வெளியிடப்பட்ட நேரம்: 14-May-2019 , 11:55 AM

கடைசி தொடர்பு: 14-May-2019 , 11:55 AM

படுக்கையறை திரையரங்குகள்

IMG_20190514_113108

சுவிட்சர்லாந்தில் ஜோடியாக படுத்துக் கொண்டே திரைப்படம் பார்க்கும் வசதிக் கொண்ட திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. சுவிஸில் உள்ள Spreitenbach பகுதியில் தான் இத்தகைய உயர்ரக படுக்கையறை திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.இந்த படுக்கையறை திரையரங்கில் இரண்டு பேர் படுக்கும் படுக்கை கொண்ட 11படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சிக்கும் மெத்தை விரிப்பான்கள், தலையணிகள் மாற்றப்படுமென்று திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் போது, மக்களின் சுகாதாரம் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்கிறார். படம் பார்ப்பவர்கள் அப்படியே உறங்கி விடாமல் தடுப்பதை பொருட்டு படுக்கையில் மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த படுக்கையறை தியேட்டர்கள் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பரீட்சார்த்த முறையில் இந்த முயற்சிகள் அயல் நாடுகளில் நடைப்பெற்று பிரச்சனைகள் எதுவும் வரவில்லை எனவும், ஒழுக்கக்கேடான புகார்கள் இதுவரை எதுவும் பதிவாகவில்லை எனவும் திரையரங்கு சார்பில் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து திரைப்படம் பார்க்கும் மக்களை திரையரங்குங்கள் நோக்கி இழுக்கும் ஒரு சிறுமுயற்சி என தெரிவித்துள்ள உரிமையாளர்கள் சாதாரண மக்களுக்கான திரையரங்குகளையும் அதே காம்ப்ளக்ஸில் திறந்துள்ளனர்.

Related Articles