வெளியிடப்பட்ட நேரம்: 14-Oct-2018 , 01:27 PM

கடைசி தொடர்பு: 14-Oct-2018 , 01:51 PM

பாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா

14338585a7581b58b5a1b9d548fa6c7094c14e5

40 ஆண்டுகால அனுபவமுள்ள பத்திரிக்கையாளரும், மத்திய அமைச்சருமான எம்.ஜே அக்பர் சற்று முன் தனது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார்.

மத்திய வெளியுறவு துறையின் இணை அமைச்சராக இருப்பவர் எம். ஜே. அக்பர். தற்போது வெளிவரும் பாலியல் குற்றச்சாட்டுகளை சமாளிக்க முடியாமல் இந்த முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. பெண்கள் #MeToo டேக் மூலம் தங்களுக்கு நடந்த வன்முறை, பாலியல் விதிமீறல் நிகழ்வுகளை தற்போது சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். இது வரை 6 பெண்கள் எம்.ஜே. அக்பர் மீது குற்றம் சாட்டி இருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று இரவு 11 ஆக உயர்ந்தது. அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துக் கொண்டே இருப்பதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேட்டி ஒன்றில் பதில் அளிக்கையில் "புகார் கொடுத்தவர் யார்? அவர் பிண்ணனி என்ன? குற்றத்தின் பிண்ணனி என்ன? குற்றத்தின் உண்மை தன்மை என்ன? என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருந்தார். எந்த வித விசாரணையுமின்றி எம். ஜே. அக்பர் பதவி விலகி இருக்கிறார். வெளி நாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்து நாடு திரும்பியவர் மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- வினோ

Related Articles