சினிமா திரை முன்னோட்டம்
வெளியிடப்பட்ட நேரம்: 01-Jun-2019 , 10:48 AM
கடைசி தொடர்பு: 01-Jun-2019 , 10:48 AM
Share
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது Article 15 டிரைலர் இப்போதெல்லாம் டிரைலரிலேயே படத்தை கணித்து விட முடியும். இந்த படம் என்ன மாதிரியான கதைக்களத்தை கொண்டுள்ளது என்று அதை வைத்தே இந்த படத்தை உடனே பார்க்கலாமா? வேண்டாமென முடிவுக்கு வருகிறார்கள் ரசிகர்கள். இந்திய அளவில் சாதியின் பெயரால் கொலைகள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. விகிதாசார அடிப்படையில் தென் இந்தியாவை ஒப்பிடும் போது வட இந்தியாவில் இன்னும் அதிகம். அது மாதிரியாக நடக்கும் கொலையினை விசாரிக்க வரும் அதிகாரியினை மையப்படுத்திய கதைக்களமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது Article 15 டிரைலர். வெளியான இரண்டே நாளில் 80 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் இருக்கிறது.. ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்து இயக்குகிறார் அனுபவ் சின்கா, ஆயுஷ்மான் குராரா கதையின் நாயகனாக நடிக்கிறார்.. லிங்க் : https://youtu.be/HKOJY0cU63E -கருத்தகிளி