வெளியிடப்பட்ட நேரம்: 19-Aug-2017 , 02:28 PM

கடைசி தொடர்பு: 19-Aug-2017 , 02:29 PM

மேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்

astro-kalakkals

      சுக்கிரன்

 
  21.08.17 (ஆவணி 5)

சுக் (கடகம்)

28.08.17 (ஆவணி 12)

செவ் (சிம்மம்)

02.09.17 (ஆவணி 17)

புதன் (சிம்மம்)

02.09.17 (ஆவணி 17)

குரு (துலாம்)

15.09.17 (ஆவணி 30)

சுக் (சிம்மம்)

 

 
செவ்வாய்

புதன்

ராகு
கேது சூரியன்

 
  சனி(வ)   குரு

ஹேவிளம்பி ஆண்டு ஆவணிமாத இராசி பலன் (2017)

17.08.2017முதல் 16.09.2017வரை (ஆவணி 1-31.)

 

ஆவணிமாத கிரகநிலை...

 

 

 

மேஷம் :வாய்ப்பு கிடைத்தால் நான் வல்லவன் என்பதை எப்பொழுதும் நிருபிக்கும் மேச ராசியினருக்கு இந்த மாதம் உங்களது பூர்வ புன்னிய ஸ்தானாதிபதி சூரியன் தன் ஆட்சி விட்டிலேயே அமர்ந்து இருப்பதால், மனக்குழப்பம் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும், பிள்ளைகளால் பெருமைகள் கூடும். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த கவலைகளும் வெறுப்பும் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ளவும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் அகஸ்ட் 28 முதல் 5ம் வீட்டில் அமர்வதால் சகோதர வகையில் சச்சரவுகள் ஏற்படும். சுக்கிரன் நல்ல வீடுகளில் சாஞ்சரிப்பதால் கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனகசப்பு நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். புதனும் சாதகான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். எப்பொழுதும் உற்சாகத்தோடு இருந்து வருவீர்கள், தோற்றத்தில் பொலிவு ஏற்படும். குரு ஆறாம் வீட்டில் தொடர்வதால் கடன் தொல்லைகள் இருந்துக்கொண்டே இருக்கும். செப்டம்பர் 2 ம் தேதி ஏழாவது வீட்டிற்கு செல்கிறார், இனி எதிலும் வெற்றி உண்டாகும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும், அன்னியோன்யம் பிறக்கும். அன்பு கூடும். இது வரை இருந்து வந்த பயம் நீங்கும். தைரியம் பிறக்கும். கருத்து வேறுபாடால் பிரிந்து இருந்த கணவன் மனைவி ஈகோ நீங்கி மீண்டும் சேரும் காலம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை நல்ல விதத்தில் அமையபெரும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துதல், புதிய கிளைகள், இட மாற்றம் போன்ற நல்ல நிகழ்வுகள் நடைபெறும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், புதிய வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார்கள். லாபம் இருக்கும். பங்குதாரர்களிடம் கவனம், வீண் வாக்குவாதம் வேண்டாம். வேலை பார்ப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும், சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு, வேண்டாத இட மாற்றம் போன்ற சூழல் இருக்கும், சிறு சிறு அவமானங்கள் ஏற்படும். சிலருக்கு வேலை பறிபோகும் வாய்ப்பும் உண்டு. மாணவர்களுக்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள், உங்கள் நியாபக சக்தி அதிகரிக்கும், எல்லா வினாக்களுக்கும் விடை அளிப்பீர்கள், கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கூடி வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும், செல்வாக்கு அதிகரிக்கும், பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எதார்த்தமாக இருந்து வெற்றிப்பெரும் மாதமிது.

சந்திராஷ்டமம் :ஆகஸ்ட் 28 மாலை முதல் ஆகஸ்ட் 30 வரை சந்திராஷ்டமம் எதிலும் எச்சரிக்கை தேவை.

பரிகாரம் :குரு வழிபாடு குறைகள் தீர்க்கும், ஜீவசமாதிகளை வழிபடுங்கள்.

