வெளியிடப்பட்ட நேரம்: 25-Sep-2020 , 06:26 AM

கடைசி தொடர்பு: 25-Sep-2020 , 06:26 AM

கறுப்பி - பாகம் - 8

karuppi

நான் அழகியில்லையா…” எனக் கேட்டாள் லெபனானிய அழகியான லீமா.

“சும்மா சொன்னேன்… நீ அழகிதான்… பெல்லி டான்ஸ் ஆடுறவ மாதிரி இருக்கே… சரி… எல்லாரும் நம்மளைத்தான் பாக்குறாங்க… என்னடா அரபிக்காரி ஒரு இந்தியன் கூட கடலை போட்டுக்கிட்டு இருக்காளேன்னு…”

லீமா சிரித்தாள்.

“இங்க யாரும் அப்படிப் பார்க்க மாட்டாங்க ச்சிவ்வா… அவங்க பார்வை வேற… இந்தா அந்தப் பக்கம் என்னையப் பார்க்குற மாதிரி இருக்கான் பாரு ஒருத்தன்…. அவன்தான் கொஞ்ச நேரம் போன் நோண்டுறதும் என்னையைப் பாக்குறதுமா இருக்கான்… என்னையன்னா என்னோட மார்பை… நானும் போயிட்டுப் போறான்னு பாக்குற மாதிரி உட்கார்ந்துதான் இருக்கேன்… என்ன செய்ய… ஏதோ ஒரு ஏக்கம் அவனுக்குள்ள… அதை இதைப் பார்க்கிறது மூலமாத் தீர்த்துக்கிறான்…” என்றவள் காபிச்சினோவை உறிஞ்சியபடி போனில் கணவனுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள். ஒருவேளை ஒருத்தன் என் மார்பையே முறைக்கிறான்னு கூட அவள் அனுப்பியிருக்கலாம்… அவனும் எஞ்சாய் என்றோ அல்லது வேறு விதமாகவோ பதில் அனுப்பலாம்.

“என்ன மயிரு ஏக்கம் அவனுக்கு… இவன மாதிரித்தான் பாகிஸ்தானிங்க… ஒரு பொண்ணு அவனுங்களைக் கிராஸ் பண்ணிப் போயிடக்கூடாது கண்ணாலே கற்பழிச்சிருவானுங்க… பீச்சுல போயி நின்னுக்கிட்டு பொண்ணுங்க குளிக்கிறதையே பார்ப்பானுங்க… இவனுங்க பார்க்கிறதாலதான் பேமிலி பீச்சுன்னு சுத்தி அடச்சி வச்சி குளிக்க வைக்கிறானுங்க… பார்வையிலேயே ஒருத்தியைக் கர்ப்பமாக்கிடுவானுங்க… காமப் பிசாசுங்க…”

“அவனுக பீச்சுல போயி நின்னுக்கிட்டு பார்க்க மட்டுமா செய்வானுங்க… கை….”

“போதும் விடு… நீ விட்டா விவரமாச் சொல்லுவே போல…”

“ஹா… ஹா… உண்மையைப் பேச விடமாட்டியே…” என்றவள் போனில் வந்த அழைப்புக்கு அரபியில் பேச ஆரம்பித்தாள்.

சிவா மெல்ல சுற்றிலும் நோட்டமிட்டான் அவள் சொன்னது போல் அந்த அரபிக்காரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு அடுத்து பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் போல் மூவர்… பெண் நடுவில் அமர்ந்திருந்தாள்… அவள் கையிலிருக்கும் போனில் ஏதோ சுவாரஸ்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே எதோ ஒரு வகைக் காபி ஆறிக் கொண்டிருந்தது. அதைப் பற்றிய சிந்தனையில்லாமல் அமர்ந்திருந்தனர். அந்தப்பக்கம் ரெண்டு அரபிப் பெண்கள் ஏதோ பேசிச் சிரித்தபடி… இன்னொரு பக்கம் மலையாள ஸ்கூல் பசங்க… ஆணும் பெண்ணும்… மிக நெருக்கமாய்… அவனின் கை அவளினிடையில் விளயாடியது… மற்ற நாற்காலிகள் எல்லாம் காலியாய்த்தான் இருந்தது. அரபி இசை மெல்ல வழிந்து கொண்டிருந்தது.

“ம்… ச்சிவ்வா… ஒன் மோர் காப்பிச்சினோ…” என்றாள் போனை வைத்துவிட்டு.

“ஐய்யோ… இன்னொன்னா… எனக்கு வேண்டாம்… நீ வேணும்ன்னா குடி…” என்றான்.

