வெளியிடப்பட்ட நேரம்: 02-Jul-2020 , 12:59 PM

கடைசி தொடர்பு: 02-Jul-2020 , 12:59 PM

கொரோனோ- 6 நிமிட சோதனை

images (2)

இப்ப கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் இருந்து பாசிடிவ் டெஸ்ட் வந்து விட்டது. இனி அடுத்து யாருக்கு எல்லாம் டெஸ்ட் எடுக்கலாம்? யாரை எல்லாம் ஹாஸ்பிடல் அட்மிஷன் போடலாம்? யார் எல்லாம் அப்படியே வைத்தியம் பார்க்கலாம்னு தனித்தனியாக பிரிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

இந்த நேரத்தில் நமக்கு கோவிட் நோயாளிகளை பிரிக்க உதவுவது அவர்களது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு தான். இதை வைத்து தான் இப்போது பிரித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆறு நிமிடம் நடை பரிசோதனை.

பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முன்பு இவர்களுடைய நுரையீரல், இருதயம் போன்றவை அறுவைச் சிகிச்சையை தாங்கும் திறன் உள்ளதா என்று பரிசோதனை செய்வதற்கு இது செய்யப்படும்.

அதாவது நோயாளியை ஆறு நிமிடங்கள் நடக்க அல்லது ஓட விட்டு, அதன் பிறகு pulsoximter மூலம் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும். இது 94% மேல இருந்தால் இவர்களது நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்படும்.

இந்த பரிசோதனையை தற்போது கோவிட் suspect நோயாளிகளுக்கு பரிசோதிக்கபட்டது. வார்தாவில் உள்ள மருத்துவமனையில் இந்த ஆறு நிமிட நடை பரிசோதனை மேற்கொண்டு யாருக்கு எல்லாம் ஆக்சிஜன் அளவு 94% ற்கு குறைகிறதோ அவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளலாம். அவர்களை அடுத்த லெவல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றிய ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட டு வருகின்றது. கொரானா நோயாளிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகும் பட்சத்தில் இது போன்ற எளிய பரிசோதனைகள் இவர்களை வகைப் படுத்த உதவி ஆக இருக்கும்.

-Dr. M. Radha M.D., D.M

Related Articles