வெளியிடப்பட்ட நேரம்: 23-Jul-2019 , 06:23 PM

கடைசி தொடர்பு: 23-Jul-2019 , 06:23 PM

நடப்பு காலாண்டில் 5000கோடி லாபம் ஈட்டிய வங்கி

iob

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஜூன் 30, 2019 வரையிலான முதல் காலாண்டுக்கான செயல்பாட்டு விவரங்களை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், ரூ.3,61,928 கோடியாக இருந்த மொத்த வணிகம் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.6,849 கோடி அதிகரித்து ரூ.3,68,777 கோடியாக உள்ளது. மொத்த முதலீடுகள் ரூ.8,003 கோடி அதிகரித்து, ரூ.2,21,171 கோடியாகவும், மொத்த கடன் அளவு ரூ.1,51,996 கோடியாகவும் உள்ளன.

2019 மார்ச் 31 வரையிலான காலாண்டில், ரூ.1,132 கோடியாக இருந்த செயல்பாட்டு லாபம், கடந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.828 கோடியாக உள்ளது. கடன் வசூலில் காட்டிய முனைப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் ரூ.1,985 கோடியாக இருந்த நிகர இழப்பு, ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.342 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் இதே காலாண்டில், ரூ.3,389 கோடி அளவிலான கடன் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலாண்டில், இது ரூ.2,238 கோடியாக உள்ளது.

ஜூன் 2019 வரையிலான காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,006.48 கோடியாக உள்ளது. இதே காலகட்டத்தில் வங்கியின் சில்லறை வணிகம் 11.17 சதவீத அளவிற்கும், குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவு 1.46 சதவீத அளவிற்கும் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் மொத்த செலவு கடந்தாண்டு இதே காலாண்டில் ரூ.4,194.68 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.4,178.32 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles