வெளியிடப்பட்ட நேரம்: 28-Sep-2021 , 12:05 PM

கடைசி தொடர்பு: 28-Sep-2021 , 12:05 PM

எதிர்ப்புசக்தி நான்கு மடங்கு அதிகரிக்கும் தடுப்பூசிகள்

Covishield

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி, உருமாறிய கோவிட் வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி இந்தியாவில் 'கோவிஷீல்டு' என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது.

இதேபோல் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட்.

இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை இரு தவணைகளாக அடுத்தடுத்து செலுத்திக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை அறிய, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் அஜர்பைஜான் நாட்டில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்காக 100 தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆய்வு தொடங்கியது. முதலில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. அதன்பின், 57வது நாட்களில், 85 சதவீதம் பேருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Articles