 

ரிஷபம் :எதையும் நினைத்தால் திட்டமிட்டு முடித்துவிட துடிக்கும் ரிஷப ராசியினர்க்கு இந்த மாதம் முழுவதும் சூரியன் நான்காம் வீட்டில் ஆட்சிப்பெற்று நிற்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும், வீடு சொத்து சேர்க்கை இருக்கும், வீடு கட்டுவது தொடர்பான வங்கிக்கடன் கிடைக்கப்பெறும். குருவும் செப்டம்பர் ஒன்று வரை ஐந்தாம்வீட்டிலேயே இருப்பதால் பணவரவு இருந்துக்கொண்டே இருக்கும், குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படும், இல்லத்தில் சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி ஏற்படும், செப்டம்பர் 2ம் தேதி குரு ஆறாம் இடத்தில் வந்து நிற்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, சிறு சிறு அவமானங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு வீண்பலி வந்து சேரும், பிள்ளைகள் வேலை, கல்வி என்று வெளியூருக்கு பிரிந்து செல்லவும் கூடும். அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம். மூன்றாமிடத்து செவ்வாய் சுறுசுறுப்பை கொடுக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள் வந்து செல்லும், ஆகஸ்ட் 28 முதல் நான்காம் பாவத்திற்கு செல்வதால் உடல் சோர்வு ஏற்படும், புதன் சாதகமான இடங்களில் செல்வதால் எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள், பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பலருக்கு உண்டு. சனி ஏழாம் இடத்தில் தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டாம், சிலர் தூக்கமின்றி தவிக்க நேரும். விபயபரத்தில் லாபம் அதிகரிக்கும், புதிய பங்குதார்கள், புதிய ஒப்பந்தங்கள், புதிய கிளை என்று வியாபாரத்தின் நிலை உயரும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்வார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்றாமான காலமிது, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற மகிழ்ச்சியான நிலை ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள், உயர் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். சிலர் உத்தியோகத்தில் பெரிய பதவிக்கும் வரக்கூடும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு, கலை இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் முன்னேறுவீர்கள். கலைத்துறையில் புதிய வாய்ப்புகளும். தள்ளிப்போன வாய்ப்புகளும் வந்து சேறும், அரசியலில் புதிய பெரிய பொறுப்புகள் கை கூடி வரும். இளம் பெண்களுக்கு திருமண வாய்ப்பு கூடி வரும், கல்வியில் செல்வாக்கு கூடும். மொத்தத்தில் முன்னேற்றமான மாதமிது.

சந்திராஷ்டமம் :ஆகஸ்ட் 31 செப்டெம்பர் 1, 2ம் தேதி மதியம் 3.01 வரை சந்திராஷ்டமம்

பரிகாரம் :ஈஸ்வர வழிபாடு இன்னல் தீர்க்கும்.

மிதுனம் : திட்டமிட்டு செயல் பட்டு செலவுகளை குறைக்கும் மிதுன ராசியினருக்கு இந்த மாதம் முழுக்க சூரியன் மூன்றாம் வீட்டில் ஆட்சிப்பெற்று அமர்ந்து இருப்பாதால் தைரியம் அதிகரிக்கும், எந்த முடிவையும் துணிச்சலாக எடுத்து வெற்றிக்காண்பீர்கள், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்கிரனும் நல்ல நிலையில் இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும், அகஸ்ட் 28 முதல் செவ்வாய் மூன்றமிடத்துக்கு செல்வதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும், சகோதரம் உதவியாக இருக்கும், அதுவரை இரண்டாம் இடத்தில் நீடிப்பதால் பேச்சில் கவனம் தேவை, வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சனி ஆறாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் அதிரடி முன்னேற்றம் உண்டு, வழக்குகளில் வெற்றியும் கிடைக்கும், புதனும் சாதகமாக இருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிக்கரமாக முடியும், உங்களது புத்தி சாதூர்யத்ததால் எதிலும் வெற்றிகான்பீர்கள். இது வரை நான்காம் வீட்டில் அமர்ந்து இருந்த குருபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்வதால் விரக்தியில் எதிலும் சாதகமான சூழலே நடைபெறும், தொட்டதெல்லாம் ஜெயமாகும், வி.ஐபி கள் அறிமுகம் கிடைக்கும், பிள்ளைகளால் பெருமை சேரும், சகோதரம் உதவியாக இருக்கும், கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும், பிள்ளையிள்ளதவர்களுக்கு புத்திரப்பாக்கியம் கிடைக்கவும் கூடும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள், வராக்கடன்கள் வசூலாகும், சிலர் கடையை இடமாற்றுவீர்கள், சிலருக்கு செய்துக்கொண்டு இருக்கும் தொழிலை விட்டு புதிய தொழில் துவங்கும் சூழலும் ஏற்படும், வேலையில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள், மேலதிகாரிகள் ஆறுதலாய் இருப்பார்கள், விரும்பிய இடமாற்றம் வந்து சேரும், மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் அன்பும் பாராட்டும் கிடைக்கும், கலைத்துறையில் மூத்தக் கலைஞர்கள் பாராட்டுக்கிடைக்கும், அரசியலில் தலைமைக்கு நெருக்கமவீர்கள், கோஷ்டிபூசல்கள் நீங்கும். பெண்களுக்கு விரும்பிய வரன் வாசல் வந்து சேரும்.உங்கள் ரசனைக்கு ஏற்ப பரிசுகள் கிடைக்கும், சிலருக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். அதிரடியாய் அசரடிக்கும் மாதமிது.

