வெளியிடப்பட்ட நேரம்: 17-May-2018 , 05:31 AM

கடைசி தொடர்பு: 17-May-2018 , 06:53 AM

ஏரணம் - பாகம் - 3

images (21)

யாழ்விழி இளவேந்தனுக்கு தனது அரை நிர்வாணம் படம் அனுப்பியது இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது.  வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மெசென்ஜரில்  இளவேந்தன் ஆன்லைனில் இருந்தாலும்  அரட்டையை தவிர்த்துக் கொண்டிருந்தது தவிப்பையும் கோபத்தையும் கூட்டியது யாழ்விழிக்கு. என்றாலும் இளவேந்தன் ஏதோ ஒரு வேலை நிமித்தமாக இருப்பானென ஒரு மாயை போல புரிந்துக்கொண்டவளாக தன்னையே தான் வேண்டா வெறுப்பாக சமாதானம் செய்துக்கொண்டிருந்த நள்ளிரவு ஒரு மணி

இளவேந்தன் மெசென்ஜரில்......


 “ உனதான இரவு கூந்தல் வனத்தில்

   எனதான விரல் பூக்கள்

   பூக்காதோ ஸ்டெல்லா ?

  தொட்டு தீண்டாதோ மிருதுவா?”


” ஹேய்...என்ன ட்ரை பண்றீயா..? நைட் ஆனா ஏன் தான் இப்படி ஆகுறீங்களோ எல்லா ஆம்பளைங்களும்..? “ ஸ்டெல்லா. இளவேந்தனின் கவிதையான டெக்ஸ்ட்டை விரும்பாதவளாய் தூய அன்புக்கு ஏங்குபவளாய்.. மெல்லிய கோபத்தில்...


“ என்னது எல்லா ஆம்பளைங்கன்னா..?  எத்தன பேருகிட்ட இப்படி பேசி இருக்க ? “ குழப்பம் எமோஜியிடுகிறான் இளவேந்தன்.


“இப்படின்னா.. ? எப்படி நினைச்சி கேட்கிற நீ ? “ கோபம் எமோஜியிடுகிறாள் ஸ்டெல்லா.


“அச்சோ டார்லு.. எப்படி நினைச்சியும் கேட்கல.. விடு..... கால் பண்ணவா.. வீடியோ கால்..? “


” வேண்டாம்... ப்ளீஸ்... “


“ ஏன் நம்பிக்கை இல்லயா..? “


“ லுக்.. இளா.. நம்பிக்கைங்கிறது வேற.. எனக்குன்னு இருக்கிற ஸ்பேஸ்ங்கிறது வேற..? “


“ என்ன ஸ்பேஸ்.. எவ்வளவு அகலமிருக்கும் ? “ சிரிப்பு எமோஜி இளவேந்தனமிருந்து...


“ டேய்.. என்னய இப்போ பார்த்து என்ன பண்ண போற.. நீ.? “


” பார்த்து என்ன பண்ண போறேன்னா.. ம்ம்ம்ம்.. சொல்லவா.?. திட்டக்கூடாது...?” பல்லிளிக்கும் எமோஜி இளவேந்தனின் சபலமாடுகிறது.


“ திட்டாத மாதிரி... சொன்னா.. திட்டமாட்டேன் டா.. ஆனா திட்டுற மாதிரி நீ பேசிட்டா.. உடனே ப்ளாக் தான். யோசிக்க கூட மாட்டேன். “


“ஐயோ... என்ன மேடம் மிரட்டலா இருக்கு... சரி..சரி.. நீ சொன்னது பார்த்து இருக்கிற மூட் போகிடுச்சி.. சரி என் டைம்லைன்ல இருக்கிற கவிதைலாம் படிக்கிறீயா இல்லயா..? உன் லைக் கூட வரமாட்டிங்குதே..? ”


