்வம்தான் இருக்க வேண்டும்.ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை விலக்க, உடனடியாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதல்கொண்டு, சம்பந்தப்பட்ட எல்லோரையும் விசாரிக்க வேண்டும். விசாரணையில், சசிகலா குடும்பத்தினர்தான், குற்றவாளி என கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓரிருவரைத் தவிர, அமைச்சரவையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் கொண்டுவரத் தேவையில்லை. பாண்டியராஜன், அவசியம் அமைச்சர் ஆக்கப்பட வேண்டும். மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்குப் பின், தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தை விரைந்து அரசுடைமையாக்கி, அதை அரசு சார்பிலான நினைவு இல்லமாக்க வேண்டும். அதை மக்கள் பார்வைக்கு விட வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள், படித்த புத்தகங்கள், அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களெல்லாம், நினைவு இல்லத்தில் வைக்கப்பட வேண்டும்.சமரச திட்டத்தின்படி இன்று பேச்சுவார்த்தை தொடங்க இரு அணியினரும் நினைத்தனர். ஆனால், இன்று அஷ்டமி என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டது. நாளை அதிகாரப்பூர்வமாக இரு அணியினரும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். அதன்பிறகு சமரச திட்டத்தின் முடிவுகள் என்ன என்பது தெரியவரும்

· ♈🇮🇳 🌴 பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி பிராந்திய கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட அழைப்பு

· ♈🇮🇳 🌴 பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளம் வழங்கப்படும். பெறுகின்ற நபர் ஏழையோ, பணக்காரரோ யாராக இருந்தாலும் இத்திட்டத்தினால் பலன் பெறுவர். இப்போதுள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்களில் பரவலாகக் காணப்படும் ஊழல், தவறான பயன்பாடு மற்றும் வீணடிப்பு இத்திட்டம் மூலம் சரி செய்யப்படும். தற்போது ஆதார் மூலம் நிறைவேற்றப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களால் இந்தியாவில் வறுமை 22 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதமாக குறையும் என்று மேலை நாட்டு இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.இத்திட்டதிற்கு தேசிய வருமானத்தில் 4-5 சதவீதம் வரை செலவாகும் என்பதால் ஏற்கனவே அமலிலுள்ள நலத்திட்டங்களை படிப்படியாக நீக்கிவிட்டுத்தான் இதனை அமல் செய்ய முடியும் என்றார் அரவிந்த். ஆனால் கிராமப்புற வேலையுறுதி திட்டம் போன்றவற்றை நீக்குவதற்கு அரசியல் ரீதியிலான எதிர்ப்புகள் இருக்கும் என்கிறார் அரவிந்த். எனவே உடனடியாக நிறைவேற்ற இயலாது. மேலும் இத்திட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான, ஆதார், வங்கிக் கணக்கு, மொபைல் ஆகியவற்றையும் தயார் செய்ய வேண்டும். தற்போது 1.1 பில்லியன் மக்களிடம் ஆதார் உள்ளது. 250 மில்லியன் மக்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர், அதில் 60 சதவீதம் பேரிடம் ஆதாருடன் இணைத்துள்ளனர். மொபைல்களைப் பொறுத்தவரை 250 மில்லியன் மக்களிடம் ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளன; 300 மில்லியன் மக்களிடம் வழக்கமான ஃபோன்களும், 350 மில்லியன் மக்களிடம் ஃபோன்களே இல்லை என்றும் சுட்டிக்காட்டினார் அரவிந்த்.இத்திட்டத்தை மாநில அரசுகள் விரும்பினால் நடைமுறைப்படுத்தலாம் என்று கூறிய அரவிந்த் அவை மத்திய அரசிடமே இதற்கான நிதியையும் கேட்கலாம் என்றும் குறிப்பிட்டார். அரசியல் ரீதியிலான தடைகளும், இத்திட்டத்தின் பிரம்மாண்டமான அளவுமே விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதில் தாமதத்தைக் கொண்டு வரும் என்றார் அரவிந்த்

· ♈🇮🇳 🌴 விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர விசாரணை முகமைகள் சிறப்பாக செயல்படுகின்றன என அருண் ஜெட்லி கூறிஉள்ளார்

· ♈🇮🇳 🌴 தினகரன் மீதான லண்டன் ஓட்டல் வழக்கு – நாளை விசாரணை

· ♈🇮🇳 🌴 நெடுவாசலில் மத்திய அரசு, ஒஎன்ஜிசி, ஜெம் க்கு செருப்பு, துடைப்பம், சாணிப்பால் மரியாதை!

· ♈🇮🇳 🌴 இரட்டைக் கொலை வழக்கு குற்றவாளி-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!சிதம்பரம் அண்ணாமலை நகரில்
·

♈🇮🇳 🌴 மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீட்டை காக்க அவசர சட்டம்!: அன்புமணி ராமதாஸ்

· ♈🇮🇳 🌴 கொத்தமங்கலத்தில் 2 மாதங்களாக குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்குடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அதிகாரிகள் குடிதண்ணீர் வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.குடிதண்ணீர் பிரச்சனை :புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சிகள் மட்டுமின்றி கிராமங்களிலும் குடிதண்ணீர் பிரச்சினை பெரிதாக வெடித்துள்ளது

· ♈🇮🇳 🌴 சென்னை இரயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்; மருந்து விற்பனை பிரதிநிதிகள் இருவர் கைது-கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு சுவேதா எக்ஸ்பிரஸ் என்ற இரயில் புறப்பட்டது. இந்த இரயிலில், எஸ்.12 பெட்டியில், சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த, 23 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார்.இவரது படுக்கையின் எதிரே உள்ள படுக்கையில், இரண்டு வாலிபர்கள் பயணம் செய்தனர். நள்ளிரவு, 12:00 மணியளவில், அந்த இரயில் பாலக்காடு அருகே வந்தபோது, இரண்டு வாலிபர்களும் சேர்ந்து இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்றனர்

· ♈🇮🇳 🌴 தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றமளிக்கக்கூடிய நீரா பானத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். நீரா பானம் உற்பத்தியின் மூலம் 2.40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இந்த திட்டத்தை தொடங்கி வாய்த்த பின் முதலமைச்சர் என்று தெரிவித்துள்ளார்
· ♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈
·

420total visits.