மஞ்சள் – நாடக நிகழ்வு

0
77

பொதுவாக நாகரிகமான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை நாம் கொண்டிருந்தாலும், அதனை அசைத்துப் பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மில் உண்டு. அதில் முதன்மையான விஷயம் மனித மலத்தை மனிதர்களே அகற்றும் இழிவு.

சமூகத்தில் தான் ஒரு அங்கம் என்ற பிரக்ஞையையே அற்று, மாறா அவலத்துடன் ஒரு மனிதத் திரளை அழுத்தி வைத்திருக்கும் துயரம்.இதனைப் போக்க எத்தனையோ விதமான முயற்சிகள் ஆங்காங்கே, தொடர்ந்து தனிமனிதர்களாலும், சில இயக்கங்களாலும் முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால் அதனை ஒன்று திரட்டி, ஒரு மாபெரும் மக்கள் ஆதரவு இயக்கமாக முன்னிறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.அதனை வலியுறுத்தி, இந்த சிவில் சமூகத்தை நோக்கிய வலுவான ஒற்றைக் குரலாக அந்த கோரிக்கையை ஒலிக்க வைக்க, இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மற்றும் நமது தோழர்களின் ‘ஜெய்பீம் மன்றம்’ இணைந்து ஒரு மகத்தான முன்னெடுப்பைச் செய்கிறது.

அதன்படி கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி, பத்திரிக்கையாளர் லஷ்மி பாஷா சிங் எழுதிய ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ என்னும் நூலைத் தழுவி, எழுத்தாளர் ஜெயராணி உருவாக்கியுள்ள ‘மஞ்சள்’ என்னும் நாடகம், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், ‘கட்டியக்காரி’ குழுவினரால் இன்று மாலை 5 மணிக்கு அரங்கேற்றப்பட உள்ளது. அனுமதி இலவசம்..!

இந்த மாபெரும் பிரச்சாரத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளும் பொருட்டு, நேரமும் வாய்ப்பும் உள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மகிழ்ச்சி..!

 

 

4550total visits.