வெளியிடப்பட்ட நேரம்: 06-Jun-2019 , 05:58 AM

கடைசி தொடர்பு: 06-Jun-2019 , 05:58 AM

50 ஐ ஏ எஸ் அதிகாரிகள் - இட மாற்றம்

ias officer



ஆந்திராவில் 9 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 50 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி  நடவடிக்கை எடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற ஒரு வாரத்தில் முதல்வரின் தனிச்செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது  ஐஏஎஸ் அதிகாரிகள் 50 பேரை இடமாற்றம் செய்து முதல்வர் ஜெகன்மோகன்  உத்தரவிட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக வெங்கடேஸ்வர பிரசாத், நிதித்துறை செயலாளர் நீரத்குமார் பிரசாத், நீர்ப்பாசனத்துறை  செயலாளராக ஆதித்யநாத் தாஸ், வேளாண்துறை செயலாளராக பூனம், பிற்படுத்தப்பேட்டோர் நல வாரிய சிறப்பு செயலாளராக கரிகால வல்லவன்,  மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளராக ஜவகர்ரெட்டி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

வீட்டுவசதித்துறை செயலாளராக அனந்தராமு,  இளைஞர் நல மேம்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு பிரவீன்குமார், கல்வித்துறை ராஜசேகர், போக்குவரத்து துறை மற்றும் சாலை மற்றும்  கட்டிட துறை செயலாளர் கிருஷ்ணபாபு, குழந்தைகள் நலத்துறை தயா மந்த்தி, நகர்புற வளர்ச்சித் துறை செயலாளர் சியாமள ராவ், மின்சார துறை  (பிரான்ஸ்ேகா) நிர்வாக இயக்குநகராக ஸ்ரீகாந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்சி, எஸ்டி நலவாரியத்துறை செயலாளராக என்.கே மீனா, மின்சார உற்பத்தி(ஜென்கோ) ஸ்ரீதர், உணவுத்து துறை ஆணையளராக கோனா சசீதர்,  உள்துறை செயலாளர் கிஷோர்குமார், விவசாயத்துறை சிறப்பு செயலாளராக மதுசூதன்ரெட்டி, மார்க்கெட்டிங் துறை ஆணையராக சித்தூர் மாவட்ட  கலெக்டராக உள்ள பிரத்யும்னா நியமிக்கப்பட்டுள்ளார். சித்தூர் மாவட்ட கலெக்டராக நாராயண பரத் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

கலால் துறை  ஆணையாளராக எம்.எம்.நாயக், தொழில்நுட்ப வளர்ச்சித்துறை இயக்குனராக ஹர்ஷவர்த்தன், விவசாயத்துறை சிறப்பு ஆணையாளராக பிரவீன்குமார்,  முதல்வர் சிறப்பு அதிகாரி முரளி, சிஆர்டிஏ கூடுதல் ஆணையாளராக விஜயா, போக்குவரத்து ஆணையாளராக ஆஞ்சநேயலு, வனத்துறை  ஆணையாளராக பியூஸ்குமார், இன்டர் கல்வித்துறை ஆணையாளராக ஷாந்திலால் டாண்டீ, நகராட்சித்துறை ஆணையாளராக விஜயகுமார், பஞ்சாயத்து ராஜ் கிராம வளர்ச்சித்துறை ஆணையளராக கிரிஜா சங்கர், டிஆர்பிஏ ஆணையாளராக லஷ்மி நரசிம்மன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 9 மாவட்ட கலெக்டர்  கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். விசாகப்பட்டினம் கலெக்டராக வினய் சந்த், நெல்லூர் கலெக்டராக சேஷகிரி ராவ், கிழக்கு கோதாவரி  கலெக்டராக முத்தியால் ராஜ், கர்னூல் கலெக்டராக வீரபாண்டியன், குண்டூர் கலெக்டராக சாமுவேல் ஆனந்த், மேற்கு கோதாவரி மாவட்டம்  கலெக்டராக முரளிதர் ரெட்டி, அனந்தபுரம் கலெக்டராக சத்தியநாராயணா, பிரகாசம் மாவட்ட கலெக்டராக பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Related Articles