“சரி வா… போகலாம்” என்றவள் பணம் கொடுக்கப் போனவனைத் தடுத்துப் பணம் கொடுத்தாள்.

சூப்பர் மார்க்கெட்டில் அவளுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கிக் கொண்டு அவனை இறக்கிவிட வரும் வழியில் “ஆண்கள் மட்டும்தான் தப்பானவர்கள் என்பதாய் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு ச்சிவ்வா… ஆண்களிலும் நல்லவங்க இல்லாமலா இருக்காங்க… பட் கெட்டவங்க சதவிகிதம் கூட… பெண்கள் நூறு சதவிகிதம் சுத்தமானவங்கன்னு சொன்னா அதை விட நகைச்சுவை வேறு இல்லை… இன்னைக்கு பெண்களும் தப்புப் பண்றாங்க ச்சிவ்வா… அதிகம் வெளியில தெரியலை… பட் ஆண்களோட கம்பேர் பண்ணும்போது சதவிகிதம் குறைவு… அவ்வளவே” என்றாள்.

“ஆமா… இதை நானும் ஏத்துக்கிறேன்… ஆனா பாலியல் ரீதியா எந்தப் பெண்ணும் எந்த ஆணையும் துன்புறுத்தலையில்ல…”

“யார் சொன்னா… அதெல்லாம் பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க… என்ன ஆண்கள் பெண்களோட அந்தரங்கமா இருக்குறதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்துல போட்டு விட்டுடுறாங்க… பெண்கள் இன்னும் அதைச் செய்யலை… அவ்வளவுதான் வித்தியாசம்… நீ வருத்தப்படுறியே நானும் பெண்தானேன்னு அந்தக் கறுப்பி கேட்டாள்ன்னு… அதே மாதிரி நானும் ஆண்தானேன்னு எவனாச்சும் யார்க்கிட்டயாச்சும் கேட்டிருக்கலாம்… அது வெளிய தெரியலை… அதுவும் வெளிய தெரியும் காலம் கண்டிப்பா வரும்… இன்னைக்குச் சூழல்ல ஆண்களும் பெண்களும் தவறுகளைச் செஞ்சிக்கிட்டுத்தான் இருக்காங்க…“ என்றாள்.

“ம்… ஆமா… பெண்களைப் பொறுத்தவரை தப்பைச் செஞ்சிட்டு வெளிய தெரிய வரும் போது ஆண்கள் மீது தூக்கிப் போட்டிருவாங்க…. இப்படிப்பட்ட பெண்களை நான் நிறையப் பார்த்திருக்கிறேன்.” என்றான்.

“ச்சிவ்வா… உனக்குத் தெரியுமா செக்ஸ் வச்சிக்கிறதுல சாதனை படைத்த பெண்கள் இருக்காங்க… இங்கிலாந்து அழகி நிக்கி லீன்னு ஒருத்தி செக்ஸ் வச்சிக்கிறதுல சாதனை படைக்கணும்ன்னு நினைக்கிறாளாம். அவளுக்கு முதல் அனுபவம்… அது அனுபவமில்லை பாலியல் பலாத்காரம் பதினாறு வயசுல…”

“தன்னைக் கெடுத்த ஆண்களைப் பலி வாங்க அவள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்… தமிழ்ச் சினிமாவில் வரும் நாயகிகள் மாதிரி….” இடைமறித்தான் சிவா.

“இரு… முழுசாச் சொல்ல விடு…”

“ம்...”

“அந்த முதல் அனுபவம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சாம்… சோ இதுல சாதிக்க நினைச்சிருக்கா… தினமும் ஒருத்தன்னு ஆரம்பிச்சி… பதினெட்டு வயசுல எண்ணூறு பேரோட உடலுறவு பண்ணினவளா இருந்திருக்கா… அவ அதுக்குன்னு வீடு, ஹோட்டல் எல்லாம் போறதில்லை… பிடிச்சவனைச் செலக்ட் பண்ணி ரோடு, கடற்கரை, பால்கனி, கிளப், சினிமா தியேட்டர்ன்னு எல்லா இடத்திலும் செய்வாளாம்.”

“அடிப்பாவி…”

“என்ன அடிப்பாவி… அது ஒரு கிக்தான் இல்லையா… சரி விஷயத்துக்கு வா… இன்னும் சாதிக்கணும்ன்னு ஆசைப்பட்டவ ஒரு நாள்ல ரெண்டு, சில நேரம் நாலுன்னு எல்லாம் அடிச்சி ஆடி தன்னோட இருபத்தியோரு வயசுல ரெண்டாயிரத்து முன்னூறுக்கிட்ட நெருங்க, இருபத்தஞ்சு வயசுல ஐயாயிரம்ங்கிற மைல் கல்லை எட்டியிருக்கிறாள். இதுக்கு அவளுக்கு ஒன்பது வருசமாயிருக்கு… இதையெல்லாம் டைரியில எழுதிக்கிட்டு வர்றாளாம்... கூட இருந்தவன் எப்படிச் செஞ்சான்னு மார்க்கும் போட்டு வைக்கிறாளாம்….”

