விவேகம் – திரை விமர்சனம்

0
211

அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாருடன் விவேக் ஒபராய் , காஜல் அகர்வால் , அக்ஷர, கருணாகரன் … உள்ளிட்டோர் நடிக்க , சத்யஜோதி பிலிம்ஸ் செந்தில் தியாகராஜன் , அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் ‘சிவா’இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளி வந்திருக்கும் ஆக்‌ஷன் படம்  #விவேகம்

வீரம், வேதாளம் என்ற இரு படங்களை கொடுத்த சிவா, முற்றிலும் மாறுபட்டு ஒரு ஹாலிவுட் திரைபடத்திற்கு இனையாக இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் புது முயற்சியாக தொன்னூறு சதவிகிதம் படம் வெளிநாட்டில் படபிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவை அணு அயுதங்கள் கொண்டு தகர்க்க நினைக்கும் சர்வதேச சதிக்காரர்களுக்கு இந்தியாவை அணு அயுதங்கள் கொண்டு தகர்க்க நினைக்கும் சர்வதேச சதிக்காரர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார் சர்வதேச போலீஸில் பணிபுரியும் விவேக் ஒபராய். அதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் அஜீத் குமார். படத்தின் கதை மொத்தமும் இந்தியாவை பாதுகாக்கும் இராணுவ வீரராக களமிறங்கி அசத்துகிறார்கள் அஜீத், விவேக் ஓபராய். இந்த மொத்தக் கதையையும் இந்தியாவிலேயே எடுக்காமல் இயற்கை எழில் கொஞ்சும் ஐரோப்பா – செரிபியாவில் படமாக்கியிருப்பது புதுமை.

அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.

அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்‌ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.

அக்‌ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும்.

இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்‌ஷராவை கண்டுபிடிக்கிறது. அக்‌ஷரா என்ன செய்தார்? அஜீத் மீது வீண்பழி சுமத்தப்பட்டது எதற்கு? நண்பர்களே எதிரிகளாக மாறியது எப்படி?
மறுபடியும் அஜீத் அதை முறியடிப்பது தான் கதை

” போராடாம அவன் போகவும் மாட்டான் சாகவும் மாட்டான் … “, ” உங்க பார்வையில படக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா அவன் நிழலைக்கூட நெருங்க முடியாது . ” என்றெல்லாம் இவர் அஜீத்தை புகழ்ந்து பேசிக் கொண்டே அவரை போட்டுத்தள்ள பார்க்கும் இடங்களில் விவேக் ஓபராய் தன் நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். :

“கடவுள் எந்த ரூபத்தில் வந்து காப்பாற்றுவார்னு தெரியாதும்மா … இப்ப நம்ம குழந்தை ரூபத்துல வந்திருக்கிறார். ” , “பயத்துக்கு பாஷை கிடையாது … “, “வாழ்க்கையில இழக்கக் கூடாதது இரண்டு விஷயம் ஒன்னு அப்பா, அம்மாவின் அன்பையும் , இன்னொன்று நல்ல நண்பனின் நட்பையும் இழக்கவேக் கூடாது.” , “காரணம் சரியா இருந்தா , அந்த கடவுள் துணை இருப்பார் ….என்நண்பா , இதுவரை என் கூட இருந்து தானே பார்த்திருப்பா …. எதிர்த்து நின்னு பாரு ….”, “நட்புல சந்தேகம் கூடாது சந்தேகம் வந்தா அது நட்பே கிடையாது … ” அஜீத் பன்ச் வசனங்கள்..

காஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் BGMபடத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. வெற்றியின் சிறந்த ஒளிபதிவில் இன்னும் படத்திற்கு கூடுதல் மெருகேற்றியிருக்கிறார் ஹாலிவுட்டிற்கு இனையாக சொல்லலாம்.

நிறைய காட்சிகளை மக்களுக்கு புரியும் அளவிற்கு சரியாக கட் செய்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.

சண்டை காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருந்தாலும், படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பரப்பரப்பாக இருந்தாலும் விவேகத்தில் வேகம் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப அதிகப்படுத்தி இருக்கலாம்.

-கண்ணம்மா

4101total visits.