வெளியிடப்பட்ட நேரம்: 16-Oct-2018 , 02:44 AM

கடைசி தொடர்பு: 16-Oct-2018 , 02:44 AM

கிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்

images (7)

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகளுக்கு சர்வதேச புள்ளிகளின் அடைப்படையிலான பட்டியலை வெளியிட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் சி.ஈ.ஓ. டேவிட் ரிச்சர்ட்சன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

சர்வதேச அளவில் இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணிகள் முன்னிலை பெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் 6607 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணி முதல் இடத்திலும், 6492 புள்ளிகள் பெற்று இந்திய அணி இரண்டாம் இடத்திலும், 4635 புள்ளிகள் பெற்று நியூஸிலாந்து அணி மூன்றாம் இடத்திலும், 4602 புள்ளிகள் பெற்று தென்னாப்பிரிக்க அணி நான்காம் இடத்திலும், 4145 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் அணி ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.

ஒருநாள் போட்டிகான வீரர்களின் பட்டியலில் 884 புள்ளிகள் பெற்று விராட் கோலி முதல் இடத்திலும், 842 புள்ளிகள் பெற்று ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட் 818 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் 803 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திலும், இந்திய வீரர் ஷிகர் தவான் 802 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் வரிசையில், இந்தியாவின் பும்ரா 797 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷீத்கான் 788 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் 700 புள்ளிகள் பெற்று மூன்றவதாகவும், நியூஸிலாந்து அணியின் டிராண்ட் பெளல்ட் 699 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேஸ்ல்வுட் 696 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்திலும் இருக்கிறார்கள்.

டெஸ்ட் தொடருக்கான ரேட்டிங் பொறுத்தவரையில் இந்திய அணி முதலிடத்திலும், வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் வீராட் கோலியும் முதலிடத்தில் உள்ளார்கள். மற்ற இந்திய வீரர்களும் புள்ளிக் கணக்கில் கணிசமான எண் உயர்வுகளை பெற்று முன்னேறி உள்ளனர்.

சர்வதேச அளவில் முதல் முறையாக மகளிர் அணிக்கான புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்திய மகளிர் அணி ஐந்தாம் இடத்தில் உள்ளது. மகளிர் அணிக்கான தரவரிசை பட்டியலில் இடம் பெற நான்கு ஆண்டுகளில் ஆறு போட்டிகளில் கலந்துக் கொண்டு இருக்க வேண்டும். மகளிர் அணிக்கான ஒரு நாள் தர வரிசை பட்டியல் தனியாக உள்ளது எனவும் அதில் பத்து நாடுகள் உள்ளன எனவும் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார். விரைவில் மகளிருக்கான T20 போட்டிகள் நடத்தப்படும் என்றும் டேவிட் ரிச்சர்ட்சன் நேற்றைய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

- கிஷோர்

Related Articles