நாங்கள் இருக்கிறோம் – திட்டத்தில் இணையுங்கள்

0
45

*நாங்கள் இருக்கிறோம்*

இன்று சர்வதேச குழந்தைகள் தினம் – நவம்பர் 20. கஜா புயலால் பல குடும்பங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள். சில புகைப்படங்களை பார்க்கக்கூட முடியாத சூழல். குழந்தைகளும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். தற்போதைய தேவை உணவு, உடை, தங்க இடம், மின்சாரம். இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் இரண்டு வாரங்களேனும் (இன்னும் அதிகமாகவும்) எடுக்கும். குழந்தைகள் இரண்டு வாரங்களில் பள்ளிக்கு திரும்புவார்கள். பள்ளிப்பைகளயும் இழந்துள்ளார்கள். அவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் அதிகம் தேவைப்படும்.

புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் ஆளுக்கு ஒரு நோட்டு (அதற்கு மேலும்) கொடுத்து உதவ அறிவுறுத்தலாம். பள்ளிகள் இதனை மேற்கொள்ளலாம், வகுப்பில் ஆசிரியர்கள் இதனை முன்னெடுக்கலாம், பெற்றோர்களும் கூட்டாக இதனை செய்யலாம். காலியான நோட்டு புத்தகத்தின் கடைசி பக்கத்தில் “நாங்கள் இருக்கிறோம்” + குழந்தை பெயர் , ஊர் மட்டும் என எழுதி திரட்டவும். நிவாரணப்பொருட்கள் இந்த பகுதிக்கு சென்று கொண்டே இருக்கின்றது. மொத்தமாக திரட்டியும் ஒன்றாக அனுப்ப முயலலாம். இனியன் கொடுத்த இந்த யோசனையை துரிதமாக செயல்படுத்துவோம்.

நம் குழந்தைகளுக்கும் கொடுத்து உதவும் பழக்கத்தை அதிகப்படுத்துவோம்.

நிவாரணங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள் மற்றும் தொடர்புகளுக்கு.

1. தஞ்சாவூர் – ஷேக்முக்தார்
M. Sheikh Mukhtar
Mint Foods and Spices conceptual Family Restaurent
196, AVP Alagammal Nagar,
Nilagiri South,
Near Indian Bank,
Thanjavur New Bus Stand.

சேக் முக்தர் 9940959186,
இனியன் 8190049738

2.Nagapattinam வாசல் பயிற்சி மையம், 265, பப்ளிக் ஆபிஸ் ரோடு, ஏழைப் பிள்ளையார் கோயில் அருகில், வெளிப்பாளையம், Nagapattinam town, 611001

பிரேமா ரேவதி – 94425 49411

(Forward to teachers,school management, parents )
– விழியன்

#கஜா
#நாங்கள்_இருக்கிறோம்

1356total visits,2visits today