வெளியிடப்பட்ட நேரம்: 11-Aug-2020 , 09:51 AM

கடைசி தொடர்பு: 11-Aug-2020 , 09:51 AM

களமிறங்கிய பாரதிராஜா - மீராமிதுன் விவகாரம்

images (1)

நடிகர்கள் விஜய், சூர்யா குறித்து பேசிய மீரா மிதுனை தனது அறிக்கையின் மூலம் கடுமையாக கண்டித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் மீரா மிதுன். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் யாரையாவது தரக்குறைவாக பேசி வம்பிழுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மீரா மிதுன்.

தமிழ் நடிகர் நடிகைகள் அனைவரும் தன்னை பார்த்து காப்பியடிக்கிறார்கள் என கோலிவுட் டாப் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை கடுமையாக விமர்சித்தார். சினிமாக்காரர்கள் மட்டுமின்றி தமிழக அரசையும் கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் நெபோட்டிசம் இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.

கோலிவுட் மாஃபியாக்கள் என நடிகர் விஜய், சூர்யா, மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் குடும்பத்தையும் வம்பிழுத்து வருகிறார். தொடர்ந்து அவர்களை தரக்குறைவாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி சூர்யா, விஜய் ஆகியோரின் மனைவிகளையும் தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.

இதனால் மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் அளவிற்கு சென்று விட்டனர் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர் பெருமக்கள். அதோடு சமூக வலைதளங்களிலும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனாலும் அடங்காத மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்க்ததில் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை தரக்குறைவாக பேசி வருகின்றார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் இந்தப் பேச்சுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

அழகிய ஒவியத்தின் மீது சேறடிப்பது போல் மீரா மிதுன் வரம்பு மீறி பேசி வருகிறார் என்றும் திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக இதை கண்டிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்.

சூர்யா மற்றும் விஜய்யின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ள பாரதிராஜா உழைத்துப் போராடி எண்ணங்களை சீர் செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டு இந்த அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பாரதிராஜா இந்த அளவுக்கு ஆவேசமாக பேச மீரா மிதுன் வெளியிட்ட ஒரு குறிப்பிட்ட வீடியோதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒரு வீடியோவில் பாரதிராஜா விஜய்யை ரிஜெக்ட் செய்ததற்கு காரணம் விஜய்க்கு நடிக்க தெரியாது என்பதால் தான் என்று கூறி அவரையும் கோர்த்து விட்டார்.

அதோடு மற்றொரு வீடியோவில் தான் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்த போது, பாரதிராஜாவுக்கு அது பிடிக்கவில்லை என இயக்குநர் பாண்டிராஜ் தன்னிடம் கூறினார் என்று தெரிவித்திருந்தார். இப்படி அவரையும் விட்டு வைக்காமல் பேசி வீடியோ வெளியிட்டதால் தான் பாரதி ராஜா கோபத்திற்கு காரணம் என கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.

Related Articles