வெளியிடப்பட்ட நேரம்: 24-May-2019 , 06:57 AM

கடைசி தொடர்பு: 24-May-2019 , 06:57 AM

மூன்றாம் இடம் பிடித்த நோட்டோ

images (2)

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு நோட்டா 3-ஆம் இடத்திற்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டின் 17-வது நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.  3-ஆம் இடத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி முதல் இடத்திலும், அதிமுக 2-ம் இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தன. ஆனால் 3-ஆம் இடத்திற்கு போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த அந்தஸ்தை "நோட்டா" பெற்றுள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில்  வாக்கு சதவீதத்தில் 1.64% பெற்று நோட்டா 3-ஆம் இடத்தில் உள்ளது. இதனால் தினகரன், கமல் ஹாசன், சீமான் ஆகியோர் விரக்தியில் உள்ளனர்.

Related Articles