வெளியிடப்பட்ட நேரம்: 02-Nov-2020 , 08:07 AM

கடைசி தொடர்பு: 02-Nov-2020 , 08:29 AM

அவன் ஒரு சுழல் - 32

cover

"என்ன சொல்லுற சிவா…"

"ஆமா தமிழ். அந்த பொண்ணோட புருசன் கல்யாணம் ஆன ஒரே மாசத்துல இறந்துட்டானாம். அவளை இனி யாரு பாத்துப்பா. அவன் ஆத்மாவுக்கு ஒரு நிம்மதி வேண்டாமா? அதனால தான் அவனுக்கு நான் ப்ராமிஸ் பண்ணிட்டேன். நீ தைரியமான பொண்ணு தமிழ். நீ இத புரிஞ்சுக்குவேன்னு எனக்கு தெரியும்."

"ம்ம்ம் ஆனா எப்படி சிவா இத உன்னால செய்ய முடிஞ்சுது."

"அந்த சிட்டிவேசன்ல எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல தமிழ். அந்த பொண்ணு தனியா எப்படி இந்த உலகத்துல வாழ்வா சொல்லு. "

" நான் கூடத்தான் தனியா இருக்கேன் சிவா. இது வரை நீ இருந்த. இனி எனக்கு யாரு இருக்கா சிவா"

எனக்கு கண்ணீரை விட விரக்தி அதிகமாகி இருந்தது. அவனிடம் சண்டையிடும் அளவு எனக்கு பலமில்லை. என் பக்க நியாயங்கள் அவனுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். அழுது புலம்ப அவனை தவிர எனக்கு யார் இருக்கிறார்.

என் தாய் தந்தைக்கு பிறகு அவன் தான் எல்லாமுமாய் இருக்க போகிறான் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் இன்னொரு பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பதாய் என் வாழ்க்கையை பறித்து விட்டான்.

"தமிழ் நிஜமாவே உனக்கு துரோகம் பண்ணணும்னு இதை பண்ணல. நீ ஏமாந்து கஷ்ட படுறத என்னால பார்க்க முடியாது. இந்த விசயத்தை இவ்ளோ சீக்கிரமா சொல்லுறதே அதுக்காக தான். தமிழ்.. "

"போதும் சிவா. புது வாழ்க்கைய சந்தோசமா வாழு. இன்னொரு பொண்ணுக்காக உன்ன நம்பி வந்த அந்த பொண்ணையும் விட்டுக் கொடுத்திடாத. குட் பை. "

போனை வைத்து விட்டேன். கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெறுமையான, மரமோ கட்டிடமோ எதுவுமற்ற சுடுமணல் நிறைந்த பாலைவனத்தில் சூரியன் மறைந்த இரவின் இருளில், நிலவோ நட்சத்திரமோ இல்லாத மழை இருட்டில் தன்னந்தனியாய் நின்று கொண்டிருக்கும் உணர்வு. சுற்றிலும் வெறுமை என் நெஞ்சம் மட்டும் நிறைந்து கனத்து நிரம்பி இருக்கிறது.

அடுத்த நொடி எப்படி கடக்க போகிறேன். நாளை எப்படி விடியும்… இந்த வலி, இந்த வெறுமை எப்படி தாங்க போகிறேன்…

பால்கனி நோக்கி நடக்கிறேன். தற்கொலைக்கான எண்ணம் ஒற்றை நொடியில் தோன்றி பார்த்திபனின் மடியில் தான் விழுந்தேன். அவன் குரல் தானே நம்பிக்கை கொடுத்து என்னை காப்பாற்றியது.

அப்படின்னா அவன் என்னை பார்க்க தான் அங்க வந்தானா? இந்த டைரியில இருக்கிற நாளும் சரியா நான் தற்கொலை பண்ணின நாளும் ஒரே நாள்…!

-வண்ணத்துப்பூச்சி

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

https://www.kalakkaldreams.com/article.php?a=httpswww-kalakkaldreams-comarticle-phpahes-a-spin-part-30-by-butterflyi10730&i=10772

Related Articles