வெளியிடப்பட்ட நேரம்: 18-Jul-2019 , 01:46 PM

கடைசி தொடர்பு: 18-Jul-2019 , 01:46 PM

கர்நாடக அரசு தப்புமா?

Karnataka

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி இன்று பெரிய அக்னி பரிட்சையை எதிர்கொள்ள உள்ளது. அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகியுள்ள நிலையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் குமாரசாமி.

கர்நாடக சட்டசபையின் மொத்த எம்எல்ஏக்கள் பலம் 224. தற்போதைய நிலையில், காங்கிரசின் 13 எம்எல்ஏக்கள், மஜதவின் 3 எம்எல்ஏக்கள் என 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் சட்டசபை வரப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

எனவே, சட்டசபையின் பலம், 208 என குறையும். பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் எண் 105 என்ற அளவுக்கு குறையும். காங்கிரஸ் மஜத கூட்டணியின் பலம் 100 என்ற அளவில் இருக்கிறது. பாஜகவிற்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால், கூட்டணி அரசு கலையும். ஒருவேளை கடைசி நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலர் திரும்பி வந்தால், அரசு தப்பலாம். எனவே இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி கலையுமா, தப்புமா என்பது தொடர்பாக நாடே பரப்பரப்பாக எதிர் நோக்கியுள்ளது.

கர்னாடக விவகாரம் குறித்து ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது, விப் அதிகாரத்தை பறித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானது இல்லை என்றார். அரசியல் சாசனத்தில் 10வது அட்டவணையில் விப் அதிகாரம் வழங்கப்பட்டது. இப்போது பறிக்கப்பட்டுள்ளது. விப் பற்றி உச்சநீதிமன்றத்தில் யாருமே பிரச்சினை கிளப்பாத போதும் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார் ஹெச்.கே.பாட்டீல்.

Related Articles