யுகங்களின் புளிப்பு நாவுகள்

0
78

தோழர் மு ஆனந்தனின் ”யுகங்களின் புளிப்பு நாவுகள்”

அகநி யின் வெளியீடாக அழகிய வடிமபைப்பில் மிளிர்கிறது.  சமுகத்தின்அ வலத்திற்குள் நுழைந்து போராடும் ஒரு போராளியின் கவிதைத் தொகுப்பாகவே நான் இதைப் பார்க்கிறேன்.

சமுகப் போராளியின் கவிதைகள், வெறும் வார்த்தை ஜாலங்களுக்குள்ளும், வர்ணனைகளுக்குள்ளும் அடங்கி விடுவதில்லை. கோபங்களையும், அவலங்களையும் பதிவு செய்யும் ஆவணங்களாகவே இருக்கும். அதன் நியாயங்களிலிருந்து சற்றும் விலகாமல் நிற்கிறது இதன் கவிதைகள்.  ஒவ்வொரு கவிதையுமே ஒரு சேதியை சொல்லிவிட்டு நகர்கிறது…மண்டையோட்டைப் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்,

‘கபாலங்களின் கண்களிலிருந்த குழிகள்
என்னிடம் ஏதோ பேசுகிறது
……
எதைக் குறித்தோ எழுதச்சொல்கிறது…’
வாழ்கிற எலும்புக்கூடுகள் குறித்தா ,
…..
மண்ணாள்கின்ற பணங்களைப் பற்றியா
சமூகப் பிணங்களைக் குறித்தா
எதைக் குறித்து எழுதச் சொல்கிறது. ‘

அவரது கற்பனை சிறப்பிற்கு ‘அப்பா முகமூடி ‘என்ற கவிதையில்

‘இருள் போர்த்தி
ஒருக்களித்துறங்கும்
படுக்கையறையின் போர்வையை உருவினேன்’ – என்று சொல்கிறார். போர்வை தூங்குவதாகக் கற்பனை செய்தது சிறப்பாகவே இருக்கிறது.

‘மெக்காலேவின் பிள்ளைகள்‘ என்ற கவிதையில் – ஒரு குழந்தை தான் படிக்காத புத்தகத்திற்குத் தாயாகவே மாறிவிடுகிறது.

ஒரு விலை மகளின் பார்வை வெளியாக ‘என் மகள் பெரியவளாகி’ என்ற கவிதையில் ‘அனைத்தையும் கழற்றுகிறவன், இத்துணூண்டை,
அணிந்து கொள்ளவா சம்மதிக்கிறான்? என்று அவளின் இடத்தில் நின்று வினாத் தொடுக்கிறார்.

கவிஞரின் விவசாய நேர்த்தியைச் சொல்லி செல்லும் கவிதைதான் ‘கொழவு எருத்து’ அவருக்கு விவசாயம் பற்றிய தெளிவு உண்டென்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

ன்னு குட்டி ஸ்கூலுக்குச் செல்லும் போது அவளின் விளையாட்டு நாயகர்களோடு செல்வதும் , பதிவெடுப்பின் போது அவர்களும் “எஸ் மேம்” சொல்வதாய் ஒரு கவிதை. குழந்தைகளின் பால்யத்தைத் திருடும் போக்கை எளிமையாகச் சொல்லிவிட்டு நகர்கிறார்.

பெண்ணின் கண்களை ,’விழி நுங்கில் வெம்மை ஒழுக’ என்று நுங்கோடு ஒப்பிடும் கவிதை ‘நுங்கு வாங்கலையோ..நுங்கு ‘ -அழகான சித்திரம் . இது கூட ஒரு நுங்குக்காரியின் வலியைப் பதிவு செய்கிறது.

’அம்மாக்களின் செவி பூக்கள்’ என்ற கவிதை யதார்த்தத்தின் பதிவு. அம்மாக்களின் கம்மல்கள் பற்றி …..

மற்றவை நேரில்’ கவிதையின் கடைசி வரிகள் வலியைப் பதிக்கிறது,

‘துளசியின் பூத உடலில்
ஆர்ப்பரிக்கும் அடர் மௌனம்.’

இந்த நூலிலுள்ள ஒவ்வொரு கவிதையையும் , நாம் சிந்திக்காமல் நகர்த்த முடியாது.

மக்கள் சேவையில் இணைத்துக் கொள்ளும் நண்பர். மு.ஆனந்தன். அவர்கள் இனியும் தொடர்ந்து எழுத வேண்டும். இது போன்ற ஆக்கங்கள் காலத்திற்கும் பேசப்படும்.

– மு.முகமது பாட்சா

1567total visits.