சாய் பல்லவியின் புது ஹீரோ யார்??

0
34

“வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க” “ஒரு கல் ஒரு கண்ணாடி” ” சிவா மனசில சக்தி” இந்த படங்களில் சந்தானம் இரண்டாவது கதாநாயகன் என்ற அளவிற்கு காமெடியில் கலக்கி இருந்தார். இந்த படங்கள் அனைத்தும் இயக்கியவர் டைரக்டர் ராஜேஷ்.

தற்பொழுது ராஜேஷ் டைரக்‌ஷனில் ஹீரோவாக நடிக்க சந்தானம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. தேனாண்டாள் பிலிம்ஸின் கால தாமாதம் காரணமாக இப்பொழுது “பிரபுதேவா ஸ்டுடியோ” பிரபுதேவா அவர்கள் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தயாரிப்பு நிறுவனம் மாறியதற்கு காலதாமதம் மட்டுமே காரணமென சொல்லப்பட்டு இருக்கிறது.

தமிழ்ப்படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர் சங்கம்  பிரபுதேவாவிற்கு  தடை விதித்திருந்தது. ஆனால் தற்பொழுது இந்த படத்தை தயாரிக்க போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது..

ஹீரோயினாக “சாய்பல்லவி” தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக முடிவாகவில்லை.

-மஞ்சு

1473total visits,4visits today