சந்திராஷ்டமம் :செப்டம்பர் 2ம் தேதி மதியம் 3 மணிமுதல் 3, 4ம் தேதி வரை சாந்திராஷ்டமம்.

பரிகாரம் :கவலைகள் தீர்க்க காந்திமதியம்மனை தியானிக்கவும்..

கடகம் : அமைதியாக இருப்பதும் பிரச்ச்னைகளுக்கான தீர்வென நம்பும் கடக ராசியினருக்கு இந்த மாதம் சூரியன் இரண்டாமிடத்தில் இருப்பதால் கண் எரிச்சல், கண் நோய் போன்றவை வந்து நீங்கும், வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, உங்களது லாபாஸ்தான, சுகஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் நல்ல வீடுகளில் செல்வதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதால் மனக்கசப்புகள் நீங்கும், செவ்வாய் சாதகமான் வீடுகளில் செல்வதால் சகோதர வகையில்  உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் சற்று மகிழ்ச்சியான சூழல் நீடிக்கும், நீண்ட கால நபர்கள் உறவுகள் தேடிவந்து பேசுவார்கள், சனியும் ஐந்தாம் வீட்டிலேயே தொடர்வதால் அடிக்கடி கெட்டக்கனவுகள் வந்து உறக்கம் கெடுக்கும், மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிப்பது நன்மைத்தரும். குரு மூன்றாம் வீட்டில் இருந்து நான்காம் வீட்டுக்கு செல்வதால் இதுவரை இருந்து வந்த தடைகள், பிரச்சனைகள் நீங்கும். வீடு வாகன வகையில் மராமத்து செலவுகள் அதிகரிக்கும், சுகஸ்தானத்தில் குரு அமர்வதால் சோர்வு, களைப்பு ஏற்படும், வேலைச்சுமை அதிகரிக்கும், சிலருக்கு வீடு, ஊர் மாறுவதற்கான சூழல் அமையும், தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. ராசிக்குள் ராகு நிற்பதால் ஓய்வின்றி உழைக்கும் சூழல் அதிகரிக்கும், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும், பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்கவும், சிலரை நம்பி ஏமாற வேண்டி இருக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழலே ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும், கமிசன் வகையில் லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள், வேலையில் வேலைச்சுமை அதிகரிக்கும், சக ஊழியர்களால் தொல்லைகள் வந்து நீங்கும், உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், மாணவர்கள் அலட்சியப்போக்கை கைவிட்டு கவனமுடன் படிக்கவும், ஒரு முறைக்கு இரு முறை எழுதிப்பார்க்கவும், கலைத்துறையினருக்கு சில அவப்பெயர்களும் கிசு கிசுகளும் ஏற்படும், மூத்தக்கலைஞர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும், அரசியல்வாதிகள் உங்கள் பேச்சிற்கு மரியாதை கூடும், அனைவராலும் மதிக்கப்படுவீர்கள், பெண்கள் பெற்றோர் சொல் கேட்டு நடந்தால் நன்மை கிடைக்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்தவும் மொத்தத்தில் விட்டுக்கொடுத்து செல்வதால் வெற்றிக்காணும் மாதமிது.

