வெளியிடப்பட்ட நேரம்: 24-Nov-2018 , 11:07 AM

கடைசி தொடர்பு: 24-Nov-2018 , 11:07 AM

59 நிமிடங்களில் கடன் - கண்துடைப்பு வேலை

images (30)

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே னு பழமொழி ....

இந்த திருட்டை கூட திட்டம்மா அறிவித்து பொதுமக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்களில் பேசும் திறமை நம்ம பிரதமருக்கு இருக்கு பாருங்க அதை தான் பாராட்ட வேண்டும்

மோடியின் ஆட்சி எடப்பாடியின் ஆட்சியை விட படு கேவலமான ஆட்சி என்பதற்க்கு ஒரேயொரு கொள்ளையை மட்டும் பார்ப்போம்

59நிமிடங்களில் பேங்க் லோன்னு ஒரு திட்டத்தை அறிவிச்சாங்க அதுல நடக்கும் ஊழலைப் பார்த்தா ஏன் எடப்பாடி ஆட்சியைவிட கேவலமான ஆட்சினு புரியும் ...

கவர்மென்ட் பேங்குக தான் கடனைக் கொடுக்க போகிறது. ஆனால் இந்த லோன் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யனும். அதுக்கு அந்த ஆன்லைன் அப்ளிகேசனை CAPITAL WORLD PLATFORM Pvt Ltd தான் பிராசஸ் செய்யும். இது குஜராத் கம்பெனி னு நான் சொல்ல வேண்டிய அவசியமேயில்ல.

மொதல்ல இந்த கம்பெனியோட வரலாறு புவியியல பார்ப்போம் ..

30 _3_2015ல ஆரம்பம். 2016ல ஒரு லட்ச ரூபாய் நஷ்டம், 2017ல 2 1/2 லட்சம் ரூபாய் நஷ்டம்.  இதனுடைய ஆகப் பெரிய வருமானம் வெறும் 15000 மட்டுமே.  ஒனரு இரண்டு பேரு ஏதோ ஷாவாம் . அகிலேஷ் ஹன்டானு மோடியோட பிரச்சார மேனேஜரா இருந்தவன் திடீர்னு ஒன் ஆஃப் த டைரக்டராகுறான். என்ன மாயமோ தெரியல இவன் டைரக்டர் ஆன சில மாதத்திலியே டென்டர் கிடைச்சிடுது.  நஷ்டத்துல இருக்குற இந்த கம்பெனி ஷேர SIDBI னு அரசு நிருவனம் 10 ரூபா மதிப்புள்ள ஷேரை 190 ரூபா கொடுத்து வாங்கி முதலீடு செய்யுது .

இப்ப ஊரான் வீட்டு நெய்ய எப்படி நக்குறாங்கனு பார்ப்போம் ..

ஆன்லைன்ல லோன் அப்ளிகேசனை உங்க லாகின் ஐடி, பாஸ்வேர்டு ஆமாம் பாஸ்வேர்டும் தான் .  ஜிஎஸ்டி விவரம், பேன்கார்டு விவரம் எல்லாத்தையும் கொடுத்துட்டு .. அப்ளோடு செஞ்சா 59 நிமிசத்துக்குள்ள உங்களுக்கு ஒரு மெயில் வரும் அதுல எந்த பேங்குக்கு போகனும் னு விவரமும் In Principle loan approval னும் வரும். ஆகா நமக்கு உடனே லோன் கிடைச்சிருச்சுனு துள்ளிகுதிச்சு மண்டைய உடைச்சுக்க கூடாது. அது வெறும் ஒரு அக்னாலட்ஜ்மென்ட் கார்டு மாதிரி தான். அதுக்கு நீங்க 1180 ஓவாவ அப்ளிகேசன் சார்ஜா கொடுத்தா தான் அக்னாலஜ்மென்ட் மெசேஜே வரும்.

அப்புறம் நீங்க சம்பந்தப்பட்ட பேங்குக்கு போய் பழையபடி பட்டா, சிட்டா, வீட்டு பத்திரம், நிலப் பத்திரம் னு கொலாட்ரல லோனுக்கு தகுந்த மாதிரி நாயா.. பேயா.. அலைஞ்சு கொடுத்தா தான் லோன் கிடைக்கும், இல்லனா லோன் கிடைக்காது. நீங்க நாயா பேயா அலைஞ்சு லோன் வாங்குன பிறகு அதுல ப்ராசசிங் சார்ஜ் தனியா 0.35% லோன் அமவுன்டுல அவனுக்கு போயிடும்.

நீங்க கொலாட்ரல் கொடுக்கலனா லோனும் நஹி, அந்த 1180 ரூபாயும் நஹி .. வெறும் கைய நக்கிட்டு தான் போகனும்.

இப்ப மட்டுமே ஒரு கோடி கேனபயக ஆன்லைன் அப்ளிகேசன போட்டிருக்காங்க. அந்த வகையில ஒரு கோடி அப்ளிகேசன் × 1180 = 1000 கோடி ரூபா சும்மா உட்கார்ந்த இடத்திலியே சுருட்டியாச்சு. இதுல ஒரு பர்சன்ட் கூட பேங்குக்கு போகாது எல்லாமே அந்த வெர்ல்டு பிளாட்ஃபார்ம் கம்பெனிக்கு தான்.

So நேரா பேங்குக்கு போய் லோன் வாங்காதீங்க. அதுக்கு முன்னாடி மோடியோட பிராச்சார மேனேஜர் குஜராத் கம்பெனிக்கு போய் 1180 ஓவா டோக்கன போட்டுட்டு பேங்குல கட்டிங் கொடுத்து லோன வாங்கிட்டு திரும்ப போகும் போது லோன் அமவுன்ட்ல எக்ஸ்ட்ரா 0.35 % அபராதத்த கொடுத்துட்டு போங்கன்னு வடிவேலு மாதிரி கொள்ளையடிக்குறாங்க.

வெறும் அப்ளிகேசன் சார்ஜாவே பல ஆயிரம் கோடி ரூபாய் ஆன்லைன் கொள்ளை.

இந்திய வரலாற்றிலியே பேங்க் லோன் அப்ளிகேசனுக்கே ஆயிரத்து நூறு ஓவா கொள்ளையடிக்குற கம்பெனி நம்ம உத்தமர் கம்பெனி தான். கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வந்திருக்கானுங்க.. இப்ப திரும்ப முதல் வரியை படிங்க புரியும் ...

ஆதாரத்த சேதாரம் இல்லாம போட்டு உள்ளேன்

 

Related Articles