“இது ஒரு சாதனை… த்தூ…”

“இன்னும் இருக்கு… நிக்கி ஒரு செக்ஸ் அடிமைன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க… ஆனா அவ அதை ஒத்துக்கலை… நான் செக்சியான பொண்ணு… என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு என்னுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆசை வரும் ஆனால் நாந்தான் ஆளைத் தேர்வு செய்வேன். இதுவரை யாருடனும் ஆணுறையில்லாத உறவு வைத்துக் கொண்டதில்லை… கருத்தடை மாத்திரை போடுவேன்… ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணிப்பேன். இது எனக்குப் பிடிச்சிருக்கு… விதவிதமான உறவுல ஒரு மகிழ்ச்சி… எனக்கு இது தேவையா இருக்குன்னு ஓப்பனாச் சொல்லியிருக்கா…”

“அது சரி… இம்புட்டு விஷயம் சேகரிச்சிருக்கிற நீ இதுல தீசிஸ் கூட பண்ணலாம்…” சிரித்தான்.

“இரு இன்னும் முடிக்கலை… ஆனா இவ எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் இவளால உலக சாதனை பண்ண முடியாதாம்…”

“இவளுக்கு மேல் ஒருத்தியா…?” ஆச்சர்யமாகக் கேட்டான்.

“ம்… அவ யாருன்னா… கி.மு. 14-ல் ரோமை ஆண்ட பேரரசர் அகஸ்டஸின் மகள் ஜூலியா, அழகு, அறிவு, படிப்பு என எல்லாம் ஒருங்கே பெற்றவள். சின்ன வயசுலயே ஆண்கள் மீதான் மோகம் அதிகம். வயசுக்கு வரும் முன்பே செக்ஸ் வச்சிக்க ஆரம்பிச்சிட்டாளாம். ஒரு கட்டத்துல அவளோட உறவு கொள்ளாத ஆண்களே ரோமில் இல்லை என்ற நிலை வந்தபோது வெளிநாட்டு வியாபாரிகள் தங்கும் இடம் போய் இரை தேட ஆரம்பித்திருக்கிறாள்… அவள் உடலுறவு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை எண்பதாயிரமாம்…”

“என்னாது… எண்பதாயிரமா?”

“என்ன தலை சுத்துதா..?”

“வேற வேலையே பாக்கலையோ… தெருநாய் மாதிரித் திரிச்சிருக்கா ஒரு பேரரசனோட மகள்…”

“ம்… இதுல எவ்வளவு உண்மையின்னு தெரியலை… ஆனா அப்படித்தான் இருந்திருக்கான்னு அவளைப் பற்றிய குறிப்புச் சொல்லுது…”

“அப்ப நிக்கி தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் முதல் இடத்துக்கு சான்சேயில்லை…. ரெண்டாவதுதான்…”

“ம்… அந்த இடத்திலும் இப்ப ஒருத்தி இருக்கா… பிரெஞ்ச் நடிகை மெல்லி தூபோஸ்… இவளும் உடலுறவு விரும்பி… நிக்கி மாதிரியே டைரியில எழுதி வச்சிருக்கா… இதுவரை பதினாறாயிரத்து ஐநூறுக்கு மேல்… ஒருவேளை நிக்கி இவளை முந்தச் சான்ஸ் இருக்கு…” சிரித்தாள்.

“நமக்கெல்லாம் எங்கூரு நிக்கி கல்ராணியைத்தான் தெரியும்…”
“அவளும் இப்படித்தானா…?”

“சேச்சே… அவ நடிகை… எனக்கு ரொம்பப் பிடிக்கும்….” சிரித்தான்.

“இவ்வளவு விரிவாத் தேடியிருக்கே… இதுதான் பொழப்போ…?”

“அட ஒரு நியூஸ்ல பார்த்துத் தேட ஆரம்பிச்சேன்…. அதுல கிடைத்த தகவல்…”

ஜாலியாக அரட்டை அடிக்கும் லீமாவுக்குள் எத்தனையோ விஷயங்கள் புதைந்து கிடக்கு என ஆச்சர்யப்பட்ட சிவா, இதைப் பேச அவள் தயங்குவதே இல்லை என்பதை நினைத்து சந்தோஷப்பட்டான்.