சந்திராஷ்டமம்:செப்டம்பர் 5, 6 மற்றும் 7ம் தேதி காலை 8 வரை சந்திராஷ்டமம்.

பரிகாரம்:தணிகைமலையானை தரிசித்து துன்பம் தீர்க்கும் மாதமிது.

சிம்மம் : புகழ்ச்சிக்கு மயங்காத சிம்ம ராசியினருக்கு இந்த மாதம் உங்கள் ராசியாதிபதி சூரியன் ராசியிலேயே ஆட்சிப்பெற்று அமர்ந்து இருப்பதால்எடுத்த காரியங்களில் எல்லாம் ஜெயம் உண்டாகும், இது வரை இருந்து வந்த கவலை நீங்கி மனநிம்மதி பிறக்கும், 12இல் இருக்கும் செவ்வாய் திடீர் பயணங்கள், சகோதர வகையில் வீண் அலைச்சல், அதன் மூலம் சோர்வுகள் ஏற்படும், 28ம் தேதிமுதல் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல் சோர்வு தூக்கமின்மை போன்றவை ஏற்படும், எதிலும் நிதானமின்றி படபடப்புடன் காணப்படுவீர்கள், எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும், புதன் சாதகமான சூழலில் இருப்பதால் சந்தொசமும் மகிழ்ச்சியும் நீடிக்கும், போட்டிகளில் வெற்றிப்\பெறுவீர்கள் உங்கள் புத்தி சாதுர்யத்தால் சவாலான காரியங்களிலும் சாதித்துக்காட்டுவீர்கள், நண்பர்கள் உறவுகள் மத்தியில் செல்வாக்கு கூடும், விஷேசங்களில் கலந்துக்கொண்டு மகிழ்வீர்கள். கடனில் ஒரு பகுதியை அடைக்க கூடும். சுக்கிரனும் நல்ல வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. பணவரவு உண்டு, வீடு, வாகன சேர்க்கை உண்டு. சிலருக்கு வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு அதிகரிக்கும். செப்டம்பர் 1 ம் தேதியில் இருந்து குரு 3ம் வீட்டிற்கு செல்வதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம், தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், புதிதாய் அறிமுகமாகும் நண்பர்களிடம் கவனமாக இருக்கவும், சனி 4ம் வீட்டிலேயே தொடர்வதால் தாயாருக்கு மருத்துவ செலவுகள் கூடும், வாகன வகையில் மராமரத்து செலவுகள் கூடும், ஒரு வித மனக்கவலையும், மனச்சோர்வும் இருந்துக்கொண்டே இருக்கும். வியாபரத்திள் புதிய முதலீடுகள் லாபம் தரும், நீண்டகாலமாக யோசித்து வந்த கடையை விரிவு படுத்துவது, இடமாற்றம் செய்வது போன்ற எண்ணங்கள் ஈடேறும், பிரச்சனை செய்து வந்த பங்குதாரர்கள் தானாகவே விலகுவார்கள், புதிய நம்பிக்கைக்குரிய பங்குதாரர்களும் வந்து சேரலாம், தைரியமாக புதிய முதலீடுகளை செய்யலாம், வேலை பார்ப்பவர்கள் செல்வாக்காக இருக்கும் காலமிது, விரும்பிய இடமாற்றம் ஏற்படும், உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய, விண்ணபித்த சலுகைகள் கிடைக்கும், உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் நட்போடு இருப்பார்கள், மாணவர்கள் ஆசிரியர்களால் பாராட்டப்படகூடும், சக மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்படும், நல்ல மதிப்பெண் பெற்று மகிழ்வீர்கள், கலைஞர்களுக்கு நீண்ட நாள் தடைப்பெற்ற உங்கள் படைப்புகள் வெளிவந்து பாராட்டுக்கிடைக்கும், யதார்மான படைப்புகளால் வெற்றிக்காண்பீர்கள், அரசியலில் அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள், போட்டிகளில் வெற்றிக்கிடைக்கும், வேலை தேடும் பெண்களுக்கு வெற்றிக்கிட்டும், வேலை கிடைக்கும், உயர்கல்வியில் ஜொலிப்பீர்கள், காதல் கைகூடும், மொத்தத்தில் ஆச்சரியப்படும் படியான மாற்றங்கள் ஏற்படும் காலமிது..

