வெளியிடப்பட்ட நேரம்: 17-Feb-2017 , 08:22 AM

கடைசி தொடர்பு: 17-Feb-2017 , 08:22 AM

அஜ்வா

IMG-20170217-WA0006_1487299909829

கொஞ்சம் நாட்கள் முன்னாடி NAT GEO  ல ஒரு டாக்குமெண்டரி பார்த்தேன். இப்ப உள்ள சிலிக்கன் வேலி எப்படி உருவாகியது, அதற்கு முன் அந்த இடம் என்னவாக இருந்தது என்று ஒளிபரப்பப் பட்டது. www- world wide web இந்த ஒரு நெட் ஓர்க் , நாம எல்லாரும் இந்த நெட் ஒர்க்  ல கனெக்ட் ஆகி இருக்கிறோமே உண்மையில் இந்த மாய உலகம் யாருக்காக உருவாக்கப் பட்டது என்று அதில் விரிவாக காட்டினார்கள். உண்மையில் இதற்கு சொந்தக் கார்கள் ஹிப்பிகள். அதாவது நாடோடியாக அலைந்து கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு என்று ஒரு நிரந்தர முகவரியை அடையாளத்தை வைத்துக் கொள்ளாமல் , உள்ளுக்குள் ஒரு தனி உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு அதன் மோன நிலையில் சஞ்சரிக்கிறவர்கள். இந்தக் கதையின் ஆசிரியர் சொல்லும் மாதிரி ஒரு சிறு ஹாரன் ஓசை கூட அவர்களின் மூளையை மின்னல் போல் தாக்கிச் செல்லக் கூடியது. அந்த மாதிரி ஒப்பு இடைஞ்சல் கூட இல்லாத மாதிரி இருந்த ஒரு பொது ஜாயிண்ட் ஸ்கோர் பண்ணுகிற இடமாகத் தான் சிலிகான் வேலி இருந்தது. இந்த மோன நிலையை அடைவதற்கு உதவியது தான் ஒபியம், ஹெராயின்,நம்ம ஊர் வழக்கில் கஞ்சா அடிமைகள். அமெரிக்க அரசாங்கம் கஞ்சா பயிரிட தடை கொண்டு வந்த போது, நிழல் உலகில் அதன் வியாபாரம் கொடி கட்டி பறக்கத் தொடங்கின. அப்போது அதன் கஸ்டமர்களை தொடர்பு கொள்ளவும், அவர்களின் இடத்தை சரியான முறையில் தெரிந்து கொண்டு சப்ளை செய்ய மட்டுமே முதலில் GPS global positioning system பயன்படுத்தப் பட்டது. அரசாங்க தொலை தொடர்பு துறை தேவையில்லாமல் தனியாக ஒரு தொடர்பு கொள்ளவும், தங்களுக்கு ஒரு உலகத்தை என்று உருவாக்கித் கொள்ளவும், மோன நிலையில் உள்ள சிந்தனையில் உருவானவை இந்த இண்டர் நெட். ஆப்பிள் நிறுவனம் தலைவர் ஸ்டீவ் இந்தஉலகத்தில் ஒருவர் தான். இந்த இராஜ போதையில் எண்ணங்கள் சிறகடித்து பறக்கும் போது உருவானவை தான் ஆப்பிள் நிறுவன பொருட்கள். இன்று உலகில் மிக அதிகமான பேடெண்ட்கள் 450 மேல் அவரது பெயரில் உள்ளது. அதற்கு பின் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வலியில் அவதிப் படும் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக கோகெயின் சப்ளை பண்ணுவதற்காக இவர்கள் அல்லாத பொது மக்கள் தொடர்புக்கு வெளியே வந்த போது தான், உலக அளவில் இந்த இணைய பயன்பாடு தொடங்கியது.


இந்த அஜ்வா கதையில் ஆசிரியர் இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே சொல்ல வருகிறார்.  தென் தமிழ் நாட்டை சேர்ந்த கரிசல் காட்டு மண்ணில், வெயிலில் கிடந்த ஒரு சாதாரண குடும்பத்தை  சேர்ந்த ஒருவன் இந்த இரண்டாம் உலகில் நுழையும்  போது, அவன் எதிர் கொள்ளும் அனுபவங்கள், அந்த உலகத்தின் சார்ந்தவர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் , அவர்களின் முடிவு என்று அவர்களை இந்த உலகின் மக்கள் எதிர் கொள்வது என்று , அதில் இருந்து மீண்டு வந்து பொது ஜனத் திளரில் கலப்பது ஆகியவற்றை பதிவு செய்த இடமே இந்த நாவல்.


