வெளியிடப்பட்ட நேரம்: 06-Oct-2021 , 01:10 PM

கடைசி தொடர்பு: 06-Oct-2021 , 01:10 PM

வாடிக்கையாளர் பாதுகாப்பே முக்கியம்

mark zucker

'‛லாபத்துக்காக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதாக எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தர்க்கரீதியானதல்ல'' என, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்து உள்ளார். மார்க் ஸ்க்கர்பர்க் தனது பேஸ்புக் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தை தன் பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது:

பேஸ்புக் முடக்கத்தை நாம் இதுவரை சந்தித்தது இல்லை. இது நம் தொழில்நுட்பப் பிரச்சனையையும் தாண்டி, நமது சேவை மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் புரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகக் கருத வேண்டும். நமக்கு லாபம் சரிந்திருக்கலாம். நமது வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களுக்கு மாறியிருக்கலாம். ஆனால், நமது பேஸ்புக்கை நம்பி எத்தனை மக்கள் தங்களின் நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது? எத்தனை பேரின் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது? என்பதே முக்கியம்.

நமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே நமக்குப் பிரதானம். அதைப்போல் அவர்களின் மனநலன் மீதும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். லாபத்துக்காக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு சற்றும் தர்க்கரீதியானதல்ல இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Articles