தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் யார் யாருக்கு?

0
32

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (சைமா) விழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் அபுதாபியில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்பட கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். நடிகர், நடிகைகளின் நடன நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. தமிழ் விருது நிகழ்ச்சிகளை நடிகர் சதீஷ், தன்யா தொகுத்து வழங்கினர். விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கலை சேவைக்காக தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுக்கான சிறந்த என்டர்டெயினர் விருது விஜய்க்கு தரப்பட்டது.

சிறந்த படம்

தமிழ்: இறுதிச் சுற்று
தெலுங்கு: பெல்லி சூப்புலு
மலையாளம்: கம்மட்டி பாடம்
கன்னடம்: கிரிக் பார்ட்டி

சிறந்த இயக்குனர்

தமிழ்: அட்லீ (தெறி)
தெலுங்கு: வம்சி பய்டிபல்லெ (ஊபிரி)
மலையாளம்: வியாசக் (புலி முருகன்)
கன்னடம்: ரிஷப் ஷெட்டி (கிரிக் பார்ட்டி)

சிறந்த நடிகர்

தமிழ்: சிவகார்த்திகேயன் (ரெமோ)
தெலுங்கு: ஜூனியர் என்டிஆர் (ஜனதா கேரேஜ்)
மலையாளம்: மோகன்லால் (புலி முருகன்)
கன்னடம்: சிவராஜ்குமார் (சிவலிங்கா)

சிறந்த நடிகர் (விமர்சகர் விருது)

தமிழ்: மாதவன் (இறுதிச்சுற்று)
தெலுங்கு: நானி (கிருஷ்ண காதி வீர பிரேம கதா)
மலையாளம்: நிவின் பாலி (ஆக்‌ஷன் ஹீரோ பிஜு)

சிறந்த நடிகை

தமிழ்: நயன்தாரா (இருமுகன்)
தெலுங்கு: ரகுல் பிரீத் சிங் (நன்னக்கோ பிரேமதோ)
மலையாளம்: நயன்தாரா (புதிய நியமம்)
கன்னடம்: ஸ்ரத்தா ஸ்ரீநாத் (யூ டர்ன்)

சிறந்த நடிகை (விமர்சகர் விருது)

தமிழ்: வரலட்சுமி (தாரை தப்பட்டை)
மலையாளம்: ஆஷா சரத் (அனுராக கரிக்கினிவெள்ளம்)
கன்னடம்: பாருல் யாதவ் (கில்லிங் வீரப்பன்)

காமெடி நடிகர்

தமிழ்: யோகி பாபு (ஆண்டவன் கட்டளை)
தெலுங்கு: பிரியதர்ஷி
மலையாளம்: ஜோஜு ஜார்ஜ்
கன்னடம்: ரவிசங்கர் கவுடா

வில்லன்

தமிழ்: திரிஷா (கொடி)
தெலுங்கு: ஜெகபதி பாபு
மலையாளம்: செம்பன் வினோத் ஜோஸ்
கன்னடம்: வைஸ்த சிம்ஹா

துணை நடிகர்

தமிழ்: பிரகாஷ்ராஜ் (மனிதன்)
தெலுங்கு: ஸ்ரீகாந்த்
மலையாளம்:ரெஞ்சி பணிக்கர்
கன்னடம்: சந்தன் அகர்

துணை நடிகை

தமிழ்: ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை)
தெலுங்கு: அனசுயா
மலையாளம்: லட்சுமி ராமகிருஷ்ணன்
கன்னடம்: ராதிகா சேதன்

அறிமுக நடிகர்

தமிழ்: காளிதாஸ் ஜெயராம் (மீன் குழம்பும் மண் பானையும்)
தெலுங்கு: ரோஷன்
மலையாளம்: ஷனே நிகம்
கன்னடம்: நிகில் குமாரசாமி

அறிமுக நடிகை

தமிழ்: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
தெலுங்கு: நிவேதா தாமஸ்
மலையாளம்: ரஜிஷா விஜயன்
கன்னடம்: ரஷ்மிகா மன்தனா

இசை அமைப்பாளர்

தமிழ்: ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
தெலுங்கு: தேவிஸ்ரீ பிரசாத்
மலையாளம்: பிஜிபல்
கன்னடம்: அஜனீஷ் லோகநாத்

பாடகர்

தமிழ்: அனிருத் (செஞ்சிட்டாளே – ரெமோ)
தெலுங்கு: சாகர்
மலையாளம்: சூரஜ் சந்தோஷ்
கன்னடம்: அர்மான் மாலிக்

பாடகி

தமிழ்: சித்ரா (கொஞ்சி பேசிட – சேதுபதி)
தெலுங்கு: ரம்யா பெஹரா
மலையாளம்: சித்ரா
கன்னடம்: இந்து நாகராஜ்

பாடலாசிரியர்

தமிழ்: மதன் கார்க்கி (மிருதன்)
தெலுங்கு: ராம்ஜோகயா சாஸ்திரி
மலையாளம்: சந்தோஷ் வர்மா
கன்னடம்: தனஞ்ஜெய் ரஞ்சன்

2771total visits.