வெளியிடப்பட்ட நேரம்: 01-Jun-2019 , 07:11 AM

கடைசி தொடர்பு: 01-Jun-2019 , 07:11 AM

தினபலன் 01/06/2019

images (14)

☸மேஷம்:-

உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : உறவுநிலை மேம்படும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

☸ரிஷபம்:-

நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடைகளால் சில விரயம் ஏற்படும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
மிருகசீரிடம் : இலாபம் அதிகரிக்கும்.

☸மிதுனம்:-

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
திருவாதிரை : தேடல் உருவாகும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

☸கடகம்:-

விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். இறை வழிபாட்டை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். பணிகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
ஆயில்யம் : நிதானம் தேவை.

☸சிம்மம்:-

கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திரம் : சுபமான நாள்.

☸கன்னி:-

வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : எச்சரிக்கை வேண்டும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

☸துலாம்:-

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். செய்யும் பணிகளில் பிறரின் விமர்சனங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : பேச்சில் கவனம் தேவை.
சுவாதி : வாதங்களை தவிர்ப்பது நல்லது.
விசாகம் : விமர்சனங்கள் உண்டாகும்.

☸விருச்சகம்:-

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.

☸தனுசு:-

பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூராடம் : தனித்திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : உறவு மேம்படும்.

☸மகரம்:-

வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : நன்மை உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.
அவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

☸கும்பம்:-

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன்கள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : நற்பலன்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

☸மீனம்:-

மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். சகோதரர்களிடம் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : சுப விரயம் உண்டாகும்.
ரேவதி : கவனத்துடன் இருக்கவும்.

Related Articles