வெளியிடப்பட்ட நேரம்: 13-Jul-2019 , 05:45 PM

கடைசி தொடர்பு: 13-Jul-2019 , 05:45 PM

மூன்று பேர் மந்திரி ஆனார்கள்

goa new minister

கோவாவில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய 10 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மற்றும் சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் ஆகியோர் இன்று மந்திரிகளாக பதவி ஏற்றனர்.


கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர்.


இதையடுத்து மந்திரிசபையில் மாற்றம் செய்து, புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க முதல்வர் பிரமோத் சாவந்த் முடிவு செய்தார். இதற்கு வசதியாக, ஏற்கனவே மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த கூட்டணி கட்சியினர் 4 பேரை இன்று நீக்கி முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டார்.இதைதொடர்ந்து, துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த மைக்கேல் லோபோ மற்றும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஃபிலிப்பே ரோட்ரிகுவேஸ், ஜெனிபர் மான்செராட்டே, சந்திரகாந்த் கவ்லேகா ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணியளவில் புதிய மந்திரிகளாக பதவியேற்றனர்.


அவர்களுக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவி பிராமாணமும் ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

Related Articles