“ அய்யே.. ஃபேஸ்புக்ல அக்கவுண்ட் ஓபன் பண்றவன் எல்லாரும் எதாவது எழுதிட்டு எப்படிடா கவிதைன்னு அத சொல்றீங்க. இருக்கிற இலக்கியவாதிங்க அலம்பலே தாங்க முடியல.. இதுல நீங்க வேற கண்டப்படி எதயாவது எழுதிட்டு..  50 லைக்ஸ் வாங்கின உடனே  ப்ரொபைல் நேம்ல கவிஞர் -ன்னு சேர்த்துகிறீங்க. ஏதாவது நாலு கவிதை புக் உருப்படியா படிங்கடா. முதல்ல படிங்க அப்புறம் படைங்கடா. உசுர வாங்காதீங்க. முதல்ல இந்த கவிஞருன்னு சொல்லிட்டு திரியறவன் எல்லாரையும் ப்ளாக் பண்ணனும்.” விரல் அசர அசர வேகமாக ஏதோ கோபமாக டைப்பிட்டு அனுப்பிய ஸ்டெல்லாவின் டெக்ஸ்டை படித்த இளவேந்தனுக்கு உண்மையில் அவனுள் அவன்  உணர்ந்துக்கொண்டிருந்து கவிஞனெனும்  மாயை கோபம் கொள்ளச் செய்தது.


“ஹலோ.. கொஞ்சம் நிறுத்துங்க மேம்...  மத்தவன் கவிதை பார்த்து என் கவிதையும் நீ நினைக்கிற கேட்டகிரில சேர்க்காதே.  நான் நிஜ கவிஞன். சரி  அப்படி என்ன தெரியும் உனக்கு கவிதை பத்தி... ? “ ஏளனமாகவே கேட்டான் இளவேந்தன்.


“ கம்பன்ல இருந்து  வண்ணதாசன்... .   ... யாழிசை மணிவண்ணன் வரைக்கும் நான் வாசிச்சு இருக்கேன். “


“வண்ணதாசனா? “


“ ம்ம்ம் “


” அவர் கதையில எழுதுவாரு..? “


“அடப்பாவி.. கல்யாண்ஜி உனக்கு தெரியுமா? “


“ ம்ம்ம்ம் தெரியுமே.. பேமஸ் கவிஞர்..! “


“ வண்ணதாசனுக்கும் கல்யாண்ஜிக்கும் என்ன சம்மந்தமுன்னு தெரியுமா? “


“ ம்ம்ம் தெரியுமே... இரண்டு பேரும் ஒரே ஊருக்காரங்கன்னு கேள்விப்பட்டேன்.  வண்ணதாசன்.. இப்போ கூட போன வருஷமுன்னு நினைக்கிறேன் சாகித்திய விருது வாங்கினாரே..?”


“ அடேங்கப்பா.. இந்தளவுக்கு கூட  உனக்கு தெரியுதா? “


“ ஆமா யாழிசை யாரு...? “


“ ம்ம் வண்ணதாசனோட மச்சான்... “ ஸ்டெல்லாவின் கிண்டல் தொனி, இளவேந்தனை அறிவற்றனாக்கி கொண்டிருக்கிறது.


இளவேந்தனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நன்றாக ஒரு பெண்ணிடம் அவமானமடைந்த  இந்த நள்ளிரவுக்கு ஆறுதலாய் ஆன்லைனில் வந்தாள் பொன்னி..!


யாழ்வேந்தனின் இச்சைக்கு  பலியாகாத பெண் மான் ஸ்டெல்லா...  இராத்திரியில் வேங்கையாய் முகநூலில் திரியும் திரைப்பட அறிமுக இயக்குனர் தயாரிப்பாளர் ஒருவரிடமிருந்து நட்பு விண்ணப்பத்தை ஏற்று பலியாகி தொடங்குகிறாள்.


யாழ்விழி இராத்திரி தூக்கமற்ற ஏக்கத்தில்... இளவேந்தனை  உளவு பார்க்க  வில்லியாக ஒரு போலி முகநூல் கணக்கு துவக்கிக்கொண்டிருக்கிறாள்.   அந்த ஃபேஸ்புக் ஐடி “ வெண்புறா”   ஃபேஸ்புக் Introவில் இப்படியாக டைப்பிடுகிறாள்.

“ இவள் உங்களுக்காக.. உங்கள் அன்புக்காக “( தொடரும் )-  இரா.சந்தோஷ் குமார்.

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

https://kalakkaldreams.com/aeranam-part-2-by-santhosh-kumar/

Related Articles