வெளியிடப்பட்ட நேரம்: 24-Jun-2019 , 11:19 AM

கடைசி தொடர்பு: 24-Jun-2019 , 11:19 AM

பக்கிரி - சினிமா விமர்சனம்

pakkiri

பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது என்பதைப் போலவே லாஜிக்கில்லா மேஜிக்கை எஞ்சாய் பண்ணனும் லாஜிக் பார்க்க கூடாது. இது மேஜிக்கான்னும் கேட்க கூடாது என்னும் தத்துவத்தை மனதில் வைத்து படம் பார்த்தால் பொழுதுபோக்கான படம் பக்கிரி.

த ஜார்னி ஆஃப் த பாகிர் படத்தின் தமிழ் டப்பிங் தான் பக்கிரி. தனுஷ் படம் என்னும் ஒற்றை அடையாளத்தோடு பார்க்கப் போகும் தமிழ் ரசிகர்களுக்கு தனுஷ் மட்டுமே படம் முழுவதும் வந்து விருந்து படைக்கிறார். விருந்து சிறப்பாக இருந்ததா இல்லையா என்பது ஒவ்வொரு ரசிகர்களின் தனித்தனி ரசிப்புத்தன்மை பொறுத்ததே.

கதை நாயகனே கதை சொல்லியாக ஆரம்பிக்கும் படம். பாரீஸ் போக ஆசைப்படும் அம்மாவின் ஆசை நிறைவேறாமலேயே செத்துப்போகிறார். அவரின் அஸ்தியை கரைக்க பாரீஸ் பறக்கும் மகன். அங்கிருந்து இங்கிலாந்து போறாரு, ஸ்பெயின் போறாரு, அங்கிருந்து லிபியா போறாரு, அப்புறம் மும்பை வராரு. எப்படி அங்கெல்லாம் போறாரு? என்பது தான் திரைக்கதை.

தனுஷ் நடத்திருந்தாலும் தமிழ் படம் பார்க்கும் உணர்வேயில்லை. தனுஷ் குரல் மட்டும் பழகியதால் கொஞ்சம் சமாளித்துக் கொள்ளலாம். அதுவும் உதட்டின் அசைவில் டப்பிங் படமென நிருபித்துக் கொண்டேயிருக்கிறது. தனுஷை தவிர தெரிந்த முகங்களேயில்லை.

அகதிகளாக நாடு விட்டு நாடு துரத்தியடிக்கும் மக்களுடைய பிரச்சனையையும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறியவர்கள் திருத்தப்பட வேண்டிய நிலையையும் கொஞ்சம் விளக்குகிறார்கள். மறக்காமல் ஒரு காதலும் இருக்கிறது.

பிண்ணனி இசையாலும், அழகான ஒளிப்பதிவாளரும் அடுத்தடுத்த நாடுகளுக்கு பறக்கும் படத்தொகுப்பாளரும் படம் கண்ணை விட்டும் காதை விட்டும் விலகி விடாமல் பார்த்துக்கொள்கிறது தொழில்நுட்பக்குழு. பிளைட்டயே ஓரிரு முறை தான் காண்பிக்கிறார்கள். மேப்பிலேயே நாடுகளை சுட்டி காட்டியும் சுற்றிக் காட்டியும் விடுகிறார்கள்.

ரசிகர்களை திரையை விட்டு கண்ணை எடுக்காமல் வைக்கும் வித்தை படத்தில் இருக்கிறது. விழித்துக் கொண்டே தூங்கினால் அதற்கு விதி விலக்கே இல்லை.

- கருத்த கிளி

Related Articles