அவனது கட்டிடத்தின் அருகில் இறக்கி விடப்பட்ட போது மணி எட்டை நெருங்கியிருந்தது. ஒரு கருப்பினப் பெண்ணுடன் ஒருவன் பேசிக் கொண்டு நின்றான். அவளின் உருவம் மலாமாவை ஞாபகப்படுத்தியது.

இதுவரை இறக்கி வைத்திருந்த பாரத்தை மீண்டும் சுமந்து லிப்ட்டுக்கு காத்திருந்தான்.

து கோடி ரூபாயா…?” சிவா ஆச்சர்யமாகக் கேட்டான்.

“ஆமாம்... ஊதுக்கு அதிகமாச் செலவு செய்வாங்க... நாங்கூட ரெண்டாயிரத்துக்கு என்னோட ஒய்ப்புக்கு வாங்கிக் கொடுத்தேன்... நைட்டுல... ஊது போட்டு... அதுக்கப்புறம் இருந்து பாரு... ம்…” எனக் கண்ணடித்தவர் “ஊருக்குப் போகும்போது சொல்லு என்னோட கிப்டா உனக்கு வாங்கித் தாரேன்...” எனச் சிரித்ததை நினைத்துப் பார்த்தான்.

ஊதுவின் அழகிய வாசனையை அவனும் உணர்ந்தும் இருக்கிறான். லீமாவின் உடைகள் கொடுக்கும் வாசம் எத்தனை அலாதியானது என்பதை நண்பர்களிடம் அடிக்கடி சிலாகித்திருக்கான்.

“ச்சிவ்வா… நீ குத்திக்கிட்ட (குட்டியை அரபிகள் குத்தி என்றுதான் அழைப்பார்கள்) என்ன கேட்டே… அவரு ஒரு வீடியோ வேற காட்டினாரு…. என்ன மேட்டர் படமா…?” லீமா சிரித்தாள்.

“லூசு எப்பப் பாத்தாலும் உனக்கு மேட்டர் நினைப்புத்தான்… பொண்டாட்டிய விட்டுட்டு வந்து கிடக்குற எங்களுக்குத்தான் தெரியும் இரவின் வலி… சரி… சரி… நீயும் தனியாத்தானே இருக்கே… உம்புருசனுக்கு விசா எடுத்து வந்துட்டுப் போச்சொல்லு… அப்பத்தான் நீ அடங்குவே… நீங்க போடுற ஊதைப் பற்றித்தான் கேட்டேன்…”

“என்னோட ஆளு வர்றேன்னுதான் நிக்கிறார்… பார்க்கலாம்… ஏற்பாடு பண்ணி கூட்டி வரலாம்ன்னு நினைக்கிறேன்… சரி அதைவிடு… ஆமா குத்தி என்ன சொன்னார் அதைப்பற்றி…”

குட்டி சொன்னதை அப்படியே சொன்னவன். கோடிகளில் விற்கும் ஊது பற்றிய வீடியோ காட்டினார் உண்மையா..? என்ற கேள்வியையும் அவளிடம் கேட்டான்.

லீமா பதில் சொல்லாமல் சிரித்தாள்.

“என்ன சிரிக்கிறே…? கோடியில விக்கிறது பொய்யா…”

“கோடி ரூபாய்க்கெல்லாம் ஊது இருக்குறது உண்மைதான்… ஆனால் எல்லா ஆண்களுமே ஊது பெண்களின் உடை வாசத்துக்கும் உடல் வாசத்துக்கும் மட்டும்தான்னு நினைக்கிறாங்க… அதுதான் குத்திக்கும் தெரிஞ்சிருக்கு… இந்த வயசுல குத்தி பொண்டாட்டிக்கு ஊது போட்டு செக்ஸ் வச்சிக்கிதாமா…” சிரித்தாள்.

“ஏய் அந்தாளுக்கு ரெண்டு தெரியும்ல்ல…”

“ம்… நாங்கூட மூணாவதுதானே… எங்க மதத்துல ஒண்ணு மட்டுமே இருக்கிறவங்க ஆச்சர்யமானவங்க… அதிசயமானவங்க… பெரும்பாலும் ரெண்டு இல்லாதவங்களே கிடையாது… ஆனா உங்க நாட்டுல அப்படியில்லைன்னு நினைக்கிறேன்…” எனச் சிரித்தாள்.

“ம்…”

“சரி அதை விடு… நீ ஊதுக்கு வா… ஊது செக்ஸ்க்கு மட்டுமானது இல்லை… உண்மையிலேயே அது எதுக்குப் பயன்படுதுன்னா….” பேச்சை நிறுத்தி சிவாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

-பரிவை சே.குமார்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=karuppi-part-7-by-parivai-se-kumar&i=10747

Related Articles