விஸ்வரூப செய்திகள் 31/3-2

0
20

♈🇮🇳 🌴 *4.30pm-31-3-2017news* 🌴🇮🇳♈🙏📡🙏📡 *vishwarubam news*

A] எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்துகொள்ள வேண்டும் என்று நாஸ் பவுண்டேஷன் தொடர்ந்த வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவது கட்டாயம் என்றும், கருத்து வேறுபாடு உள்ள மாநிலங்கள் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதித்த மாணவர் சேர்க்கைக்கு 12 மாநிலங்கள் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

B] மும்பையில் உள்ள முகமது அலி ஜின்னாவின் வீட்டை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது

C] தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றின் மூலம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தி.மு.க., தரப்பில், சென்னை, ஆர்.கே.நகரில் அவசர கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், தி.மு.க., 56 சதவீத ஓட்டுக்களை கட்டாயம் பெறும் என்றும், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் 32 சதவீத ஓட்டுக்களைப் பெறுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குஷியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது

D] பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ள இன்றே (மார்ச், 31) கடைசி நாளாகும்

E] ஐரீன் எனும் மலேசியப் பெண் போலீஸ் அதிகாரியின் படங்கள் சமூக வலைத்தளங்களில் தீ போல பரவி வருகின்றன. அவரது அழகும் உற்சாகமும் பல வாலிபர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளது. அவரது அழகில் மயங்கிய ஆண்கள் பலர் கைதாக வரிசையில் நிற்கின்றனராம். பார்க்க சாதுவாக இருக்கும் ஐரீனைக் குறைவாக இடைபோடக்கூடாது. போலீஸ் படையில் அயராது உழைக்கும் அவர் தமக்குச் சீறிப் பாயவும் தெரியும் என்று சமூக ஊடகங்களில் அவர் கூறியுள்ளார். இது போல பொது சேவை துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்களது அழகினால் புகழ்பெறுவது இது முதல் முறை அல்ல.அண்மையில் தாய்லந்தில் 24 வயது ஒருவர் பல ஆண்களின் மனத்தைக் கொள்ளை கொண்டார். அதில் சிலர், அவரால் பராமரிக்கப்படவேண்டும் என்பதற்காகக் கால்களை உடைத்துக்கொள்ளத் தயார் என்று கூறியுள்ளனர்

F] பாகிஸ்தானின் வஸ்ரிஸ்தான் பகுதிக்கு முதல்முறையாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் குழு சென்றது

G] சீன அதிபர் அடுத்த வாரம் அமெரிக்கா பயணம் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
எலியும் பூனையுமாக ஏர்இந்தியா – சிவசேனா எம்பி! மாற்று பெயர்களில் டிக்கெட் எடுக்க முயற்சி முறியடிப்பு

H] விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானது மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

I] பீகாரில் கூட்டணி கட்சியின் பெண் எம்.எல்.சி.யிடம் தவறாக நடந்து கொண்ட பா.ஜனதா எம்.எல்.சி. சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்

♈🇮🇳 🌴 சரக்குந்துகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

♈🇮🇳 🌴 போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் அழைத்து பேச வேண்டும்! கொ.ம.தே.க.ஈஸ்வரன்

♈🇮🇳 🌴 ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்த தினகரன் ஆதரவாளர் கைது

♈🇮🇳 🌴 சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு பைக் ஷோரூமில், இங்கு பிஎஸ்-3 விற்பனைக்குஇல்லை. பிஎஸ்-4 மட்டுமே விற்பனைக்கு என்று நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்

♈🇮🇳 🌴 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடராஜபுரம் தெருவில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டவர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

♈🇮🇳 🌴 வங்கதேசத்துக்கு இந்தியா 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகையை கடனாக வழங்கவுள்ளது. அடுத்த வாரம் டெல்லி வரவிருக்கும் பங்களாதேஷ் அதிபர் ஷேக் ஹசீனா வருகையின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது

♈🇮🇳 🌴 தமிழக நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி ஆதிக்கம்: மீண்டும் தார் சட்டியை எடுக்கவேண்டுமா? கி.வீரமணி எச்சரிக்கை

♈🇮🇳 🌴 விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் சார்பில் சவப்போராட்டம் நடைபெற்றது

♈🇮🇳 🌴 வருவாய் முக்கியமா? உயிர் முக்கியமா? தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

♈🇮🇳 🌴 இந்திய துணை தேர்தல் கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா வியாழக்கிழமை சென்னை வந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.இன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சார பேனரை பார்வையிட்டார்

♈🇮🇳 🌴 ரஜினிகாந்த் வீட்டில் மலேசிய பிரதமர்

♈🇮🇳 🌴 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்!

♈🇮🇳 🌴 ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கியதன் காரணம் என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி

♈🇮🇳 🌴 கலைஞரின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்: மு.க.ஸ்டாலின்

♈🇮🇳 🌴 சென்னையில் 14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ள வைத்த தனியார் பள்ளியின் தாளாளரும், அத்தை கணவருமான சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

♈🇮🇳 🌴 நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.11.30 மணியளவில் இந்த விழாவில் கமல் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். மலேசியா பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு 12.00 மணிக்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வருகை தந்த ரஜினியும், புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்

♈🇮🇳 🌴 வர்த்தக முடிவில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 26 புள்ளிகள் சரிந்து 29,620 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1 புள்ளி சரிந்து 9,173 புள்ளிகளாக உள்ளது

♈🇮🇳 🌴 ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி தந்தது பற்றி அரசுக்கள் விளக்கம் தரவேண்டும்: இந்திய கம்யூ.,

♈🇮🇳 🌴 இலங்கை சிறைகளில் இருந்து இந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை

♈🇮🇳 🌴 தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நாளை முதல் மூட உச்சநீதிமன்றம் உத்தரவு

♈🇮🇳 🌴 உத்திர பிரதேசத்தில் பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

♈🇮🇳 🌴 விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஆக்டோபர் 20-ம் தேதி வரை பதிவான வீட்டு மனைகளை விற்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பதிவுக்கு விதித்த தடையை கடந்த 28-ம் தேதி தளர்த்தியது உயர்நீதிமன்றம். தடை உத்தரவை உயர்நீதிமன்றம் தளர்த்தியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் மேல்முறையீடு செய்துள்ளார். விளை நிலஙகள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்

♈🇮🇳 🌴 தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்துள்ளது. மேலும் உயிரியியல், வணிக கணித தேர்வுகள் எளிதாக இருந்தாக 12-ம் வகுப்பு மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் முடிவு மே 12ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

♈🇮🇳 🌴 தமிழக விவசாயிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

454total visits.