சந்திராஷ்டமம்:செப்டம்பர் 7ம் தேதி காலை 8 மணிமுதல் 8, 9ம் தேதி மதியம் 1.30வரை சந்திராஷ்டமம் கவனம் தேவை.

பரிகாரம்:பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரவும்.

கன்னி :தவறுகளை கண்டால் தட்டிகேக்கும் கன்னி ராசியினருக்கு சூரியன் பன்னிரெண்டில் அமர்வதால் சிலவுகள் அதிகரிக்கும், யோகதிபதி சுக்கிரன் சாதகமான சூழலில் இருப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், பணபுழக்கம் அதிகரிக்கும், செவ்வாயும் லாப வீடான 11ல் இருப்பதால் பணவரவு உண்டு.சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். ஆகஸ்ட்    28 முதல் பன்னிரெண்டில் மறைவதால் விரைய செலவுகள் அதிகரிக்கும், சகோதர வகையில் சச்சரவுகள் ஏற்படக்கூடும், பயணங்கள் அலைச்சலும், டென்சனும் அளிக்கும், இதுவரை ஜென்மத்தில் அமர்ந்து இருந்த குரு வரும் செப்டெம்பர் 2 முதல் இரண்டாம் வீட்டில் அமர்வதால் பொருளாதாரம் மேம்படும், அரசு வகையில் நல்ல முடிவுகள் வரும், எதிலும் வெற்றியே கிட்டும். சனியும் சாதகமாக இருப்பதால் பல சாதனைகள் படைப்பீர்கள், எதிரிகள் விலகுவார்கள், வழக்குகளில் வெற்றிக்கிட்டும், இதுவரை குழப்பிக்கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும், புதனும் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும், நீண்ட கால நண்பர்கள் சந்திப்பு மகிழ்சிக்கொடுக்கும், ஐந்தாம் வீட்டில் நிற்கும் கேதுவால் பிள்ளைகளால் சில தொல்லைகள் இருக்கும், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடந்துக்கொள்ளவும், உங்களைபற்றி அவதூறு பேசுபவர்களை கண்டுக்கொள்ள வேண்டாம், சிலருக்கு வாயுத்தொல்லை வந்து பாடாய் படுத்தும், வியாபாரத்தில் லாபம் பன்மடங்காகும், புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேருவார்கள், உங்களது பெயர், நிறுவனத்தின் பெயர் பிரபலமாகும், வேலையில் ஓய்வின்றி உழைக்கும் சூழல் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் இருக்கும், மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகைகள், சம்பள உயர்வு கிடைக்கப்போகிறது, மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள், மூத்த அதிகாரிகளை பற்றிக்குறை கூற வேண்டாம். மாணவர்கள் நன்றாக படிக்கவும், படிப்பதை எழுதிப்பார்த்து நினைவுக்கூறுங்கள், கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும், மூத்த கலைஞர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள், அரசியலில் மக்கள் மத்தியில் நல்லப்பெயரை எடுக்க நிறைய செலவுகள் செய்ய வேண்டும், பெண்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நிம்மதி மகிழ்ச்சி கிடைக்கும், புதிய வேலை கிடைக்கும், மனதில் இருந்து வந்த களைப்பு, சோர்வு நீங்கும், சவால்களை சாதனையாக மாற்ற வேண்டிய காலமிது.

சந்திராஷ்டமம்:செப்டம்பர் 9ம் தேதி மாதியம் 1.30 மணிமுதல் 11ம் தேதி மாலை 4.45வரை சந்திராஷ்டமம்

பரிகாரம்:சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

 

வாக்கியப்பஞ்சாங்க அடிப்படையில் ஆவணி மாத பலனை கணித்தவர்

ஜோதிட அமுதம்

  1. ஜோதிமணிகாந்தி. D.Astro.,


ஓம் ஜோதிடம், கரூர்.

 

Related Articles