வெளியிடப்பட்ட நேரம்: 09-May-2019 , 07:00 AM

கடைசி தொடர்பு: 09-May-2019 , 07:00 AM

தினப்பலன் 09/05/2019

images (14)

☸மேஷம்:-

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆகாய மார்க்க பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆன்மீக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதுவிதமான இடத்திற்கு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த தனவரவு மகிழ்ச்சி அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

☸ரிஷபம்:-

குடும்ப நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பூமி விருத்திக்கான கடனுதவிகள் கிடைக்கும். தொழில் திறமையால் மேன்மையும், பாராட்டுகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். தைரியத்துடன் எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : எதிர்ப்புகள் குறையும்.

☸மிதுனம்:-

குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் குறையும். கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : கலகலப்பான நாள்.
திருவாதிரை : கவலைகள் குறையும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.

☸கடகம்:-

உத்தியோகஸ்தரர்கள் நீண்ட நாட்களாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். பணியில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
ஆயில்யம் : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

☸சிம்மம்:-

கண் சம்பந்தமான உபாதைகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கையில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : உபாதைகள் குறையும்.
பூரம் : கேளிக்கையில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.
உத்திரம் : மாற்றமான நாள்.

☸கன்னி:-

பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எண்ணங்கள் தெளிவாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
சித்திரை : சாதகமான சூழல் அமையும்.

☸துலாம்:-

தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்க பணியில் எதிர்பார்த்த ஆதரவான சூழல் உண்டாகும். வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
☸விருச்சகம்:-

தந்தை வழி உறவினர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். செய்யும் செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பிறருக்கு உதவுதலில் சிந்தித்துச் செயல்படவும். மனச்சோர்வு உண்டாகும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : கனிவு வேண்டும்.
அனுஷம் : செயலில் கவனம் தேவை.
கேட்டை : சிந்தித்துச் செயல்படவும்.

☸தனுசு:-

செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : பதற்றமின்றி செயல்படவும்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

☸மகரம்:-

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

உத்திராடம் : இன்பமான நாள்.
திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
☸கும்பம்:-

பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் உயரும். நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் உயரும்.
சதயம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

☸மீனம்:-

வியாபாரத்தில் நீங்கள் கையாளும் புதிய யுக்திகளால் இலாபம் அதிகரிக்கும். பொதுப் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு கூடும். புத்திரர்களின் செயல்பாடுகள் பெருமையை தரும். தொழிலில் செல்வாக்கு உயரும். பணியில் அங்கீகாரம் கிடைக்கும். எடுத்த வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
ரேவதி : செல்வாக்கு உயரும்.

-மணியய்யர்

Related Articles