வெளியிடப்பட்ட நேரம்: 25-Jun-2019 , 07:31 PM

கடைசி தொடர்பு: 25-Jun-2019 , 07:31 PM

சிதைய போகும் தமிழக மருத்துவதுறை

TN-Medical-council

ஜிப்மரில் JR க்கான இண்டர்வியூ வந்து இருந்தது. JR - junior Resident. எம்பிபிஎஸ் முடித்த பிறகு ஒரு வருடம் நாம இந்த JR பண்ணலாம். இது காண்ட்ராக்டர் வேலை தான். ஆனால் மத்திய அரசாங்கம் சம்பள விகிதம் கிடைக்கும்.

இதே நாம எம் டி முடிச்ச பிறகு போனா Senior Resident அதுக்கு மூன்று வருடங்கள் பணி செய்யலாம். அதுக்கு பிறகு வெளியே வந்திடனும். அப்புறம் அசிஸ்டென்ட் ப்ரோபெசர், அசோசியட் ப்ரோபெசர், ப்ரோபெசர் எல்லாம் நேரடி அப்பாயின்மெண்ட் தான். நம்ம வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, நம்ம ரிசர்ச் ஒர்க் பார்த்து இதெல்லாம் கொடுப்பாங்க.

அது மத்திய அரசு ஊழியர் பணியில் சேர்ந்து விடும். இங்க தமிழக அரசாங்கம் மாதிரி கிடையாது. 9-5 தான் டியூட்டி இருக்கும். மருத்துவர்கள் வெளியே ப்ராக்டிஸ் பண்ண முடியாது. அதுக்கு தனியா Non-Practice அலவன்ஸ் கிடைக்கும். இதனால தமிழக அரசாங்க மருத்துவர்களை விட இவங்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்கும்.

இதுல ஒரு வசதி, எந்த இடத்துக்கும் அலைய தேவை இல்லை. உள்ளேயே குவார்ட்ஸ் உண்டு. வேலை பார்க்க ஜூனியர் டாக்டர்கள் உண்டு. பணி பாதுகாப்பு உண்டு. இதனால ரிசர்ச் மற்றும் மற்ற வேலைகள் இங்க சிறப்பா நடைபெறும்.
ஏய்ம்ஸ், ஜிப்மர், சிஎம்சி போன்றவை எல்லாம் சிறப்பா நடைபெற இதுவும் ஒரு காரணம். இப்ப தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும் இதே கோரிக்கை தான் வைத்து இருக்காங்க.

தமிழக அரசாங்க மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த JR, SR போஸ்ட் எல்லாம் கிடையாது. அங்க PG student, Assistant Prof, associate இல்லை. நேரடியா professor மட்டும் தான். அதுவும் பத்து பேர் சேர்ந்து செய்ய வேண்டிய வேலையை ஒரு பிஜி யும் ஒரு assistant Prof சேர்ந்து முடிப்பாங்க. இங்க வேலை நேரம் காலை ஏழு மணியில் இருந்து மதியம் ரெண்டு மணி.

இதனால் மதியம் சாப்பிட போகும் போதே மருத்துவர்கள் எல்லாம் பாதி நேரத்தில் வெளியே போய்டுறாங்கன்னு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உண்மையில் இவங்க வேலைப்பளு அதிகம். இருக்கும் வேலைப் பளுவில் ரிசர்ச் வேலைகளை கண்டிப்பாக செய்ய முடியாது. ஆராய்ச்சிகள் செய்யனும்னா அதுக்கு என்று தனியா ஆட்கள் வேண்டும். டாக்குமெண்ட் பராமரிக்க, நோயாளிகள் வகைப்படுத்த, புள்ளி விவரங்கள் எடுக்க என்று வேலையை விட்டு விட்டு அதை கவனத்தில் கொள்ள முடியாது.

ஆராய்ச்சி பேப்பர்கள் தான் மருத்துவர்களின் தரத்தை உலக அளவில் நிர்ணயிக்கின்றன. தமிழக அரசாங்கத்தில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு அன்றாட வேலைப்பளு கவனிக்கவே முடியவில்லை. இதனால் இந்திய அரங்கில் உலக அளவில் எவ்வளவு வேலை செய்தாலும் யாராலும், எந்தக் கல்லூரியாலும் கோலோச்ச முடியவில்லை.

இதற்கு முன்பு எல்லாம் அரசாங்க மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு முதுநிலை பட்டப் படிப்பில் வழங்கி இருந்தது. இதனால் மருத்துவர்கள் அரசாங்க பணியில் வேலை செய்ய ஆர்வம் காட்டினார்கள். படிப்பு முடிந்த பிறகு ஓய்வு பெறும் வரை பணியில் இருக்க வேண்டும் என்ற உறுதிமொழி வாங்கப்பட்டது. இதனால் எல்லா மருத்துவக் கல்லூரியில் சிறப்பு மருத்துவ வசதி திறன்பட கிடைத்தது.

தற்போது நீட் வந்த பிறகு இந்த ஒதுக்கீடு போய் விட்டது. தற்போது பணியில் உள்ள மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த இடங்கள் யாரால் நிரப்பப்படும் என்பது கண்கூடு.

10-A1 அடிப்படையில் தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் வேலைக்குச் சேரலாம் என்று இவர்கள் புதிதாக வகுத்து உள்ள விதியின்படி நீட்டில் உள்ள வரும் வட இந்திய மாணவர்கள் பிஜி முடித்து இருப்பதை காரணம் காட்டி பணியில் அமரும் அத்தனை சாத்தியக் கூறுகள் நாம் திறந்து விட்டோம்.

இதற்கு பிறகு தமிழக மருத்துவ துறை என்ன ஆகப் போகிறது? என்பதை எளிதாக பிஎஸ்என்எல்க்கு நேர்ந்த கதி என்று சொல்லுவதன் மூலம் விளக்கி விட முடியும்.

தேவையான செயல்களை விட்டு விட்டு, இயற்கை பிரசவம், மாற்று வைத்தியம் என்று மக்களை திசை திருப்பும் வேலைகளை இந்த அரசாங்கம் நன்றாக பார்த்துக் கொண்டு உள்ளது.

-Dr. M.Radha M.D., D.M

Related Articles