கதை நாயகன்,  இந்த உலக  நண்பன் ஜார்ஜ், இரண்டாம் உலக தோழி டெய்ஸி மூன்று பேருக்கு நடுவில் மட்டுமே கதை கடலில் செல்லும் படகு போல மேலேயும் , கீழேயும் சென்று தத்தளித்து இறுதியில் கரை வந்து சேருகின்றது.மதுரை என்றால் மீனாட்சி ஆட்சி என்ற வழக்கத்திற்கு ஏற்ப தென் தமிழ் நாட்டில் குடும்பத்தை நிர்வாகம் செய்வது பெண்கள் தான். ஆண்கள் வெளியே வேலைக்கு போய் சம்பாதித்து வரும் பொருளை மனைவியின் கையில் கொடுத்து வாங்க வேண்டும் என்பது ஒரு வழக்கம். இருவருக்கும் அப்போது தான் குடும்ப நிலவரம் தெரியும் என்று ஏற்படுத்தப் பட்டதாக இருக்கலாம். அதனால் குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பது எல்லாம் பெண்களை சார்ந்து தான் இருக்கும் நானும் அந்த மாவட்டம் சேர்ந்தவள் என்பதால் கதை ஆசிரியர் சொல்ல வருவது தெரிகின்றது. தான் கால் வயிறு கஞ்சி  விட்டாலும் கூட பரவாயில்லை, தன் மக்கள் அரை வயிறு க்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தாய்,அத்தை மற்றும் சித்திமார்கள். இங்கே அந்த மாதிரி ஒரு குடும்பம், பயந்த சுபாவம் உடைய அப்பா , மகனை தனியாக குன்னூர் கான்வென்ட் ல படிக்க வைக்கும் அம்மா, பார்த்தவுடன் அவனது எண்ணங்களை புரிந்து கொள்ளும் அத்தை, ஊரில் உள்ள  சண்டியர் தாய் மாமா,  போதைக்கு அறிமுகம் ஆகும் அண்ணன்கள், தைப்பூசம் என்றால் பழனி, விசாகம் என்றால் திருச் செந்தூர், கெடா வெட்டு என்றால் பாண்டி முனி கோவில், பரோட்டா,மட்டன் குழம்பு என்று ஊர் பழக்க வழக்கங்கள் அப்படியே அச்சில் ஏறி இருக்கின்றது. இரண்டாம் உலகில் அறிமுகம் ஆகும் டெய்சியைக் கூட நாயகன் அவனது கந்தக உலகிற்கு அழைத்து வரவே பிரியப் படுகிறான். அந்த அளவிற்கு அவனுக்கு கந்தக பூமியின் மேல் காதல் உள்ளது.


கான்வென்ட் ல் தனியாக படித்து கல்லூரிக்கு சென்னை வரும் போது அவனின் பயத்திற்கு துணையாக போதையை நாடுகிறான்.ஒரு நேரத்தில் இவன் கூட சேர்ந்து போதையும் தனிமைக்கு பயப் படுகிறது. போதையில் உச்சியில் ஹாட் பாக்சில் அமர்ந்து இருக்கும் போது கூட அந்த உலகம் சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரி ஆகவும், கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரி ஆகவும் இருப்பதை அவனால் உணர முடிகின்றது. திருவான்மியூர், பெசண்ட் நகர், காஞ்சிரம் பள்ளி, பழனி, திருப்பதி, அடையார் என்று பொது ஜாயிண்ட்களை ஸ்கோர் செய்து, டெய்ஸியின் மேல் உள்ள மையல் காதலாகி மாறி , ஒரு கணவனின் கடமையை செய்து திரும்பி  பார்க்கும் மனது, கடைசியில் நபிகள் நாயகம் சாப்பிட்ட தீவினைகளை அகற்றும் ஏழு அஜ்வா பழங்களை சாப்பிட்டு, இது வரை உள்ளுக்குள் அழுத்தி கொண்டு இருந்த பயத்தை வெளியேற்றி தன்னுடைய கந்தக பூமியை நோக்கி பயணப் படும் போது எனக்கு தோன்றியது ஒன்று மட்டும் தான், அந்த ஏழு அஜ்வா பழங்கள் அடங்கிய பெட்டி எங்கு கிடைக்கும்? நண்பன் ஒருவனுக்கு தேவைப் படுகின்றது. அவனுக்கு கனகரத்தினம் போல போதையை ஊறுகாய் போல பயன் படுத்த சொல்லிக் கொடுக்க மனம் விழைகின்றது. இந்த கந்தக மண்ணின் நேசம், இந்த மக்களின் நேசம் மட்டுமே அவன் சாப்பிட்ட ஏழு அஜ்வா பழங்களின் வடிவில் உள்ளே சென்று அனைத்து தீயதை விலக்கி அவனை மீட்டு எடுத்துக் கொண்டு வந்துள்ளது. மானம் பார்த்த பூமியில் இயற்கை விவசாயம் சென்றடைய உயிர் மழை பெய்தது போல, இந்த உலகம் எங்கும் அன்பு மழை போல் பெய்து உடன் இருப்பவர்களை பயத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் மட்டுமே எனது பேரவா.பயத்தில் இருந்து எது விடுவிக்கின்றதோ அது தான் அஜ்வா.


-மருத்துவர் இராதாகுமார்

Related Articles